சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பல்லாயிரம் கோடி முதலீடு.. சென்னைக்கு வருகிறது ஆப்பிள் போன் தயாரிப்பு நிறுவனமான "பெகட்ரான்"..!

Google Oneindia Tamil News

சென்னை: ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறக்க முடிவு செய்துள்ளது.

Recommended Video

    முதலீடு செய்யும் Foxccon.. சென்னையை குறிவைத்த Apple நிறுவனம்

    சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக அமெரிக்காவின் தொழில்நுட்ப நிறுவனங்கள் பல சென்னைக்கு வர முடிவு செய்துள்ளது.

    முன்னதாக அமெரிக்காவின் ஆப்பிள் நிறுவனம் சென்னையில் தனது உற்பத்தியை விரிவாக்க முடிவு செய்தது. அதேபோல் சீனாவில் இருந்து வெளியேறும் மற்ற அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.

     கைகோர்த்த இந்தியா, யுகே.. அமெரிக்கா போடும் செம பிளான்.. சீனாவை அசைக்க போகும் கைகோர்த்த இந்தியா, யுகே.. அமெரிக்கா போடும் செம பிளான்.. சீனாவை அசைக்க போகும் "ஹுவாவே" மோதல்!

    சென்னை வருகிறது

    சென்னை வருகிறது

    இந்த நிலையில் தற்போது ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் பெகட்ரான் நிறுவனம் தற்போது சென்னையில் தனது கிளையை திறக்க முடிவு செய்துள்ளது. ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் இரண்டாவது பெரிய நிறுவனம்தான் பெகட்ரான் நிறுவனம். சீனாவில் இருந்து வெளியேறி சென்னையில் இவர்கள் தங்கள் கிளையை தொடங்க இருக்கிறார்கள்.

    ஒப்பந்தம் முடிந்துவிட்டது

    ஒப்பந்தம் முடிந்துவிட்டது

    இதற்கான ஒப்பந்தம் முடிந்துவிட்டது. இந்தியாவில் சென்னையில் தொழிற்சாலை அமைக்க இதற்காக கையெழுத்தும் போடப்பட்டுவிட்டது என்று கூறுகிறார்கள். பல மாநில அரசுகள் உடன் பேசி, நிலம் தொடர்பாக ஆலோசனைகளை செய்து கடைசியாக சென்னைக்கு இந்த தொழிற்சாலை வர இருக்கிறது. இதன் மூலம் சென்னையில் அமைய போகும் இரண்டாவது பெரிய ஆப்பிள் தொழிற்சாலை ஆகும் இது. சென்னையில் இந்த நிறுவனம் எவ்வளவு கோடி முதலீடு செய்யும் என்பது இன்னும் உறுதியாகவில்லை..

    சென்னை செம

    சென்னை செம

    சென்னையில் ஏற்கனவே ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பும் ஃபாக்சான் நிறுவனம் உள்ளது. அதேபோல் அவர்கள் சென்னையில் கூடுதலாக 7500 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருக்கிறார்கள். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. தைவானை சேர்ந்த இந்த நிறுவனம் சீனாவில் இருந்து மொத்தமாக வெளியேறி சென்னையில் பல்வேறு முதலீடுகளை செய்ய இருக்கிறது.

    மிகப்பெரிய நிறுவனம்

    மிகப்பெரிய நிறுவனம்

    இந்த நிலையில் தற்போது தைவானின் இன்னொரு நிறுவனமான பெகட்ரான் சென்னைக்கு வருகிறது. இந்த நிறுவனத்தின் மதிப்பு 45 பில்லியன் டாலர் என்று கூறுகிறார்கள். உலகில் மூன்றாவது பெரிய மொபைல் உதிரி பாக தயாரிப்பு நிறுவனம் ஆகும் இது. இந்த நிறுவனம் மொபைல் மட்டுமின்றி லேப்டாப், டேப்லெட்,தொலைக்காட்சி ஆகியவற்றை கூட தயாரிக்கிறது. ஆப்பிள் நிறுவனம் கொடுத்த அழுத்தத்தின் மற்றும் ஆலோசனையின் பெயரில்தான் இந்த இரண்டு நிறுவனங்களும் சென்னை வருகிறது .

    என்ன காரணம்

    என்ன காரணம்

    முன்னதாக வெளிநாட்டு செல்போன் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழிற்சாலைகளை இந்தியாவில் அமைக்க மத்திய அரசு சலுகைகளை அறிவித்தது. மொத்தம் 41 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதி உதவி, சலுகைகளை இந்த தொழிற்சாலைகளுக்கு வழங்க போவதாக மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தற்போது பெகட்ரான் சென்னைக்கு வருகிறது. ஏற்கனவே இந்தியாவில் ஆப்பிளுக்கு உதிரி பாகங்களை அனுப்பும் பாக்சான், விஸ்டராண், கம்பல் எலக்ரானிக்ஸ் நிறுவனங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது .

    English summary
    Another Apple's supplier Pegatron decides to start its unit in Chennai after Foxconn Factory.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X