• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

என்னாது அனிதாவுக்கு கல்யாணமாய்ருச்சா.. மன்னிச்சூ நண்பர்களே!

|
  News Anchor Anitha Sampath Latest Photos

  சென்னை: டிவி உலகை மட்டுமல்ல திரையுலகையும் சேர்த்துக் கவர்ந்தவர் சின்னத் திரை அனிதா சம்பத். டிவி வாசிப்பாளராக மட்டுமல்லாமல் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் வலம் வந்த இவர் நிறைய ரசிகர்களை குறுகிய காலத்தில் குவித்து வைத்த பெருமைக்குரியவர்.

  வனிதா ஆர்மிகளும், லாஸ்லியா ஆர்மிகளும் அடித்து மோதிக் கொண்டிருந்த காலகட்டத்திற்கு முன்பே, ஓவியா ஆர்மி அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட தன் சத்துக்கு ஒரு ஆர்மியை கட்டியாண்ட பரம்பரையைச் சேர்ந்தவர். சும்மா சொல்லக் கூடாது.. அனிதா ஆர்மியும் ஓவர்டைம் பார்த்து வெளுத்து வாங்கியது வரலாறு.

  இப்போது என்ன மேட்டர் என்றால் அனிதாவுக்கு கல்யாணமாகி விட்டது.. நெஞ்சடைக்காத வண்ணம் ரிலாக்ஸ்டாக தொடர்ந்து படியுங்கள். அவருக்கு 25ம் தேதியே கல்யாணமாய்ருச்சாம். இதை பலர் இதுவரை நம்பவே இல்லை. ஆனா எனக்கு கல்யாணமாய்ருச்சுங்க என்று அனிதாவே வந்து இன்ஸ்டாகிராமில் சொல்லும் அளவுக்கு நிலைமை போய் விட்டது.

  தமிழர்களின் வரலாற்றை பறைசாற்ற திட்டம்.. கடல் அகழாய்வில் களமிறங்கும் தொல்லியல் துறை.. அதிரடி முடிவு!

  மன்னிச்சிருங்கப்பா

  அதுக்காக அவர் பெரிய பெரிய மன்னிப்பெல்லாம் கூட கேட்டு நம்முடைய மனசை உலுக்கி எடுத்துள்ளார். அனிதாவே இறங்கி வந்து மன்னிப்பு கேட்டு மருகி நிற்பதெல்லாம் எந்த ஆர்மியும் இதுவரை கண்டிராத வரலாற்று பேருண்மை என்று சொல்வதைத் தவிர வேறு பெரிய வார்த்தை எதுவும் மண்டையில் தோண மாட்டேங்குது.

  மன்னிப்பு கேட்டு மடல்

  மன்னிப்பு கேட்டு மடல்

  இப்ப அனிதாவிடம் வருவோம்.. அதாவது அவரோட இன்ஸ்டாகிராம் பேஜுக்குப் போவோம்.. அதுல என்ன எழுதியிருக்கார்னா... முதலில் பெரிய பெரிய பெரிய மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் இன்ஸ்டா நண்பர்களுக்கு.. 25ஆம் தேதி திருமணம் முடிந்தது.. 22ஆம் தேதியே இன்ஸ்டாவில் பதிவிட்டேன்.. இன்ஸ்டாவில் 26ஆம் தேதி வரை ஏதோ காரணத்தால் block செய்யப்பட்டு இருந்தது.. எனவே அது வரை என் பதிவு போஸ்ட் செய்யப்பட முடியாமல் போய்விட்டது.

  மன்னிச்சூ

  மன்னிச்சூ

  Fb,twitter-ல் நான் active இல்லை..இன்ஸ்டாவும் வேலை செய்யவில்லை என்பதால் சொல்ல முடியாமல் போய்விட்டது.. மன்னிச்சூ.. "அனிதா சம்பத் திடீர் திருமணம்" என்றெல்லாம் YouTube channelகளில் டப்ஸா விட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.. அதெல்லாம் ஒன்றுமே இல்லை.. 3 வருட காதல்..பெரியவர்கள் சம்மதத்தோடு நடந்த proper திருமணம் தான்..

  செலவெல்லாம் எதுக்குபா

  செலவெல்லாம் எதுக்குபா

  திருமணத்திற்கு தாம் தூம் என செலவு செய்வதில் எனக்கு விருப்பம் இல்லை..எனவே மிக மிக எளிமையான முறையில் குடும்பத்தார் மற்றும் மிகச்சில நண்பர்களை மட்டும் அழைத்திருந்தோம்.. முன்கூட்டியே திருமணம் பற்றி சொல்லிவிட்டால் YouTube channelsல் வந்துவிடும்.. பின் நான் அழைக்காதவர்கள் தவறாக எடுத்துக்கொள்ள கூடாது என்றுதான்.. கடைசியில் post செய்தேன்.. insta 26th வரை blockedல் இருந்ததால் இன்று தான் பதிவிட முடிந்தது.... என் சார்பாகவும் என் வாழ்வினை சார்பாகவும் Instaவில் வாழ்த்திய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.. Thank u guys..!!! One more new entry into our insta family.. Mr.praba @itsme_pg.

  ம்ம்.. நல்லா இரு ஆத்தா.. அப்படின்னு வாழ்த்துவோமா பிரண்ட்ச்!

   
   
   
  English summary
  TV news reader Anitha Sampath has declared her marriage with an apology in her Instagram page.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
  X