சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கோட்டையில் முதல்வர்கள் தேசியக்கொடியேற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி - அப்பாவு புகழாரம்

சென்னை கோட்டையில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி என்று சபாநாயகர் அப்பாவு புகழாரம் சூட்டியுள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு சட்டசபையின் நூற்றாண்டு விழாவும் கருணாநிதி படத்திறப்பு விழாவும் இன்று நடைபெற்றது. விழாவில் வரவேற்று பேசிய சபாநாயகர் அப்பாவு, அரைநூற்றாண்டு காலம் தமிழக அரசியலிலும் சட்டசபையிலும் கோலோச்சிய மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் பெருமைகளை எடுத்துக் கூறினார். சென்னை கோட்டையில் முதல்வர்கள் கொடியேற்றும் உரிமையை பெற்றுக்கொடுத்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.

சட்டசபை நூற்றாண்டு விழாவில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார். விழாவில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமை உரையாற்றினார்.

Appavu praised for Karunanidhi giving the right to hoist the national flag to the chiefs in the fort

விழாவில் வரவேற்புரை நிகழ்த்திய சபாநாயகர் அப்பாவு, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிறப்புகளைப் பற்றி எடுத்துக்கூறினார். சிறப்பு வாய்ந்த சட்டப்பேரவையில் ஐந்து முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் படங்களை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறேன் என்று கூறினார்.

மத்திய அரசிடமே அதிகாரம் குவிந்து விடக்கூடாது, மாநிலங்களுக்கும் பரவலாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்திய திமுக தலைவர் கருணாநிதி, மாநில முதல்வர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுக்கொடுத்த பெருமைக்குரியவர் என்றார்.

ஒரு தேர்தலில் கூட தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெற்று 5 முதல் முதல்வராக இருந்த பெருமைக்குரியவர். சமூக நீதி போராளி, பெண்களுக்கு சம உரிமை, அனைத்து சமுதாய மக்களும் அர்ச்சகராகலாம் என்பன உள்ளிட்ட பல சட்டங்களை தனது ஆட்சிக்காலத்தில் இயற்றிய பெருமைக்குரியவர்.

தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டில் இந்த 5 மாவட்டங்களில்.. 2 நாட்களுக்கு நல்ல மழை பெய்யும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

கருணாநிதி அவர்களின் தாய் மொழி பற்று பற்றி பிற மாநில கலைஞர்களும், பாடலாசிரியர்களும் கூறியுள்ளனர் என்று கூறினார். இதுபோல ஒரு சிறப்பு வாய்ந்த தலைவர் எங்கள் மாநிலத்தில் இல்லையே என்று தெரிவித்துள்ளனர்.

Recommended Video

    Karunanidhi உருவப்படம் கீழே எழுதப்பட்ட வரிகள்! Karunanidhi photo in assembly | OneIndia Tamil

    இத்தகைய சிறப்பு வாய்ந்த முத்தமிழ் அறிஞர் மூத்த தலைவர் கருணாநிதியின் படத்தினை நூற்றாண்டு விழா காணும் சட்டசபையில் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்வதாகவும் சபாநாயகர் அப்பாவு குறிப்பிட்டார்.

    English summary
    The centenary celebrations of the Tamil Nadu Assembly and the inauguration of Karunanidhi's portrait were held today. Welcoming the gathering, Speaker Appavu lauded the colossal late DMK leader Karunanidhi in Tamil Nadu politics and the Assembly for half a century. Karunanidhi was hailed as the one who gave the chiefs the right to hoist the flag at the Chennai fort.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X