சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜோதிமணிக்கு எதிராக உள்ளடி வேலையா.. கரூர் காங். வேட்பாளர் யார்.. பரபரக்கும் சஸ்பென்ஸ்

கரூர் தொகுதியில் ஜோதிமணிக்கு பதிலாக அப்சரா ரெட்டி நிறுத்தப்படலாம் என தெரிகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Thambidurai vs Jothimani:தம்பிதுரைக்கு மறுபடியும் ஏன் சீட்டு.. கலகலக்கும் கரூர்..

    சென்னை: ட்விட்டரில் தம்பிதுரையுடன் போட்ட சண்டையெல்லாம் வீணாகி விடும் போல இருக்கே என்று காங்கிரசின் ஜோதிமணி புலம்ப ஆரம்பித்துள்ளாராம்.

    கரூர் தொகுதியில் திமுக-காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதிமுக சார்பில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியிட உள்ளார்.

    பாஜகவுக்கு எவ்வளவு எதிராக பேசினாரோ, அவ்வளவும் பேசிவிட்டு, திருப்பதி ஏழுமலையானிடம் போய் (பியூஸ் கோயலுடன்) பேசியதெல்லாம் தப்பு.. தப்பு.. என்று சொல்லிவிட்டு, திரும்பவும் அதிமுக-பாஜக கூட்டணிக்கு டபுள் ஓகே சொல்லிவிட்டார். விளைவு.. மீண்டும் வேட்பாளராக களம் இறங்குகிறார்.

    வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா.. வேட்பு மனு தாக்கலில் அசத்திய நாம் தமிழர் ஷாகுல் ஹமீது வண்டி மாடு எட்டு வச்சு முன்னே போகுதம்மா.. வேட்பு மனு தாக்கலில் அசத்திய நாம் தமிழர் ஷாகுல் ஹமீது

     உள்ளடி வேலை

    உள்ளடி வேலை

    இவரை எதிர்த்து களம் காணபோவது காங்கிரசின் ஜோதிமணி என்று சொல்லப்பட்டது. இதற்கு காரணம் இருவரும் ஒரே சமூகம்.. எப்போதும் ஏழாம் பொருத்தம்.. ராகுலுடன் நன்மதிப்பை பெற்றவர் ஜோதிமணி என்பதால்தான். ஆனால் ஜோதிமணிக்கு எப்படி சீட் தரலாம் என்று காங்கிரசுக்குள் எதிர்ப்பு கிளம்பியதுடன் உள்ளடி வேலைகளும் நடக்க ஆரம்பித்தது.

    சென்டிமென்ட்

    சென்டிமென்ட்

    இப்போது ஹைலைட் சமாச்சாரம் என்னவென்றால், ஜோதிமணிக்கு சீட் தர வேண்டாம் என்று திமுகவுக்கு உள்ளேயே பேச ஆரம்பித்துவிட்டார்களாம். இதற்கு காரணம், 2 முறை நின்று தோற்று போய்விட்டார், அதுவும் அதே வேட்பாளரிடமே தோற்றிருக்கிறார், அதனால் சென்டிமென்ட் பார்த்து இந்த முறை ஜோதிமணி வேண்டாம் என்கிறதாம் திமுக.

    அப்சரா

    அப்சரா

    அத்துடன், ஜோதிமணிக்கு பதிலாக திருநங்கை அப்சரா ரெட்டிக்கு ஏன் சீட்டு தரக்கூடாது, புது முகம், தொகுதி மக்கள் மத்தியில் ஒரு புதுமை தெரியும், இவருக்கு சீட் கொடுத்தால் நன்றாக இருக்குமே.. அவரைதான் அந்த தொகுதியில் நிறுத்துவீர்கள் என்று நினைத்தோம்.. அதனால் அப்சராவுக்கே சீட் தரலாம் என்று ஒரு ஐடியாவையும் திமுகவே தந்துள்ளதாம்!

     கலக்கம்

    கலக்கம்

    இந்த தகவல் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஜோதிமணிக்கு இது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. அப்படின்னா இவ்வளவு நாளா தம்பிதுரைக்கு எதிராக ட்விட்டர் போர் நடத்தினது எல்லாம் வீணா? அத்தனையும் வீணா?? என்று ஜோதிமணியின் ஆதரவாளர்கள் புலம்பி வருகிறாராம்!

    English summary
    In the Chennai constituency, it is said that Apsara Reddy will be nominated as a candidate instead of Jothimani
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X