சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பிஇ முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு தொடங்கும் தேதி.. அண்ணா பல்கலை அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: பி இ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் கொரோனா தளர்வுகளை அறிவித்ததுடன், பள்ளி, கல்லூரிகள் நவம்பர் 16முதல் செயல்பட அனுமதி அளித்தது.

9 ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியருக்காக வரும் நவம்பர் 16 முதல் பள்ளிகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதேபோல் அனைத்து கல்லூரிகளையும் நவம்பர் 16 முதல் திறக்கவும் அனுமதி அளித்துள்ளது.

இதன் அடிப்படையில் : பி இ முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23 முதல் வகுப்புகள் தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

ரஜினிக்கு எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு போய் கட்சி தொடங்கலாமே.. சீமான் கடும் விமர்சனம் ரஜினிக்கு எந்த நாட்டில் ஆதரவு இருக்கோ அங்கு போய் கட்சி தொடங்கலாமே.. சீமான் கடும் விமர்சனம்

பிஇ படிப்பு கலாந்தாய்வு

பிஇ படிப்பு கலாந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வு கடந்த வாரம் முடிந்தது. 71 ஆயிரத்து 195 இடங்களே நிரம்பி உள்ளது. தமிழகத்தில் 461 பொறியியல் கல்லூரிகளில் பி.இ., பி,டெக். படிப்புகளில் மொத்தம் ஒரு லட்சத்து 63,154 இடங்கள் உள்ளன.

 எவ்வளவு இடங்கள்

எவ்வளவு இடங்கள்

இதற்கான மாணவா் சோ்க்கை கலந்தாய்வு கடந்த அக்.1-ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 28ம் தேதி வரை நடந்தது. இதில் 71,195 இடங்கள் நிரம்பியுள்ளன. 20 கல்லூரிகளில் ஒருவா்கூட சேரவில்லை. 61 கல்லூரிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவா்கள் சோ்ந்திருக்கிறார்கள்.

வரவேற்பு இல்லை

வரவேற்பு இல்லை

அண்ணா பல்கலை. வளாக கல்லூரிகள் உள்பட 13 கல்லூரிகளில் மட்டுமே 100 சதவீத மாணவா் சோ்க்கை நடந்து முடிந்துள்ளது.. விரைவில் காலியிடங்களுக்கு துணைக் கலந்தாய்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எப்போதுமே மாணவா்களிடையே வரவேற்பு அதிகமாக இருக்கும் மெக்கானிக்கல், சிவில் படிப்புகளில் மாணவா் சோ்க்கை கணிசமாக குறைதுள்ளது,

தீபாவளி முடிந்ததும் வகுப்புகள்

தீபாவளி முடிந்ததும் வகுப்புகள்

இந்த ஆண்டு இசிஇ, கம்ப்யூட்டா் சயின்ஸ், ஐ.டி. ஆகிய பாடப்பிரிவுகளை மாணவா்கள் அதிகம் விரும்பி இருக்கிறார்கள். அதிக வேலை வாய்ப்பும், வருமானமும் முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது. பொறியியல் கலந்தாய்வு முடிந்துவிட்டதால் வகுப்புகள் தீபாவளி முடிந்த உடன் வகுப்புகள் தொடங்க போகின்றன. ஏற்கனவே கல்லூரிகள் தேர்வு உள்ளிட்டவை குறித்து நிலையான வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

English summary
Anna University has announced that classes for BE first year students will start from November 23. The Tamil Nadu government yesterday announced corona relaxations and allowed schools and colleges to operate from November 16.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X