சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சென்னை வந்த 3,10,000 கோவிஷீல்டு டோஸ்கள்.. தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடுக்கு தீர்வாகுமா?

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாட்டுக்கு மேலும் 3,10,150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தன. இந்த தடுப்பூசிகளை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

கொரோனா தொற்றை தடுக்கும் மிகப்பெரிய பேராயுதம் தடுப்பூசியாகும். தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணிகள் நடந்து வருகின்றன.

Another 3 lakhs Govshield vaccine doses arrived in Chennai for Tamil Nadu

ஆனால் பல்வேறு இடங்களில் தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுகிறது. பல மணி நேரம் காத்திருந்தும் பொதுமக்கள் தடுப்பூசி கிடைக்காமல் திரும்பி செல்வது வாடிக்கையாகி விட்டது. இந்த நிலையில் மத்திய தொகுப்பிலிருந்து 3,10,150 கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வந்தடைந்தது.

இந்த தடுப்பூசிகள் மகராஷ்டிரா மாநிலம் புனேவிலிருந்து விமானம் மூலம் வந்து சேர்ந்தது. தடுப்பூசியை பெற்றுக் கொண்ட தமிழ்நாடு மாநில சுகாதாரத்துறை அதிகாரிகள், சென்னையில் உள்ள மாநில சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு சென்றனர்.

இந்த தடுப்பூசிகள் பிரிக்கப்பட்டு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன. தற்போது ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாட்டை கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் ஓரளவு தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
Another 3,10,150 Govshield vaccine doses arrived in Chennai for Tamil Nadu. These vaccines will send to the districts
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X