சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஊரடங்கில் பசியோடு வாழும் மக்களை நினைக்கையில் எளிதாக தூங்க முடியவில்லை.. ஏஆர் ரகுமான் உருக்கம்

Google Oneindia Tamil News

சென்னை : ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை என ஏஆர் ரகுமான் கவலை தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Live: என்னால தூங்க முடியல A. R. Rahman emotional live video

    இந்தியாவில் கொரோனா தடுக்க மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் வேலைக்கு செல்லாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கிறார்கள். தொழில்நிறுவனங்கள் இயங்காததால் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இல்லாமல், ஊதியமும் இல்லாமல் தவிக்கிறார்கள். வீட்டு வாடகை, வங்கி லோன், தினசரி வீட்டு செலவு எதற்கும் வழியில்லாமல் மக்கள் வேதனையுடன் முடங்கி கிடக்கிறார்கள்.

    அந்த லாரி ஓட்டுநரால் ஏற்பட்ட குழப்பம்.. தருமபுரிக்கு கொரோனா வந்துவிட்டதா?.. நேற்று என்ன நடந்தது?அந்த லாரி ஓட்டுநரால் ஏற்பட்ட குழப்பம்.. தருமபுரிக்கு கொரோனா வந்துவிட்டதா?.. நேற்று என்ன நடந்தது?

    இதற்கிடையே சாமானிய மக்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.அன்றாடம் வேலைக்கு சென்றால்தான் உணவு என்ற நிலையில் உள்ள கோடிக்கணக்கான மக்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அரசு உதவிகளை அளித்து ஆறுதல் அளித்து வருகிறது. எனினும் இந்த உதவியும் போதாத நிலையில மக்கள் இருக்கிறார்கள்.

    ஏஆர் ரகுமான் இசை

    ஏஆர் ரகுமான் இசை

    இந்நிலையில் ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை நினைத்து இரவில் தூங்க முடிவதில்லை என ஏஆர் ரகுமான் கவலை தெரிவித்துள்ளார். புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்து ‘ஹேண்ட்ஸ் அரவுண்ட் த வேர்ல்ட்' என்ற பாடலுக்கு சர்வதேச இசைமைப்பாளர்களுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

    பாடல் அறிமுகம்

    பாடல் அறிமுகம்

    மனிதநேய ஆர்வலர் கென் கிராகனின் முயற்சியில் உருவாகும் இந்த பாடலை ஸ்டீபன் ஸ்வார்ட்ஸ் என்பவர் எழுதி உள்ளார்... இதன்மூலம் வரும் தொகையை காலநிலை மாற்ற திட்டங்களுக்கு செலவு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் பூமி தினத்தை முன்னிட்டு, இன்ஸ்டாகிராம் நேரலையில் பாடல் குறித்து அறிமுகப்படுத்தப்பட்டது.

    தூய்மையான காற்று

    தூய்மையான காற்று

    அந்த நேரலையில் இந்த திட்டத்தின் முக்கிய அங்கம் வகிக்கும் தொழில்நுட்ப தொழில்முனைவோர் நீல் மோர்கன் இணைந்து இப்பாடல் உருவாக்கப்பட்டது குறித்தும், சுற்றுச்சூழல் குறித்தும் ஏஆர் ரகுமான் பேசினார். அப்போது பேசிய மோர்கன் ஊரடங்கு குறித்து பூமியின் மாசு குறைந்திருக்கிறது. தூய்மையான காற்று கிடைக்கிறது. பூமி புதுப்பித்துக்கொள்வது சிறப்பாக இருப்பதாக தெரிவித்தார்.

    பசியில் மக்கள்

    பசியில் மக்கள்

    இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதில் அளிக்கையில் "நான் ஊரடங்கு காலகட்டத்தில் பசியோடும், உதவி கிடைக்காமலும் தவிக்கும் மக்களை பற்றியே எண்ணுகிறேன்.அன்றாட சாப்பாட்டு தேவைக்காக வேலைக்கு செல்ல வேண்டும் என்ற நிலையில் நிறைய மக்கள் இந்தியாவில் இருக்கிறார்கள். அவர்களை நினைக்கும் போது அவ்வளவு எளிதாக தூங்க முடிவதில்லை. அவர்கள் என்ன செய்வார்கள் என்ற எண்ணமே நிரம்பி இருக்கிறது. இந்த பூமியில் அவர்களும் ஒரு பகுதியினர்," என்றார்.

    English summary
    I am worried about the people who are suffering for next day's food. I can't even sleep properly: ar rahman
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X