சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐபிஎல் வரலாற்றிலேயே இல்லாத சாதனை.. வேகமோ வேகம்! சிஎஸ்கே அடுத்த மேட்சில் இவரை சந்திக்கனும்.. அப்பப்பா

Google Oneindia Tamil News

சென்னை: டெல்லி கேபிடல்ஸ் அணியின், வேகப் பந்து வீச்சாளர் அன்ரிச் நார்ட்ஜே ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகபட்ச வேகத்தில் பந்து வீசிய சாதனையை நேற்று பதிவு செய்துள்ளார்.

நல்ல உயரம்.. முகத்தில் எப்போதும் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதை போன்ற பிரதிபலிப்பு.. ஆகியவைதான், அன்ரிச் நார்ட்ஜேயின் அடையாளங்கள். ஆனால், பந்து கையை விட்டு கிளம்பும்போது என்னவோ ஒட்டுமொத்த வெறியையும் அவரிடம் பார்க்க முடியும்.

அவர் கைகளில் இருந்து செல்வது பந்தா ராக்கெட்டா என்பதை பகுத்து பார்க்க முடிவதில்லை. 26 வயதேயாகும் இந்த தென் ஆப்பிரிக்க அணியின் இளம் வீரர்தான், டெல்லி கேபிடல்ஸ் அணியின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று. ரபடாவுக்கு ஏற்ற வேகப்பந்து ஜோடியாக மாறி ஜோதியில் கலந்துவிட்டதால்தான் டெல்லி அணி சக்கைபோடு போட்டு டேபிள் டாப்பராக மாறியுள்ளது.

வெறி கொண்ட வேங்கை

வெறி கொண்ட வேங்கை

அன்ரிச் நார்ட்ஜேவின் வேகப்பந்து வீச்சுக்கு மற்றொரு மகுடம் நேற்று சூட்டப்பட்டது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டி அது. டெல்லி முதலில் பேட் செய்து 161 ரன்கள் எடுத்த நிலையில், அதற்குள் ராஜஸ்தானை கட்டுப்படுத்த வேண்டிய தேவை டெல்லி பவுலர்களுக்கு இருந்தது. எதிரே நிற்பதோ பட்லர். அதிலும், ஸ்கூப் ஷாட்டுகளை அடித்து பட்டையை கிளப்பிக் கொண்டுவேறு இருந்தார்.

அடித்து தூக்கிய நார்ட்ஜே

அடித்து தூக்கிய நார்ட்ஜே

3வது ஓவரை வீசியபோது, தனது பந்துகளை பட்லர் அடிக்க ஆரம்பித்ததும், அன்ரிச் நார்ட்ஜே செம கோபத்தோடு உறும ஆரம்பித்தார். பந்து ஒவ்வொன்றும் பயங்கர வேகத்தில் புறப்பட்டது. அப்போது ஒரு பந்தின் வேகம் மணிக்கு 156.2 கி.மீ என்று ஸ்பீடோ மீட்டரில் பதிவானது. ஐபிஎல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச வேகமாகும். அடுத்த பந்திலேயே பட்லரை கிளீன் போல்டு செய்தார் அன்ரிச் நார்ட்ஜே. விக்கெட் விழுந்ததும் வேகப்பந்து வீச்சாளருக்கே உரிய அப்படி ஒரு வெறியுடன் ஆவேசப்பட்டார் அன்ரிச் நார்ட்ஜே.

அதிகபட்ச வேகம்

அதிகபட்ச வேகம்

இதே ஓவரில், பல சாதனைகளை அவர் படைத்தார். ஐபிஎல் வரலாற்றிலேயே 156.2 கி.மீ அதிகபட்ச வேகம் என்பதோடு, அதே ஓவரில் அவர் வீசிய 155.2, 154.7 ஆகிய வேகமும் டாப் 3 வேக சாதனையில் வந்துள்ளன. இந்த பட்டியலில் 4வது இடம் டேல் ஸ்டெயினுக்கு. அவர் நல்ல ஃபார்மில் இருந்தபோது, 154.4 கி.மீ வேகத்தில் வீசியிருந்தார். இது நாள் அதுதான் ஐபிஎல் போட்டியின் அதிகபட்ச வேகப் பந்தாக இருந்தது. ரபடா 154.2 கி.மீ வேகத்தில் பந்து வீசி, அடுத்த இடத்தில் உள்ளார். இதில் முக்கிய விஷயம் 3 பேருமே தென் ஆப்பிரிக்க அணிக்காக ஆடுபவர்கள். இப்போது ஸ்டெயின் பெங்களூருக்கும், ரபடா மற்றும், அன்ரிச் நார்ட்ஜே டெல்லிக்கும் ஆடுகிறார்கள்.

சிஎஸ்கே போட்டி

சிஎஸ்கே போட்டி

டெல்லி கேபிடல்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள், வரும் சனிக்கிழமை, சார்ஜா மைதானத்தில் மோதுகின்றன. ஏற்கனவே இவ்விரு அணிகள் மோதியபோதும் அச்சுறுத்தினார் அன்ரிச். இப்போது நல்ல ஃபார்மில் மீண்டும் மோத வருகிறார். நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்த ரபடா, அன்ரிச் ஜோடியை, சிஎஸ்கேவின் தடுமாறும் பேட்டிங் லைன் அப் எதிர்கொள்ள வேண்டி வரும் என்பதை நினைத்தாலே கொஞ்சம் திக்.. திக்.. என்றுதான் இருக்கிறது.

English summary
Delhi Capitals fast bowler Anrich Nortje, delivered the fastest ball in the history of Indian Premier League at 156.22 kmph.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X