சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

திரை மூடியே இருக்கும்.. சில நேரம் திறந்து விடுவாங்க.. மரமெல்லாம் தெரியும்.. குழப்பும் பஞ்சாபகேசன்!

அப்போலோ மருத்துவமனை ஊழியரிடம் விசாரணை நடைபெற்றது.

Google Oneindia Tamil News

சென்னை: ஜெயலலிதா ஜூஸ் குடிக்கும் வீடியோ தொடர்பாக திரும்பவும் குழப்பம் ஆரம்பிச்சாச்சு.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணையை தீவிரபடுத்தி வருகிறது. இதில் சசிகலா தரப்பு உட்பட ஜெயலலிதாவின் பாதுகாவலர்கள் வரை எல்லாரையுமே விசாரித்து வருகின்றனர்.

குறிப்பாக அப்பல்லோ மருத்துவமனையும் விசாரணை வளையத்துக்குள் உள்ளது. எனவே அம்மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நேற்றும்கூட அப்போலோ மருத்துவமனை தொற்று நோய் தடுப்பு சிறப்பு டாக்டர் ராமகோபாலகிருஷ்ணன், தீவிர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் பஞ்சாபிகேசன் உள்ளிட்டோர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்கள்.

 வாக்குமூலம்

வாக்குமூலம்

அப்போது டாக்டர் ராமகோபாலகிருஷ்ணன் தனது வாக்குமூலத்தில் "ஜெயலலிதாவுக்கு இருந்த நோய் தொற்று 15.11.2016 அன்று முழுமையாக சரியாகி விட்டது" என்றார். ஆனால், இதற்கு முன்பு அப்போலோ மருத்துவமனை ஜெயலலிதாவின் இறப்பு அறிக்கையை அளித்திருந்தது.

 புது குழப்பம்

புது குழப்பம்

அதில், "நோய் தொற்றினால் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டு ஜெயலலிதா இறந்தார்" சொல்லப்பட்டிருந்தது. அப்படியானால் உண்மையிலேயே ஜெயலலிதாவுக்கு நோய் தொற்று சாகும்வரை இருந்ததா? அல்லது முழுமையாக சரியாவிட்டதா என்ற புது குழப்பம் எழுந்துள்ளது.

 ஸ்கிரீன் மூடி இருக்கும்

ஸ்கிரீன் மூடி இருக்கும்

அதேபோல, மருத்துவமனை ஊழியர் பஞ்சாபிகேசனிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. ஏனெனில் இவர், ஜெயலலிதா சிகிச்சை பெற்று வந்த ஐசியு ரூமில்தான் டெக்னீஷியனாக வேலை பார்த்து உள்ளர். அவரை அழைத்து ஆணையம் தரப்பில் விசாரிக்கும்போது, "ஜெயலலிதா இருந்த ரூமின் ஜன்னல் கண்ணாடி எப்பவுமே ஸ்கிரீன் போட்டு மூடியே இருக்கும்" என்று சொன்னார். திரும்பவும் குறுக்கு விசாரணை செய்தால், "சில சமயங்களில் திறந்து விடப்படும், அப்போ வெளியில இருக்கிற மரங்கள் தெரியும்" என்று சொல்கிறார்.

 குழப்பும் பஞ்சாபகேசன்

குழப்பும் பஞ்சாபகேசன்

இப்படி மாறி மாறி குழப்புகிறார் பஞ்சாபகேசன். ஏற்கனவே ஜெயலலிதா ஜூஸ் குடிப்பது போன்று இருக்கும் வீடியோ பற்றி நிறைய குழப்பம் இருக்கிறது. இப்போவில் பஞ்சாபகேசனின் இந்த வாக்குமூலத்தினால் திரும்பவும் இந்த வீடியோ சம்பந்தமாக குழப்பம் ஏற்பட்டுள்ளது.

English summary
Apollo Hospital Medical staff Panchapakesan Statement about Jayalalithaa's ICU Ward
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X