சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து.. தமிழக அரசு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 15 நாட்கள் ஈட்டிய விடுப்பும், இரண்டு வருடங்களுக்கு 30 நாட்களும் ஈட்டிய விடுப்பு வழங்கப்படுகிறது.

Annual leave salary cancelled for govt staffs and teachers in Tamil Nadu

இந்நிலையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ஓராண்டுக்கு நிறுத்தி வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த ஓராண்டில் ஈட்டிய விடுப்பு ஊதியம் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாது.

ஏற்கனவே ஈட்டிய விடுப்பாக அளிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களின் பரிசீலனைகளும் நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

திருச்சியில் ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்திருச்சியில் ஆவின் பால் பொருள்களை விற்பனை செய்யும் முகவராக விரும்புவோர் விண்ணப்பிக்கலாம்

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.இதன் காரணமாக நிதி தேவை அதிகரித்துள்ளது. ஆனால் பல்வேறு பணிகளுக்கு தேவையான நிதியும் குறைவான அளவே இதுவரை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதன் காரணமாக நிதி தட்டுப்பாடு அதிகரித்துவருவதால் தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு சம்பளத்தை அரசு ரத்து செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

English summary
tamailnadu goverment govt staffs and teachers Annual leave salary cancelled next one year
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X