சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

21 கிலோ தங்கம் முதல் 2 சொகுசு பஸ்கள் வரை.. இளங்கோவன் வீட்டில் சிக்கியவை.. 'ஷாக்'கான போலீசார்!

Google Oneindia Tamil News

சென்னை: அ.தி.மு.க நிர்வாகியும் தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் மாநிலத் தலைவருமான இளங்கோவன் வீடு மற்றும் அவருக்கு சொந்தமான இடங்ககளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் அதிரடியா சோதனை மேற்கொண்டனர்.

இளங்கோவன் வீடு கல்வி நிறுவனம் என சேலம், சென்னை, திருச்சி உள்ளிட்ட 27 இடங்களில் சோதனை நடைபெற்றது. இளங்கோவன் வருவாயை விட 131% அளவுக்கு சொத்துக்குவிப்பு செய்துள்ளதாக உள்ள புகாரின் அடிப்படையில் சோதனை நடைபெற்றதாக போலீசார் தெரிவித்தனர்.

Anti-Corruption Police raid: 21 kg of gold seized from ADMK executive Ilangovan house

இந்த நிலையில் காலை முதல் நடைபெற்ற சோதனையில் ரூ.29 லட்சம் பணம், 21 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்ட்டதாக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கியின் தலைவர் மற்றும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர்.இளங்கோவன் மற்றும் சுவாமி அய்யப்பன் கல்வி அறக்கட்டளை நிறுவனத்தின் துணைத்தலைவரும் ஆர்.இளங்கோவனின் மகன் இ.பிரவீன்குமார் ஆகியோர்கள் அவர்களுடைய பெயரிலும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் பெயரிலும் மற்றும் தான் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரிலும்

ஆர்.இளங்கோவன் தனது பணிக்காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்துள்ளது சம்மந்தமாக அவர் மீது கடந்த 21.10.2021 ம் தேதியன்று சேலம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது மேற்படி வழக்கு தொடர்பாக ஆர்.இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுனங்கள் , நகைக் கடைகள் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்பட்ட நபர்களின் இருப்பிடம் மற்றும் சுவாமி அய்யப்பன் அறக்கட்டளை என்ற பெயரில் முசிறியில் செயல்பட்டுவரும்

முசிறி இன்ஸ்டியூட்ஸ் ஆப் டெக்னாலஜி கல்வி நிறுவனங்கள் உட்பட, சென்னையில் 3 இடங்கள், கோயம்புத்தூர் - 1 இடம் , நாமக்கல் - 3 இடங்கள் , முசிறி ( திருச்சி ) - 6 இடங்கள் மற்றும் சேலம் - 23 இடங்கள் ஆக மொத்தம் 36 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறையினரால் இன்று 22.10.2021 ஆம் தேதியன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டது .

இந்த சோதனையில் ரூ.29.77 லட்சம் ரொக்க பணம், 10 சொகுசு கார்கள் , 2 வால்வோ சொகுசு பேருந்துகள் , 3 கணினி ஹார்டு டிஸ்க்குகள், சொத்துக்கள் சம்மந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள் , 21:2 கிலோ கிராம் ( 2650 சவரன் ) தங்க நகைகள் , 282 கிலோ கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் வங்கி கணக்கு புத்தகங்கள் மற்றும் வங்கி வைப்புத்தொகை ரூ .68 லட்சம் ஆகியவை கண்டறியப்பட்டு , வழக்கிற்கு தொடர்புடைய பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன . சோதனை தொடர்ந்து நடைபெற்று வருகிறது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
According to the Tamil Nadu Anti-Corruption Police, Rs.29 lakh and 21 kg of gold jewelery were seized during a search of the house of AIADMK executive Ilangovan
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X