சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வடசென்னையில் இரவு நேரத்தில் அதிர்ச்சி.. வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகள்.. கொரோனா பரப்ப சதி?

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் இரவு நேரங்களில் வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகளை சிலர் வைத்து விட்டு செல்வதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரப்ப இந்த வேலை செய்யப்படுகிறதா என தெரியவில்லை.

Recommended Video

    இரவு நேரத்தில் வீட்டு வாசல் முன்பு வீசப்பட்ட ரூபாய் நோட்டுகள்

    கொரோனாவால் நாளுக்கு நாள் தமிழகத்தில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுகிறது. இறப்பு விகிதம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் பாதிப்புகள் அதிகரித்து வருவது பீதியை ஏற்படுத்துகிறது. அதிலும் சென்னையில் 98 சதவீத கேஸ்களில் அறிகுறியே இல்லாமல் கொரோனா ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இதனால் சென்னை கொரோனா பரவில் 3ஆவது நிலையை அடைந்துவிட்டதோ என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுகிறது. மருத்துவ நிபுணர்களும் இதையேதான் சொல்கிறார்கள்.

    கொரோனா

    கொரோனா

    வடசென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகமாக உள்ளனர். இங்கு கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கொரோனா அதிகரித்துள்ளது. இடநெருக்கடி காரணமாக இங்கு கொரோனா எளிதில் பரவியிருக்கலாம் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் கொரோனாவை வேண்டுமென்றே பரப்ப சில முயற்சிகள் நடப்பதாகவும் மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

    மின்னல் வேகம்

    மின்னல் வேகம்

    சென்னையில் மண்டலம் 3, அதாவது மாதவரம் பகுதியில் மாணிக்கம் தெருவில் இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இரு சக்கர வாகனத்தில் வருகிறார்கள். கதவுகள் மூடியிருக்கும் வீடுகளின் வாசல் முன் ரூ 20, ரூ 50, ரூ 100, ரூ 500 ஆகிய நோட்டுகளை வைத்துவிட்டு மின்னல் வேகத்தில் சென்றுவிடுகிறார்கள்.

    அதிகாரிகள்

    அதிகாரிகள்

    காரணமின்றி இது போல் ரூபாய் நோட்டுகளை வைத்துவிட்டு செல்வதால் கொரோனாவை பரப்ப திட்டமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த அச்சத்தால் மக்கள் போலீஸாருக்கு புகார் அளித்துள்ளனர். அது போன்று ஆதரவின்றி கிடக்கும் ரூபாய் நோட்டுகளை எடுக்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளார்கள்.

    பரபரப்பு

    பரபரப்பு

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் யாரோ இருவர் சைக்கிள்களில் வந்து ஒவ்வொரு வீட்டு வாசல்களிலும் காசை வைத்து விட்டு சென்றுள்ளார்கள். இது ஏன் என தெரியவில்லை. எல்லாரும் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருக்கும் போது வீடுகள் முன்பு இரவு நேரத்தில் காசு வைக்க வேண்டிய அவசியம் என்ன என தெரியவில்லை. ஒரு வேளை ரூபாய் நோட்டுகள் மூலம் கொரோனாவை பரப்ப முயற்சியா என தெரியவில்லை என்றார்கள். வடசென்னையில் அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த எல்லைக்குள்பட்ட மாதவரத்தில் இது போல் வீட்டு வாசல் முன்பு ரூபாய் நோட்டுகள் வைக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    English summary
    Anonymous currency notes are placed in outside of the houses in Madhavaram. People gets fear that Corona to be spread through currency notes?
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X