சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

#அனுபவமே பாடம் ரஜினி ட்வீட்டிற்கு நெட்டிசன்ஸ் ரியாக்சன்ஸ்

ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அனுபவமே பாடம் என்று ரஜினிகாந்த் பதிவிட்டதற்கு ட்விட்டரில் ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: ட்விட்டரில் ஏதாவது மெசேஜ் போட்டு நெட்டிசன்ஸ்களுக்கு தீனி கொடுத்து விடுகிறார் ரஜினிகாந்த். ராகவேந்திரா திருமண மண்டபம் சொத்து வரி விவகாரத்தில் அவசரப்பட்டு வழக்கு போட்டு உயர்நீதிமன்றத்தில் குட்டு வாங்கிய ரஜினிகாந்த் அனுபவமே பாடம் என்று ட்விட்டரில் பதிவிட்டார். இந்த பதிவினை ரஜினி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். நெட்டிசன்ஸ் ரியாக்சன்ஸ் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்திற்கு சென்னை மாநகராட்சி கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான அரையாண்டு காலத்துக்கு 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சொத்து வரி செலுத்தும் படி, சென்னை மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

Anubavame Paadam rajinikanths tweet and netizens reaction

இந்த நோட்டீசை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கொரோனா தொற்று பேரிடர் காரணமாக, மத்திய - மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்ததால், திருமண மண்டபம் யாருக்கும் வாடகைக்கு விடப்படவில்லை என்றும், மார்ச் 24ம் தேதி பிறகு அனைத்து திருமணங்களும் ரத்து செய்யப்பட்டு, முன்பணமாக பெற்ற தொகையை திருப்பி வழங்கி விட்டோம். அக்டோபர் 15ஆம் தேதிக்குள் சொத்துவரியை செலுத்தாவிட்டால் 2 சதவிகித அபராதத்தை வட்டியுடன் செலுத்த வேண்டுமென நோட்டீசில் குறிப்பிட்டுள்ளது.

மண்டபம் காலியாக இருந்ததால் மாநகராட்சி சட்டப்படி பாதி வரியை திருப்பி வழங்க வேண்டும் என்று விதிகள் உள்ளதால், அதுதொடர்பாக தன் தரப்பில் மாநகராட்சிக்கு அனுப்பிய கடிதத்தின் மீது தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும், அதுவரை சொத்து வரி மீது அபராதம் விதிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கூறியிருந்தார். சென்னை மாநகராட்சிக்கு கடந்த 23ஆம் தேதி நோட்டீஸ் அனுப்பியும் இதுகுறித்து எந்த பதிலும் வரவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார் ரஜினிகாந்த்.

மனுவை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மாநகராட்சியிடம் மனு கொடுத்த ஒரு வாரத்தில் எப்படி வழக்கு தொடரமுடியும் எனவும், நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அவகாசம் வேண்டாமா என கேள்வி எழுப்பிய நீதிபதி, நீதிமன்றம் என்ன மாநகராட்சி அலுவலகமா என்றும் கண்டித்தார். இந்த வழக்கை கடுமையான அபராதம் விதித்து, தள்ளுபடி செய்யப்போவதாக எச்சரித்தார்.

ராகவேந்திரா மண்டப சொத்து வரி ... தவறைத் தவிர்த்திருக்கலாம்... அனுபவமே பாடம் - ரஜினி ராகவேந்திரா மண்டப சொத்து வரி ... தவறைத் தவிர்த்திருக்கலாம்... அனுபவமே பாடம் - ரஜினி

இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றார் ரஜினிகாந்த். இந்த நிலையில் இன்றைய தினம், ரஜினி தனது ட்விட்டர் பக்கத்தில் ராகவேந்திரா மண்டப சொத்து வரி விவகாரத்தில் நாம் மாநகராட்சியில் மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். தவறைத் தவிர்த்திருக்கலாம் அனுபவமே பாடம் என்று பதிவிட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். இந்த பதிவில் உள்ள #அனுபவமேபாடம் என்ற வார்த்தையை ரஜினி ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து
வருகின்றனர். நெட்டிசன்கள் பலர் ரஜினிக்கு எதிராக பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

நாங்க உங்க பக்கம்

Anubavame Paadam rajinikanths tweet and netizens reaction

நாங்கள் உங்கள் பக்கம் இருக்கிறோம் என்று ரஜினி ரசிகர் பதிவிட்டுள்ளார். உங்களைப் பற்றி தவறாக புரிந்து கொள்ளப்படுவதால் தெளிவு படுத்துங்கள் என்று தெரிவித்துள்ளார் ஒரு ரசிகர்.

Anubavame Paadam rajinikanths tweet and netizens reaction

தப்பு பண்ணிட்டு அதை மறைக்க 1000 பொய் சொல்ற கேடுகெட்ட அரசியல்வாதிகளுக்கு மத்தியில தன் பக்கம் நியாயம் இருந்தும், ஒருவேளை தவறு செய்துட்டோமோன்னு உணர்ந்து அதை தவிர்த்திருக்கலாம்னு சொல்றாரு பாருங்க, இப்படிபட்ட ஒரு மனுஷன் தான்யா அரசியலுக்கு தேவை. இவர் அரசியல்வாதி அல்ல தலைவன் என்று பதிவிட்டுள்ளார் இந்த ரசிகர்.

பாஜகல சேர்ந்துரு அண்ணாமலை

Anubavame Paadam rajinikanths tweet and netizens reaction

யய்யா அண்ணாமலை பேசாமல் நீ பாஜகல சேர்ந்துட்டா வரி அரசாங்கம் உனக்கு கட்டுமில்லை என்று கலாய்த்துள்ளார் ஒரு நெட்டிசன்ஸ்.

நாங்க கட்றோம்

Anubavame Paadam rajinikanths tweet and netizens reaction

"நாம்" இல்ல டலைவரே, "நான்"...எங்களை உங்களோடு சேர்த்து அசிங்க படுத்தாதிங்க டலைவரே... நாங்கள் சொத்து வரியை சரியாக ஏமாற்றாமல் கட்டி விடுகிறோம் என்று பதிவிட்டுள்ளார் ஒருவர்.

Anubavame Paadam rajinikanths tweet and netizens reaction

பணம் என்று வந்தால் உங்கள் குடும்பமே அரசாங்கத்தை ஏமாற்றும் நிலைக்கு தள்ளப்படுகிறது பணம் வைத்திருப்பவர்கள் வரியை ஒழுங்காக செலுத்தினால் தான் நலத்திட்ட பணிகளை அரசாங்கமும் ஏழை மக்களுக்கு செய்யமுடியும் இப்பொழுது உணர்ந்திருப்பது வலியை தவிர்ப்பதற்கு தானே தவிர நீங்கள் வரியைசெலுத்த அல்ல என்று பதிவிட்டுள்ளார் ஒரு நெட்டிசன்.

English summary
Rajinikanth feeds netizens by leaving a message on Twitter. Rajinikanth tweeted that the lesson was the experience of Raghavendra Wedding Hall, who was in a hurry to file a case in the property tax case and bought Kuttu in the High Court. This post is trending Rajinikanth fans. Let’s see how the Netizens Reactions are.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X