சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்கார் விவகாரத்தில் தப்பினாலும், முருகதாஸ் தலை மீது தொங்குதே 'கத்தி'!

Google Oneindia Tamil News

Recommended Video

    இயக்குனர் அன்பு ராஜசேகர் பேட்டி-வீடியோ

    சென்னை: சர்கார் பிரச்சினையில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பினாலும் கத்தி பட பிரச்சினை ஏ.ஆர்.முருகதாசை விடாமல் துரத்தி வருகிறது. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம், அன்பு ராஜசேகர் பேட்டி.

    கத்தி படத்தின் பிளாஷ் பேக் கதை தன்னுடையது என்று தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் இயக்குனர் அன்பு ராஜசேகர், சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    மருத்துவமனையில் அன்பு ராஜசேகர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

    [முதல்வரிடம் போகிறது "கத்தி" பிளாஷ்பேக் விவகாரம்.. முருகதாஸுக்கு புது சிக்கல்?]

    கத்தி பட கதை

    கத்தி பட கதை

    அப்போது பேசிய அவர் 2012ல் தாக்கபூமி என்ற குறும் படத்தை எடுத்திருந்ததாகவும், உதவி இயக்குனர் வேண்டும் என்று முருகதாஸ் கேட்டு இருந்தபோது, தன்னுடைய குறும் படத்தை அனுப்பி இருந்ததாகவும், அந்த கதைக் களத்தை வைத்து முருகதாஸ் திரைப்படமாக எடுத்து விட்டதாகவும் குற்றம்சாட்டினார். மேலும், 'கத்தி' படத்தின் பிளாஷ் பேக் கதை என்னுடையது என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    குற்றவியல் வழக்கு

    குற்றவியல் வழக்கு

    இது மட்டுமா. முருகதாஸ் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தான் கேட்டு கொண்டதாகவும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், எனவே முதல்வரை சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளதாகவும் கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார்.

     முருகதாசுக்கு சிக்கல்

    முருகதாசுக்கு சிக்கல்

    அன்பு ராஜசேகர் பேட்டியை வைத்து பார்க்கும்போது, இதன் மீது போலீஸ் நடவடிக்கை எடுத்தால் முருகதாசுக்கு சிக்கல் காத்திருப்பதாகவே தெரிகிறது. சர்கார் பிரச்சினை தொடர்பான வழக்கில் முருகதாஸ் முன்ஜாமீன் பெற்றுள்ள நிலையில், இப்பிரச்சினையில் காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    தலைவலி

    தலைவலி

    சர்கார் திரைப்படத்தில் தமிழக அரசு வழங்கிய இலவச பொருட்களை தீக்கிரையாக்குவது போன்ற காட்சியை வைத்திருந்தார், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். மேலும் அந்த காட்சியில், அவரும் நடித்திருந்தார். ஆவேசமாக மிக்சியை தூக்கி தீக்குள் போடுவது போல காட்சி இருந்தது. இதனால் அதிமுக நிர்வாகிகள் பலரும் கோபத்தில் உள்ள நிலையில், புது பிரச்சினை விஸ்வரூபம் எடுத்துள்ளது முருகதாசுக்கு தலைவலியை கொடுத்துள்ளது. படக்குழு மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமம் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேட்டியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Will AR Murugadoss land in another problem now with Kathi film? as story theft issue following him.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X