• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

"செல்லம்.. அவர்கள் உன்னை கைவிடலாம்.. நான் விடமாட்டேன்".. உருக உருக வழிந்த ஸ்ரீ.. வைரலாகும் ஆடியோ!

|

சென்னை: "அரசியல் தலைவர்கள் உன்னை கை விட்டுவிடுவார்கள்.. நான் உன்னை எப்பவுமே கைவிடமாட்டேன் செல்லம்" என்று பாஜக பெண் நிர்வாகியிடம் கோடம்பாக்கம் ஸ்ரீ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளதாம்.. இதுபோக, கோடம்பாக்கம் ஸ்ரீ ஒரு கிறிஸ்தவர் என்றும், இந்து மத தலைவர் என்ற போர்வையில் இந்துகளை ஏமற்றுகிறாரா கோடம்பாக்கம் ஸ்ரீ என்ற கேள்வியுடன் செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அனைத்திந்திய இந்து மகா சபாவின் தலைவராக ஸ்ரீகந்தன் என்பவர் உள்ளார்.. கோடம்பாக்கம் ஸ்ரீ என்று சொல்வார்கள்.. இந்த கட்சியின் பொதுச்செயலாளர் நிரஞ்சனி, சில தினங்களுக்கு முன்பு தலைவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

"ஸ்ரீ எனக்கு பாலியல் இம்சை தந்தார்.. டெல்லி போகும்போதெல்லாம் என்னையும் கூட்டிட்டு போவார்.. என்னை பிடிச்சிருக்கிறதா சொன்னார்.. கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னார்.. அவரால் நிறைய தொல்லையை அனுபவிச்சேன்" என்று கமிஷனர் ஆபீசில் புகார் தந்தார்.

விசாரணை

விசாரணை

இதைதொடர்ந்து, ஸ்ரீயின் மனைவி நான்சி "ஆண்களை மயக்கக் கூடியவர் ரஞ்சனி.. மயக்கியே பணத்தை கறக்க கூடியவர்.. பலருடன் அவர் நெருக்கமாக இருந்துள்ளார்.. இது வீண் பழி" என்று அவர் ஒருபுறம் கமிஷனர் ஆபீசில் புகார் தந்தார். இது சம்பந்தமான விசாரணை நடந்து வரும்நிலையில், ஸ்ரீ மீது இன்னொரு புகார் எழுந்துள்ளது.

பெயர் மாற்றம்

பெயர் மாற்றம்

கடந்த 1999-ம் ஆண்டு நான்சியை காதலித்து கல்யாணம் செய்தபோது, தனது பெயரை பிளிப் ஸ்ரீகண்டன் என கிறுத்துவ பெயரில் ரிஜிஸ்டர் செய்துள்ளாராம்.. கல்யாண ரிஜிஸ்டர் சர்டிபிகேட்டில் இந்த பெயர் உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெயர்கள்

பெயர்கள்

கிறிஸ்தவராக வாழ்ந்துவந்த ஸ்ரீ, திடீரென இந்து தலைவராக உருவெடுத்தாலும் தனது மகன்களுக்கு கிறிஸ்துவ பெயரையே சூட்டி மகிழ்ந்துள்ளார். மூத்த மகன் பெயர் கிளைமென்ட், 2-வது மகன் பெயர் ரீகன் என்று பெயர்.. சென்ற வருடம் செப்டம்பர் மாதம் இவரது சொந்த சகோதரியின் மகளின் கல்யாணமும் கிறிஸ்தவ முறைப்படிதான் நடந்ததாம்.. அந்த கல்யாண போட்டோக்களும் தற்போது வெளியாகி உள்ளன.

ஆடியோ

ஆடியோ

தன்னை ஆர்எஸ்எஸ், பிஜேபி தலைவர்களுடன் நெருக்கமாக உள்ளதுபோல காட்டி பல இந்து இளைஞர்களை ஏமாற்றி உள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. மேலும் பெண் நிர்வாகி பல பாஜக தலைவர்களுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை குறித்து அவர் விமர்சித்து பேசிய ஆடியோவும் வெளியாகி உள்ளதாம்.. அதில் "அரசியல் தலைவர்கள் உன்னை கைவிடலாம்.. நான் உன்னை எப்பவுமே கைவிடமாட்டேன் செல்லம்" என்று 8 நிமிடம் ஆடியோவில் பேசுகிறாராம் ஸ்ரீ!!

குற்றச்சாட்டுகள்

குற்றச்சாட்டுகள்

கட்சியில் பதவி வழங்க பலரிடம் பணத்தை வாங்கி கொண்டதாகவும், மிகப்பெரிய ரவுடிகளுன் தொடர்பில் உள்ள ஸ்ரீகண்டனுக்கு இலங்கை வாழ் தமிழர்களுடன் தொடர்பு உள்ளதாகவும் பல பல குற்றச்சாட்டுகள் வெளியாகி உள்ளன. ஆனால் இதெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை.. ஸ்ரீ மீது யாரேனும் வேண்டுமென்றே காழ்ப்புணர்ச்சியால் கட்டவிழ்த்துவிடப்படும் சதியா என்றும் தெரியவில்லை.. எனவே போலீசார்தான் இது சம்பந்தமான விசாரணை நடத்தி உண்மை நிலவரத்தை வெளிக்கொணர வேண்டும்!

 
 
 
English summary
another complaint against hindu maha sabha leader kodambakkam srikhandar over religious issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X