சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தி திணிப்பு சூழலில் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்த #அண்ணா111

Google Oneindia Tamil News

Recommended Video

    Arignar Anna Birthday | அண்ணா யார்...? மக்கள் மனதை எப்படி வென்றார்...?

    சென்னை: தமிழகத்தில் இந்தி திணிக்கப்படும் சூழலில் ட்விட்டர் டிரெண்டிங்கில் அண்ணா111 என்ற ஹேஷ்டேக் முதலிடம் பிடித்துள்ளது,

    தமிழகத்தில் போராட்ட வடிவங்களில் ட்விட்டர் டிரெண்டிங்கும் ஒன்றாகிவிட்டது. பிரதமர் மோடிக்கு கருப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்ட போது GOBACK MODI ஹேஷ்டேக் சர்வதேச அளவில் டிரெண்டிங் ஆனது.

    #அண்ணா111 #HBDAnna111 Trending in Twitter

    அதேபோல் இந்திக்கு எதிரான #stophindiimposition ஹேஷ்டேக்கும் இந்திய அளவில் டிரெண்டிங் ஆனது. இந்தி பேசாத பிற மாநிலத்தவரும் மிக அதிக அளவில் இந்த ஹேஷ்டேக்கை டிரெண்டிங் செய்தனர்.

    மொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..!மொழியைக் காக்க இன்றும் கொதிக்கும் தமிழகம்.. பேரறிஞர் அண்ணா அப்படி என்ன பேசினார்..!

    தற்போது ஒரே நாடு ஒரே மொழி கோஷம் முன்வைக்கப்படுகிறது. ஒரே நாடு ஒரே மொழி இந்தி என்கிற கருத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தது முதல் மீண்டும் #stophindiimposition என்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங்காகி வருகின்றன.

    இந்நிலையில் இன்று பேரறிஞர் அண்ணாவின் 111-வது பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி அண்ணா111 என்ற ஹேஷ்டேக் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.

    பல்வேறு அரசியல் கட்சியினரும் இதில் பதிவுகளைப் போட்டு வருகின்றனர். திமுக ஐடி விங், நான் திராவிடன் என்பதில் பெருமைப்படுகிறேன் என்கிற அண்ணாவின் வாசகம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பதிவிட்டுள்ளது.

    அதேபோல் இந்தி ஏன் வேண்டாம் என்ற அண்ணாவின் ராஜ்யசபா உரையும் ஆடியோ வடிவில் இந்த ஹேஷ்டேக்கில் பகிரப்பட்டுள்ளது. மேலும் அண்ணா தொடர்பான அரிய படங்களும் இந்த ஹேஷ்டேக்கில் ஷேர் செய்யப்பட்டுள்ளன.

    English summary
    #அண்ணா111 #HBDAnna111 are Trending in Twitter.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X