சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காயத்ரி ரகுராம் இருக்கட்டும்.. நேராக ராகுலை அட்டாக் செய்த அண்ணாமலை! சாவர்க்கரை இந்திரா புகழ்ந்தாராம்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு பாஜகவில் நிலவி வரும் உள்கட்சி குழப்பங்களுக்கு மத்தியில் நேராக காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியையும் அவரது ஒற்றுமை யாத்திரையையும் கடுமையாக விமர்சித்து உள்ளார் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "கடவுள் சக்தி தேவியை இழிவுபடுத்தும் உரையாடலில் கலந்துகொண்டது முதல் பெரும்பான்மை மக்களை திருப்திபடுத்த நம்பிக்கையற்ற முயற்சி எடுத்தது வரை, ராகுல் காந்தியின் ஒற்றுமை யாத்திரையில் சன்ஸ்க்ரீன் பற்றி அதிகம் உள்ளது. சமூகம் மற்றும் சேவை பற்றி குறைவாகவே இருக்கிறது.

சில நூறு பேர்கள் முன்னிலை கன்னியாகுமரியில் தொடங்கிய யாத்திரை, சர்ச்சைக்குரிய பாதிரியார் ஜார்ஜ் பொன்னையாவை சந்தித்தபோது உச்சமடைந்தது. அவர்களின் அவதூறு பிரச்சாரம் வெளியான பிறகு ராகுல் காந்தி நடத்தும் ஒற்றுமை யாத்திரையின் நோக்கம் தெளிவாக தெரிந்துவிட்டது.

கல்வான் விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து சீனில் வந்த நடிகை நக்மா.. பாஜக மீது கடும் தாக்கு கல்வான் விவகாரம்.. நடிகர் பிரகாஷ் ராஜை தொடர்ந்து சீனில் வந்த நடிகை நக்மா.. பாஜக மீது கடும் தாக்கு

ஒற்றுமை யாத்திரை

ஒற்றுமை யாத்திரை

குளிர்சாதன வசதியுடன் கூடிய 60 கேரவேன்கள், இறக்குமதி செய்யப்பட்ட டி சர்டுகள் நிரம்பிய அலமாரிகளுடன் வீட்டில் இருப்பதைபோன்ற உணர்வில் ராகுல் காந்தி இருக்கிறார். இனிமையான வானிலை காரணமாக கேரளாவிலேயே தங்க முடிவு செய்ததுடன் பசு கன்றை கொன்ற காங்கிரஸ் இணைஞரணி தலைவர் ரிஜில் மக்குட்டியை தன்னோடு சேர்த்துக்கொண்டார்.

தவறாக தகவல்

தவறாக தகவல்

ஷூ லேஸ்களை கட்டுவது, 15 நிமிடங்கள் யாத்திரையில் பங்கேற்க நடிகர்களுக்கு பணம் கொடுத்தது, 151 ரயில்கள் தனியார்மயமாக்கப்படுவதாக தவறான செய்தியை பரப்பியது, தண்ணீருக்கு குஜராத் தவிக்க வேண்டும் என்று விரும்பிய நபருடன் நடைபயணம் சென்றது என அனைத்தையும் ராகுல் காந்தி செய்துவிட்டார்.

 சாவர்க்கர்

சாவர்க்கர்

இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் வரலாறு பற்றி குறைவான புரிதலை கொண்டவர் ராகுல் காந்தி. சுதந்திர போராட்ட வீரர் ஸ்ரீ வீர சாவர்க்கரை பற்றிய அவரது கருத்து அவரது பாட்டி இந்திரா காந்தியை அவமானப்படுத்துவதாகவும். இந்திரா காந்தி சாவர்க்கரை புகழ்ந்து பேசியவர்.

பாகிஸ்தான் ஜிந்தாபாத்

பாகிஸ்தான் ஜிந்தாபாத்

ஒற்றுமை யாத்திரையில் ராகுல் காந்தியும், காங்கிரஸும் எவ்வளவு முதலீடு செய்து இருக்கிறார்கள் என்பதை தவறான தேசிய கீதம் ஒலிக்கப்பட்டதில் இருந்தே தெரிகிறது. அதன் பின்னர் அவரது யாத்திரையில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டதும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்.

ஆர்.எஸ்.எஸ்.

வரலாற்று சிறப்பு மிக்க பழங்குடியின வீரர்களான தாண்டியா மாமா 1889 ஆம் ஆண்டிலும், 1900 வது ஆண்டு பிர்சா முண்டாவும் தூக்கிலிடப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்புதான் காரணம் என்று ராகுல் காந்தி குற்றம்சாட்டி வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு உருவாக்கப்பட்டதே 1925 ஆம் ஆண்டில்தான் என்பதை குருட்டு வெறுப்பால் மாற்றிட முடியாது." என்று பதிவிட்டு உள்ளார்.

மத்திய பிரதேசத்தில் ராகுல்

மத்திய பிரதேசத்தில் ராகுல்

பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக ஒற்றுமையை ஏற்படுத்த கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் ஒற்றுமை யாத்திரையை தொடங்கினார் ராகுல் காந்தி. தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் நடைபயணம் மேற்கொண்ட அவர், 79 வது நாளான இன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.

சாவர்க்கரின் மன்னிப்பு கடிதம்

சாவர்க்கரின் மன்னிப்பு கடிதம்

கடந்த சில வாரங்கள் முன்பாக இந்த யாத்திரைக்கு மத்தியில், பழங்குடியின தலைவர் பிர்ஸா முண்டாவின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற நிக்ழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், "அந்தமான் சிறையில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு மன்னிப்பு கடிதம் எழுதினார் சாவர்க்கர். தன்னை விடுவிக்குமாறு அவர் மன்றாடினார். பிரிட்டிஷ் ஆட்சியாளர்களிடம் ஓய்வூதியம் வாங்கினார். விடுதலைக்கு பின் பிரிட்டிஷ் படைகளில் சேர்ந்தார்." என்று விமர்சித்தார்.

English summary
Amid the internal chaos in the Tamil Nadu BJP, state BJP president Annamalai has directly criticized Congress MP Rahul Gandhi and his unity yatra.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X