சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அடுத்தாண்டு எப்போ துவங்குது 12 மற்றும் 10-ம் வகுப்பு பொதுதேர்வு.? அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறும் 10, 11, 12-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்த அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

அதன்படி 12-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி துவங்கி மார்ச் 24-ம் தேதி முடிகிறது. மார்ச்2-ம் தேதி மொழிப்பாடமும், மார்ச் 5-ம் தேதி ஆங்கில பாடத்தேர்வும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 9-ம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், ஊட்டசத்து, விவசாய அறிவியல், நர்சிங் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.

Announcement of the dates of 10th and 12th public exams in Tamil Nadu

மார்ச் 12-ம் தேதி ஆங்கில தொடர்பியல், இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், புள்ளியியல் தேர்வுகள் நடைபெறும். மார்ச் 16-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம், கணினி தொழில்நுட்ப தேர்வுகள் நடைபெறும்.

மார்ச் 20-ம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், தொழிற்கல்வி பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெற உள்ளது. மார்ச் 24-ம் தேதி வேதியியல், நிலவியல், கணக்கு பதிவியில் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 24-ம் தேதி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்.

அதே போல 2020-ம் ஆண்டு மார்ச் 17-ம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மார்ச் 17-ம் தேதி மொழிப்பாடம் முதல் தாள், மார்ச் 19ம் தேதி மொழிப்பாடம் இரண்டாம் தாள், மார்ச் 21 விருப்ப மொழி பாட தேர்வு, மார்ச் 27 ஆங்கிலம் முதல் தாள், மார்ச் 30 ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

ஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..! ஒரு பிரச்சினையும் இல்லை.. புகாரும் இல்லை.. நீட்டாக ஏற்று கொள்ளப்பட்ட தீபலட்சுமி வேட்புமனு..!

தொடர்ந்து ஏப்ரல் 12 கணிதம், ஏப்ரல் 7 அறிவியல், மற்றும் ஏப்ரல் 9 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மே 4-ம் தேதி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும்

11-ம் வகுப்பு பொதுதேர்வுகள் மார்ச் 4-ம் தேதி தொடங்கி மார்ச் 26-ம் தேதி முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மே 14-ம் தேதி இந்த தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Public exams schedule for the 10th, 11th and 12th grades of Tamil Nadu has been released today. This table is published by the Government Examinations Directorate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X