சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தொகுதி பங்கீட்டால் உடைகிறதா திமுக கூட்டணி... இழுபறிக்கு என்ன தான் காரணம்?

Google Oneindia Tamil News

சென்னை : தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே அவகாசம் உள்ளது. ஆனால் பிரதான எதிர்க்கட்சியான திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நிலை காணப்படுகிறது.

கூட்டணி கட்சிகள் கேட்கும் எண்ணிக்கையில் சீட்களை ஒதுக்க திமுக மறுத்து வருவதே, தொகுதி பங்கீடு முடிவுக்கு வராததற்கு காரணம் என கூறப்படுகிறது.

அனைத்து கட்சிகளும் இதை தங்கள் மானப் பிரச்னையாக நினைத்து, தொடர்ந்து பிடிவாதமாக இருப்பது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

 மகாசிவராத்திரி நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக - பரபர பின்னணி மகாசிவராத்திரி நாளில் தேர்தல் அறிக்கையை வெளியிடும் திமுக - பரபர பின்னணி

 இந்த தொகுதிகள் போதும்

இந்த தொகுதிகள் போதும்

திமுக கூட்டணியில் காங்கிரஸ், 2 கம்யூனிஸ்ட்கள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியன இடம்பெற்றுள்ளன. இதில் தங்களுக்கு ஒதுக்கிய 3 சீட்களை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும், 2 சீட்களை மனித நேய மக்கள் கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளன.

 காங்கிரஸ் கேட்பது என்ன

காங்கிரஸ் கேட்பது என்ன

காங்கிரஸ் கட்சிக்கு 18 சீட்கள் மட்டுமே ஒதுக்க திமுக முடிவு செய்துள்ளது. ஆனால் 2016 சட்டசபை தேர்தலில் ஒதுக்கிய 41 சீட்களை ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் பிடிவாதமாக இருந்து வருகிறது. ஆனால் 2016 தேர்தலை விட தற்போது தங்கள் கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைந்துள்ளதால், அதிக சீட்கள் ஒதுக்க முடியாத நிலையில் உள்ளதாக திமுக கூறுகிறது.

 2016 தேர்தல் நிலவரம் என்ன

2016 தேர்தல் நிலவரம் என்ன

2016 சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் மட்டுமே இருந்தது. 2 கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மதிமுக ஆகியன தேமுதிக தலைமையில் அமைந்த மூன்றாவது அணியில் இடம்பெற்றன. இதனால் திமுக.,வும் காங்கிரசிற்கு 40 க்கும் அதிகமான இடங்களை ஒதுக்கியது.

 கவுரவ பிரச்னையாக பார்க்கும் காங்கிரஸ்

கவுரவ பிரச்னையாக பார்க்கும் காங்கிரஸ்

அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு 24 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் திமுக.,விடம் இருந்து பாஜக.,வை விட கூடுதல் இடங்களை கூட்டணியிடம் இருந்து பெற வேண்டும் என காங்கிரஸ் நினைக்கிறது. இதனால் 18 சீட்களை ஏற்க மறுத்து, குறைந்தபட்சம் 30 சீட்டாவது ஒதுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறது. 30 சீட்டுக்கு குறையாமல் இருந்தால் தான் தங்கள் கட்சியின் கண்ணியத்தை பாதுகாக்க முடியும் என காங்கிரஸ் தரப்பு கூறுகிறது.

 உடைகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி

உடைகிறதா திமுக – காங்கிரஸ் கூட்டணி

அதிக எண்ணிக்கையில் சீட் ஒதுக்க திமுக ஒப்புக் கொள்ளாவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவதை தவிர வேறு வழியில்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் சிலர் கூறுகின்றனர். புதன்கிழமைக்குள் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராவிட்டால், அடுத்து என்ன செய்வது என மற்ற கட்சிகளுடன் பேசி முடிவு செய்யவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

 அடம்பிடிக்கும் மற்ற கட்சிகள்

அடம்பிடிக்கும் மற்ற கட்சிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி 10 சீட்கள் கேட்கிறது. ஆனால் அக்கட்சிக்கு 5 சீட் மட்டுமே ஒதுக்க திமுக திட்டமிட்டுள்ளது. முதலில் விடுதலை சிறுத்தைகளுக்கு 4 மட்டுமே ஒதுக்கப்பட்டது. பிறகு திருமாவளவன் கேட்டுக் கொண்டதால் கூடுதலாக ஒரு சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் குறைந்தபட்சம் 9 சீட்களையாவது பெற வேண்டும் என்பதே அக்கட்சியின் திட்டம். இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 4 சீட்கள் கேட்டுள்ளன. இருந்தாலும் கூடுதல் சீட்கள் வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம்.

 கூட்டணி கட்சிகளின் முடிவு என்ன

கூட்டணி கட்சிகளின் முடிவு என்ன

தாங்கள் கேட்ட சீட்களை ஒதுக்க திமுக தயாராக இல்லாததால் அதிருப்தியில் இருக்கும் கூட்டணி கட்சிகள், கொள்கை அடிப்படையிலேயே திமுக கூட்டணியில் இணைந்துள்ளோம். பாஜக - அதிமுக கூட்டணியை வீழ்த்த, நாங்கள் கூட்டணி அமைத்து செயல்படவே விரும்புகிறோம். ஆனால் அதற்கு திமுக போதிய இடங்களை ஒதுக்க வேண்டும் என தெரிவித்துள்ளன.

 பிரச்னையா...யார் சொன்னது

பிரச்னையா...யார் சொன்னது

தொகுதி பங்கீட்டால் கூட்டணிக்குள் அதிருப்தி நிலவுவதாக வெளியான தகவலை திமுக திட்டவட்டமாக மறுத்துள்ளது. திமுக ஒன்றும் பெரிய அண்ணாவை போல் நடக்கவில்லை. கூட்டணி மற்றும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை சுமூகமாவே நடைபெற்று வருவதாக திமுக.,வின் மூத்த தலைவர்கள் பலர் கூறி வருகின்றன.

 அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் அதிமுக

அடுத்தடுத்த கட்டத்திற்கு செல்லும் அதிமுக

அதிமுக கூட்டணியில் பாஜக.,வுக்கு, 24, பாமக.,வுக்கு 23 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேமுதிக, தமிழ் மாநில காங்கிரஸ், மற்ற சிறிய கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை ஆகியவற்றை தயார் செய்யும் வேலைகளையும் அதிமுக வேகமாக செய்து வருகிறது.

English summary
Congress leaders maintain the alliance will be broken if the DMK does not give it more seats.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X