சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தன்னைப்போல் தவித்த தங்க தமிழ்ச்செல்வன்.. உதவிய செந்தில் பாலாஜி.. சட்டென மாறிய காட்சிகள்

Google Oneindia Tamil News

Recommended Video

    சென்னை: ஸ்டாலின் மட்டுமே தமிழகத்துக்கு நல்லது செய்யவார்..! திமுகவில் சேர்ந்ததும் ஸ்டாலினுக்கு ஐஸ் வைத்த தங்க தமிழ்செல்வன்...

    சென்னை: வாய்பை உருவாக்கி சரியாக வெற்றி பெற்ற செந்தில் பாலாஜி, தன்னை போல் அரசியல் சுழலில் சிக்கிய தங்க தமிழ்செல்வனை திமுகவில் சேர்க்க முக்கிய பங்கு வகித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

    ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் வழங்கப்பட்ட முதல்வர் பொறுப்பு பறிக்கப்பட்ட கோபத்தில் தர்மயுத்தம் தொடங்கினார் ஒ பன்னீர்செல்வம். அப்போது ஆரம்பித்து அதிமுகவில் பிரச்னை. அதன்பிறகு நிறைய குழப்பங்கள் உருவாகி அதிமுக கட்சியையும் சின்னத்தையும் பறிகொடுத்தது.

    இதற்கிடையில் சசிகலா சிறை சென்ற பின்னர் முதல்வராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமி பின்னாளில் தினகரனை ஓரம்கட்டிவிட்டு, அதிமுகவில் ஓ பன்னீர்செல்வத்தை சேர்த்துக்கொண்டு கட்சியையும் சின்னத்தையும் வசப்படுத்த முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த டிடிவி தினகரன் அமமுக என்ற பெயரில் தர்மயுத்தம் தொடங்கினார்.ஆனால் பாஜக செல்வாக்கு காரணமாக கட்சியும், சின்னமும் ஒபிஎஸ் மற்றும் எடப்பாடிக்கு கிடைத்தது.

    தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை... தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை இழந்து அதிமுகவுக்கு செல்ல விரும்பவில்லை... தங்க தமிழ்ச்செல்வன்

    வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி

    வெற்றி பெற்ற செந்தில்பாலாஜி

    இதற்கிடையில் டிடிவி தினகரனை நம்பி சென்ற 18 எம்எல்ஏக்களில் செந்தில் பாலாஜி மட்டும் திடீரென திமுகவுக்கு தாவினார். ஆனால் மற்ற எம்எல்ஏக்கள் யாரும் அதிமுக மற்றும் திமுகவில் இணையவில்லை. செந்தில்பாலாஜிக்க திமுகவில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் பதிவி கொடுக்கப்பட்டது. இதனை சந்தோசமாக ஏற்றுக்கொண்ட செந்தில் பாலாஜிக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தது.

    தேனியில் தோல்வி

    தேனியில் தோல்வி

    இதனை சரியாக பயன்படுத்தி பெரிய அளவில் வெற்றி பெற்று செந்தில் பாலாஜி அரவக்குறிச்சி எம்எல்ஏ ஆனார். ஆனால் அவருடன் அமமுகவில் இணைந்த தங்க தமிழ்ச்செல்வன், தேனி மக்களை தொகுதியில் போட்டியிட்டு வெறும் ஒரு லட்சம் ஓட்டுக்களை மட்டுமே வாங்கி படுதோல்வி அடைந்தார்.

    தேனியில் நடந்த கூட்டம்

    தேனியில் நடந்த கூட்டம்

    அதன்பிறகு விரக்தியில் இருந்த தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைய விரும்பியதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த தினகரன் அவருக்கு பதில் வேறு ஒருவரை அந்த பொறுப்பில் நியமிப்பதற்காக தேனியில் கூட்டம் போட சொன்னார். இதன்படி மதுரை மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை தலைமையில் தேனியில் கூட்டம் போட்டார்.

    ஒபிஎஸ் முட்டுக்கட்டை

    ஒபிஎஸ் முட்டுக்கட்டை

    இதை கேள்விப்பட்டு ஆத்திரம் அடைந்த தங்கதமிழ்செல்வன் டிடிவி தினகரனை போனில் வசைபாடினார். இந்த ஆடியோ வெளியான பின்னர் அதிமுகவில் இணைய தங்க தமிழ்செல்வன் தீவிரமாக முயற்சித்தார். ஆனால் தனக்கு தங்க தமிழ்செல்வனால் பின்னாளில் பிரச்னை வரும் என்பதை அறிந்து ஒ பன்னீர்செல்வம் முட்டுக்கட்டை போட்டாராம்.

    செந்தில்பாலாஜியிடம் ஆலோசனை

    செந்தில்பாலாஜியிடம் ஆலோசனை

    இதனால் அதிருப்தி அடைந்த தங்க தமிழ்ச்செல்வன் தன்மானத்தை அடகுவைத்து அதிமுகவில் இணைவதா என்று வேதனைப்பட்டாராம். இதனிடையே தன்னோடு அதிமுகவில் இருந்து அமமுக வந்து பின்னாளில் திமுகவில் இணைந்த செந்தில் பாலாஜி மற்றும் விபி கலைராஜன் ஆகியோரிடம் தங்கம் ஆலோசனை கேட்டுள்ளாராம்.

    முடிவை மாற்றிய தங்கம்

    முடிவை மாற்றிய தங்கம்

    இதில் செந்தில் பாலாஜி திமுக தலைவர் ஸ்டாலினிம் தங்கம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. அவரும் தேனி மாவட்டத்தை வலுப்படுதத தங்கதமிழ்செல்வன் சரியான ஆள் என பச்சைக்கொடி காட்டியுள்ளார். இதன்பின்னரே செந்தில்பாலாஜி தங்கத்தை திமுகவில் சேரும்படி அழைப்புவிடுத்ததாக தெரிகிறது. இதையடுத்து செந்தில் பாலாஜி அதிமுகவில் சேரும் முடிவை கைவிட்டு திமுகவில் இணைய முடிவு செய்துள்ளார்.

    வலிமை இழந்த அமமுக

    வலிமை இழந்த அமமுக

    இதன்படி இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தங்கதமிழ்செல்வனை தன்னுடைய ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார். இதனிடையே டிடிவி தினகரனின் அமமுக மேலும் தன் வலிமையை இழந்துள்ளது என்றும் அமமுக கூடாரம் வெகுவிரைவில் காலியாகும் என்றும் அங்கிருந்து விலகியர்கள் சொல்வதை கேட்க முடிகிறது.

    English summary
    aravakuruchi mla senthil balaji helps to thanga tamil selvan to join dmk. now thanga tamil selvan get big offer from dmk
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X