சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முதலில் விஜய்.. அடுத்து அஜித்.. இப்போது சூர்யா.. முன்னணி நடிகர்களுடன் தொடர்ந்து மோதும் தமிழக பாஜக!

தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கோலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் மோதி வருகிறார்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழக பாஜக தலைவர்கள் தொடர்ந்து கோலிவுட்டை சேர்ந்த முன்னணி நடிகர்களுடன் மோதி வருகிறார்கள். அரசியலுக்கு வராத அதிக ரசிகர்கள் கொண்ட நடிகர்களை தொடர்ந்து பாஜக விமர்சித்து வருகிறது.

கடந்த இரண்டு வருடங்களில் தமிழகத்தில் அதிக அளவில் வைரலுக்கு உள்ளான கட்சி என்றால் அது கண்டிப்பாக தமிழக பாஜகவாகத்தான் இருக்கும். கட்சி வளர்ந்து இருக்கிறதோ இல்லையோ, ஆனால் இக்கட்சியை சேர்ந்த தலைவர்கள் பலர் மட்டும் தொடர்ந்து விமர்சனங்களில் சிக்கி வருகிறார்கள்.

முக்கியமாக தமிழகத்தின் முன்னணி நடிகர்களை பகைத்துக் கொண்டு பலமுறை அவர்களின் ரசிகர்களிடம் சோஷியல் மீடியாவில் பாஜக தலைவர்கள் சிக்கி அல்லோகலம் ஆகி இருக்கிறார்கள். அந்த வகையில் பாஜகவிற்கு கிடைத்த புதிய வரவுதான் நடிகர் சூர்யா.

யார் முதலில்

யார் முதலில்

பாஜக தமிழகத்தில் முதலில் எதிர்த்த மூத்த நடிகர் என்றால் அது விஜய்தான். மெர்சல் படத்தில் ஜிஎஸ்டி குறித்து டயலாக் பேச அது பாஜகவை சீண்டியது. விமர்சனம் செய்ததோடு நிற்காமல் எச். ராஜா ''ஜோசப் விஜய்'' என்று டிவிட் செய்ய அது பெரிய சர்ச்சையானது. பாஜகவிற்கு அதிமுகவும் ஆதரவு அளிக்க விஜய் vs பாஜக, அதிமுக என்று பிரச்சனை பெரிதானது.

மாறி மாறி விமர்சனம்

மாறி மாறி விமர்சனம்

விஜயை தொடர்ந்து பாஜக தலைவர்கள் விமர்சிக்க சில நாட்களில் சர்க்கார் படமும் வெளியானது. கோமளவல்லி என்று வில்லிக்கு பெயர் வைத்தது, அதிமுகவை மறைமுகமாக கிண்டல் செய்தது என்று நிறைய விஷயங்கள் இந்த படத்தில் இடம்பிடித்து இருந்தது. இதையும் காரணமாக வைத்து பாஜக கடுமையாக விஜயிடம் பிரச்சனை செய்தது.

அஜித்

அஜித்

விஜயை தாக்கி அஜித் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கலாம் என்றுதான் பாஜக நினைத்தது. அதை போலவே சில அஜித் ரசிகர்களும் பாஜகவில் இணைந்தார்கள். ஆனால் அஜித் வேகமாக செயல்பட்டு உடனே அதற்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். அவர்கள் என் ரசிகர்களாக கட்சியில் இணையவில்லை, சாதாரண குடிமகனாக இணைந்துள்ளனர். தனக்கும் அரசியலுக்கும் தொடர்பே இல்லை என்று கூறினார். இந்த அறிக்கை பாஜக தலைவர்களை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

மிக மோசம்

மிக மோசம்

இதனால் எப்போதும் எலியும் பூனையுமாக இணையத்தில் டிரெண்ட் செய்யும் அஜித் - விஜய் ரசிகர்கள் கூட ஒன்று சேர்ந்து பாஜகவை கிண்டல் செய்ய தொடங்கினார்கள். பாஜகவிற்கு எதிராக இரண்டு முக்கிய நடிகர்களின் ரசிகர்களும் கடுமையான மீம்களையும், விமர்சனங்களையும் இணையத்தில் வைத்தனர்.

இப்போது சூர்யா

இப்போது சூர்யா

இந்த நிலையில்தான் தற்போது நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து பேசியது தமிழகம் முழுக்க வைரலாகி உள்ளது. பாஜக கட்சியை சூர்யாவின் கருத்து கடும் கோபத்திற்கு உள்ளாகி உள்ளது.புதிய கல்விக்கொள்கையில் நிறைய குளறுபடுகள் இருக்கிறது. ஏழை மாணவர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள் என்று நடிகர் சூர்யா புதிய கல்விக்கொள்கை குறித்து புகார்களை அடுக்கி இருந்தார்.

தவறு

தவறு

மிக தெளிவாக, நியாமான கேள்விகளை அவர் முன் வைத்து இருந்தார். ஆனால் அவரை பணக்காரர், ஏழையின் வலி புரியவில்லை என்று பாஜக தலைவர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இதனால் சண்டை தற்போது பாஜக vs சூர்யா என்று மாறியுள்ளது. இதனால் தற்போது சூர்யாவிற்கு அவரின் ரசிகர்கள் மட்டுமில்லாமல் விஜய், அஜித் என்று மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் ஆதரவாக களமிறங்கி டிவிட் செய்து வருகிறார்கள்.

ஏன் பாஸ் இப்படி

ஏன் பாஸ் இப்படி

தமிழகத்தின் மக்கள் தொகையில் இந்த மூன்று முக்கிய நடிகர்களின் ரசிகர்கள்தான் அதிகம் இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் மூவரையுமே தற்போது பாஜக பகைத்துக் கொண்டு இருக்கிறது. ஏற்கனவே விஜய் சேதுபதி, சித்தார்த் உள்ளிட்ட இளம் நடிகர்களும் பாஜகவிற்கு எதிரான நிலைப்பாட்டில்தான் இருக்கிறார்கள்.. தமிழக பாஜக தலைவர்கள் இப்படி எல்லாம் செய்வது தேசிய தலைமைக்கு தெரியுமா என்பதுதான் சந்தேகம்!

English summary
Another blow in TN: BJP fights with versatile actor Suriya after Vijay and Ajith.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X