சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இல்லையெனில்.. நானும் கூட புர்கா அணிந்திருப்பேன் .. மகளுக்காக ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் பதில்

Google Oneindia Tamil News

டெல்லி: ஆண்கள் புர்கா அணியக்கூடாது என்கிறார்கள்.. இல்லையெனில், நானும் கூட புர்கா அணிந்திருப்பேன் என தனது மகள் மீதான விமர்சனத்திற்கு இசைமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதில் அளித்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா, முகத்தை முழுமையாக மூடியபடி புர்கா அணிவது தொடர்பாக சிலர் சர்ச்சைகளை எழுப்பி வருகிறார்கள். அதற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜாவும் தனது பதிலை அளித்துவருகிறார்.

கடந்த சில நாள்களுக்கு முன்பு எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின், கதிஜா புர்கா குறித்து ட்விட்டரில் வெளியிட்ட பதிவு புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

மூச்சுத்திணறல்

மூச்சுத்திணறல்

தஸ்லிமா தனது பதிவில். கதிஜா புர்கா அணிந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அதை விமர்சித்தார். அவர் தனது பதிவில்" எனக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் இசை மிகவும் பிடிக்கும். ஆனால், அவருடய அன்பு மகளைப் பார்க்கும்போதெல்லாம் மூச்சுத்திணறல் ஏற்படுவதைப்போல உணருகிறேன். கலாசாரம் மிக்க குடும்பத்தில் உள்ள படித்த பெண்கள்கூட எளிதாக மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்கிற விஷயம் எனக்கு வருத்தம் அளிக்கிறது" என்று பதிவிட்டிருந்தார்.

பெருமையாக உள்ளது

பெருமையாக உள்ளது

இதற்கு இன்ஸ்டாகிராமில் கதிஜா கடும் பதிலடி கொடுத்தார். தனது பதிவில் ``அன்புள்ள தஸ்லிமா நஸ்ரின், என்னுடைய ஆடையால் உங்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். சுத்தமான காற்றை சிறிதுநேரம் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால், எனக்கு மூச்சுத் திணறலாக இல்லை. மாறாக, பெருமையாகவும் என்னுடைய நடவடிக்கைகளில் உறுதியாகவும் நிற்கிறேன். உண்மையான பெண்ணியம் என்றால் என்ன என்பதை கூகுள் செய்து பாருங்கள்" என்று கூறியிருந்தார்.

நானும் அணிந்திருப்பேன்

நானும் அணிந்திருப்பேன்

இதன்பிறகே சர்ச்சைகள் இன்னும்அதிகமாகனது. சமூக வலைதளங்களில் கதிஜாவுக்கு ஆதரவாகவும், தஸ்லிமாகவுக்கு ஆதரவாகவும் மாறி மாறி விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் தனது மகள் கஜிதாவின் புர்கா குறித்த சர்ச்சைகளுக்கு ஏ.ஆர்.ரகுமான் 'தி குவின்ட்' ஊடகத்திற்கு பதில் அளித்துள்ளார். ``ஆண்கள் புர்கா அணியக்கூடாது என்று சொல்கிறார்கள். இல்லையெனில், நானும் புர்கா அணிந்திருப்பேன்.

மகளுக்கு ஆதரவு

மகளுக்கு ஆதரவு

கடைகளுக்கு போய் விரும்பியதை வாங்கி ஷாப்பிங் செய்வதற்கும், நிலையான ஒரு வாழ்க்கையை கண்டுபிடிக்கவும் புர்கா எளிதாக இருந்திருக்கும். என்னுடைய மகள் சுதந்திரமாக இருக்கிறார் என நினைக்கிறேன். ஏனென்றால், வீட்டில் வேலை செய்பவர்களின் உறவினர்கள் யாராவது இறந்தால்கூட இறுதிச் சடங்கிற்கு அவள் சென்றுவருகிறாள். சமூகம் சார்ந்த அவளுடைய நடவடிக்கைகள் மற்றும் எளிமை ஆகியவற்றைப் பார்க்க ஆச்சர்யமாக உள்ளது" என்று உருக்கமாக தெரிவித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தனது இந்த கருத்தின் மூலம் மகளின் தைரியமான உறுதியான முடிவுக்கு ஆதரவாக உள்ளதை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

English summary
ar rahman supportive comments over his daughter's burqa dress. he said i willing to wear burqa but not allowed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X