சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Anti-CAA Protest LIVE: லட்சக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம்.. முதல்வர் அவசர ஆலோசனை

Google Oneindia Tamil News

சென்னை: உயர்நீதிமன்ற தடையை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட, இன்னும் சற்று நேரத்தில் இஸ்லாமிய அமைப்புகள் பேரணியை துவக்க உள்ளதால் சென்னையில் கடும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பது, தமிழக இஸ்லாமிய அமைப்புகளின் கோரிக்கை. இதை வலியுறுத்தி, சென்னை வண்ணாரப்பேட்டையில், கடந்த வெள்ளிக்கிழமை முதல், ஆண்களும், பெண்களும் தர்ணாவில் ஈடுபட்டு வருகிறார்கள்.

வெள்ளிக்கிழமை இரவு போராட்டக்காரர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியதால் பெரும் பதற்றம் உருவானது. தற்போது தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. எனவே இந்த கூட்டத்தொடரிலேயே, குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற இஸ்லாமிய அமைப்புகள் வலியுறுத்துகின்றன. இதை வலியுறுத்தி, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கத்திலிருந்து இன்னும் சற்று நேரத்தில் சட்டசபையை முற்றுகையிடும் போராட்டத்தில் பங்கேற்க, இஸ்லாமிய அமைப்புகளின் ஊர்வலம் துவங்க உள்ளது.

Newest First Oldest First
11:26 AM, 19 Feb

முதல்வர் அவசர ஆலோசனை

தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் போராட்டத்தில் குதித்துள்ள நிலையில் தலைமைச் செயலாளர் சண்முகத்துடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவசர ஆலோசனை.
11:12 AM, 19 Feb

தடையை மீறி பேரணி

சென்னையில், நீதிமன்ற தடையை மீறி, சட்டசபையை முற்றுகையிட இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து பேரணி நடத்தி வருகிறார்கள்
11:01 AM, 19 Feb

நாகர்கோவில் போராட்டம்

கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவிலில் 2000த்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
10:51 AM, 19 Feb

நெல்லை

நெல்லை
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பிரமாண்ட பேரணி, ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
10:50 AM, 19 Feb

ட்ரோன் கண்காணிப்பு

சென்னையில், 60 வீடியோ கேமரா, 20 சிசிடிவி கேமரா, 5 ட்ரோன் கேமரா ஆகியவற்றை பயன்படுத்தி சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் போலீசார் கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்
10:47 AM, 19 Feb

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கியும் பேரணி சென்று இஸ்லாமியர்கள் போராட்டம்.
10:43 AM, 19 Feb

தமிழகம் முழுக்க போராட்டம்

சிஏஏ சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி, திருவண்ணாமலை, திருச்சி, கோவை, கரூர் நகரங்களிலும் கலெக்டர் அலுவலகம் நோக்கி இஸ்லாமியர்கள் பேரணி
10:38 AM, 19 Feb

காவல்துறை குவிப்பு

காவல்துறை குவிப்பு
சேப்பாக்கம் முழுவதும் காவல் துறை கட்டுபாட்டிற்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது, கூடுதல் காவல் ஆணையர் தலைமையில் 3 இணை ஆணையர், 10 துணை ஆணையர், 28 உதவி ஆணையர், 80 இன்ஸ்பெக்டர்கள் உட்பட 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு
10:35 AM, 19 Feb

கடையடைப்பு

கடையடைப்பு
சிஏஏ எதிர்ப்பு பேரணியால் சென்னை மண்ணடி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைப்பு
10:34 AM, 19 Feb

சென்னையில் தடையை மீறி துவங்கியது சட்டசபை முற்றுகை போராட்டம்
10:29 AM, 19 Feb

பரபரப்பு

தடையை மீறி பேரணி நடைபெற உள்ளதால், அதை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது
10:29 AM, 19 Feb

பங்கேற்பு

இஸ்லாமிய இயக்கங்கள், அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் பேரணி துவங்க உள்ளது
10:29 AM, 19 Feb

பேரணிக்கு தடை

சட்டசபை முற்றுகைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நேற்று சென்னை ஹைகோர்ட் உத்தரவு வழங்கியது, மார்ச் 11ம் தேதிவரை, சட்டசபையை முற்றுகையிட தடை விதிக்கப்பட்டது

Anti-CAA protest: Muslims organisations rally in Chennai Live Updates
English summary
Anti-CAA protesters in Tamil Nadu have decided to go ahead with their planned rally to Fort St George on Wednesday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X