சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணா பல்கலை... ஆன் லைன் தேர்வு விதிமுறைகள்... கீ போர்டு இல்லை... மவுசு மட்டும்தான்!!

Google Oneindia Tamil News

சென்னை: ஆன் லைன் தேர்வு எவ்வாறு நடைபெறும் என்பது குறித்த நடைமுறை விதிகளை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. இதன்படி, 30% மதிப்பெண் தியரிகளுக்கும், 50% மதிப்பெண் சிஜிபிஏவுக்கும், 20% இன்டர்னல் மதிப்பெண் ஆகவும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், ''தேர்வு ஏ, பி என இரு பிரிவுகளாக நடத்தப்படும். இதில் ஏ பிரிவில் 15 ஒரு மதிப்பெண் கேள்விகளும், 25 இரண்டு மதிப்பெண் கேள்விகளும் கேட்கப்படும்.

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாகின்றனர் - நீதிபதிகள் வேதனை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு குழந்தைகளும் அடிமையாகின்றனர் - நீதிபதிகள் வேதனை

லாக் இன்

லாக் இன்

தேர்வு எழுத 60 நிமிடங்கள் ஒதுக்கப்படும். கொடுக்கப்பட்டு இருக்கும் நேரத்திற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக லாக் இன் செய்து கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பத்து நிமிடங்களுக்குப் பின்னர் லாக் இன் செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மாதிரி தேர்வு

மாதிரி தேர்வு

acoe.annauniv.edu இணையத்தில் இருந்து மாணவர்கள் தங்களது பாஸ்வேர்டை எடுத்துக் கொள்ளலாம். இதுதான் இரண்டு முறையிலான அதாவது மாதிரி தேர்வு மற்றும் இறுதித் தேர்வுகளுக்கும் இருக்கும். இந்தத் தகவல்கள் அனைத்தும் மாணவர்களுக்கும் அவர்களது இ மெயில் வாயிலாக பகிரப்படும்.

கல்லூரி ஐடி

கல்லூரி ஐடி

மாணவர்கள் தங்களது புகைப்படத்தையும், ஏதாவது அரசு அடையாள அட்டையையும் சமர்பிக்க வேண்டும். கல்லூரி அடையாள அட்டையும் அவசியம் பகிர வேண்டும்.

மவுஸ் அனுமதி

மவுஸ் அனுமதி

தேர்வின்போது மாணவர்கள் கீ போர்டு பயன்படுத்த அனுமதிக்கபட மாட்டார்கள். மவுஸ் துணையுடன் பதில்களை மட்டும் தேர்வு செய்ய வேண்டும். மைக்ரோ போன் மற்றும் கேமரா ஆன் செய்ய வேண்டும்.

கண்காணிப்பாளர்கள்

கண்காணிப்பாளர்கள்

ஆர்டிபிசியல் இன்டலிஜென்ஸ் முறையில் மாணவர்களின் முகம், கண் மற்றும் அவர்களது நடவடிக்கைகளும் கண்காணிக்கப்படும். தேர்வு கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்படுவார்கள்'' என்று தெரிவிக்கபப்த்டுள்ளது.

மின் துண்டிப்பு

மின் துண்டிப்பு

மின் துண்டிப்பு, நெட்வொர்க் சிக்கல் இருந்தால், மீண்டும் மூன்று நிமிடங்களுக்குள் இணைந்து கொள்ளலாம். அதேசமயம், கம்ப்யூட்டர் செயலிழப்புக்கு பொறுப்பு ஏற்கப்பட மாட்டாது. இந்த மாதிரியான சந்தர்பங்களுக்கு கூடுதலாக மாணவர்களுக்கு 15 நிமிடங்கள் அனுமதிக்கப்படும். திரையில் உள்ள ரிசோர்ஸ் பட்டன் மூலம் கால்குலேட்டரை அணுகலாம். ஸ்கிரீன் ஷாட்கள் அல்லது ஆடியோ பதிவுகளை எடுப்பது முறைகேடாக கருதப்படும். என்றும் எச்சரித்துள்ளது.

29 ஆம் தேதி வரை

29 ஆம் தேதி வரை

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வுகளுக்கான தேதியை அண்ணா பல்கலைக்கழகம் அண்மையில் அறிவித்தது. அதன்படி, இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு வருகிற 22 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என்றும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

English summary
Anna University On Line Exam: final-semester guidelines issued
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X