சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

குரு சனியால் உயிரை குடிக்கும் புதிய வைரஸ் மக்களை தாக்கும் - எச்சரித்த ஆற்காடு பஞ்சாங்கம்

மழை, புயல், வெள்ளம் பற்றி எச்சரித்த தமிழ் பஞ்சாங்கம் உயிரைக்குடிக்கும் வைரஸ் ஒன்று மக்களை பாதிக்கும் என்று பல மாதங்களுக்கு முன்பே எச்சரித்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    சீனாவில் சாலையில் சுருண்டு விழும் மக்கள்

    சென்னை: விகாரி வருடத்தில் உயிரைக்குடிக்கும் புதிய வைரஸ் ஒன்று தாக்கி மக்களை அலற வைக்கும் என்று கடந்த ஆண்டே வெளியான விகாரி வருஷத்திய ஆற்காடு தமிழ் பஞ்சாங்கம் எச்சரித்துள்ளது. பஞ்சாங்கம் கணித்துள்ளது போலவே சீனாவில் கொரோனோ வைரஸ் பரவி இப்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் பரவியுள்ள கொரோனா வைரஸ் பாதிப்பால் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி நிகழவில்லை எனவே இந்த வைரஸ் பாதிப்பிற்கு குரு சனி கூட்டணி ஏற்பட்டு பிரம்மஹத்தி தோஷம்தான் காரணம் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    கொரோனா வைரஸ் என்று அழைக்கப்படும் இந்த வைரஸானது நுரையீரலைத் தாக்கி நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தும் தன்மைகொண்டது. இந்த நோய்க்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை ஜலதோஷம், தும்மல், தொண்டை வலி மற்றும் காய்ச்சல் ஆகியவைதான் வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறி. தொடர்ந்து நுரையீரலை தாக்கும் வைரஸ் நிமோனியா காய்ச்சலை ஏற்படுத்தி உயிரைக் குடிக்கிறது. நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது.

    காற்றில் பரவும் தன்மை கொண்ட இந்த வைரஸ் வுகான் மாகாணத்திலிருந்து சீனாவின் பிற மாகாணங்களுக்கும் கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி வருவதாகவும் இதுவரை 14 நகரங்களில் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மேலும் பரவுவதைத் தடுக்க வுகான் உட்படப் பல நகரங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு அனைத்து போக்குவரத்துகளும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளன. வுகான் மகாணத்தை விட்டு வெளியே வருவோர் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றனர்.

    நம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.. ஜப்பானுக்கும் பரவிய கொரோனா.. சீனா செல்லாமலே வைரஸ் தாக்கப்பட்ட இளைஞர்! நம்பிக்கை எல்லாம் தகர்ந்தது.. ஜப்பானுக்கும் பரவிய கொரோனா.. சீனா செல்லாமலே வைரஸ் தாக்கப்பட்ட இளைஞர்!

    உயிரை குடிக்கும் வைரஸ்

    உயிரை குடிக்கும் வைரஸ்

    சீனாவில் எலி புத்தாண்டு பிறந்துள்ளது ஆனாலும் கொண்டாட்டங்கள் எதுமின்றி கவலையடைந்துள்ளனர் சீனர்கள் காரணம் கொரோனா வைரஸ் பாதிப்புதான். கடந்த 20 வருடங்களுக்கு முன்பு பரவிய சார்ஸ் வைரஸ் பாதிப்புக்குப் பிறகு இப்போதுதான் சீனா மிகப் பெரிய வைரஸ் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பு பற்றி தமிழ் பஞ்சாங்கம் முன்பே கணித்துள்ளது.

    மனிதர்களுக்கு பாதிப்பு

    மனிதர்களுக்கு பாதிப்பு

    இந்த கொரோனா வைரஸானது விலங்குகளிலிருந்துதான் மனிதர்களுக்குப் பரவுகிறது. இதுவரை வுஹான் மாகாணத்தில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சார்ஸ் வைரஸை பொறுத்தவரை வவ்வாலிலிருந்து அது மனிதர்களுக்குப் பரவியது. அதே போலத்தான் இப்போதும் வவ்வாலிலிருந்து இந்த கொரானா வைரஸ் பரவியிருப்பதாக சொல்கிறார்கள். வவ்வாலிலிருந்து பாம்புகளுக்குப் பரவி பாம்புகள் மூலம் மனிதர்களுக்குப் பரவியிருப்பதாக கூறுகின்றனர். இறந்து போன நாய்கள், கோழி, பன்றி, பாம்பு உள்ளிட்டவற்றின் உடலிலிருந்து இவை பரவுகின்றன. மனிதர்கள், கால்நடைகள், விலங்குகள் பல புதிய நோய்களால் பாதிப்பிற்கு ஆளாகும் என்று எச்சரித்துள்ளது பஞ்சாங்கம்.

    மரணத்தை தரும் வைரஸ்

    மரணத்தை தரும் வைரஸ்

    2019-nCoV எனப்படும் கொரோனோ வைரஸ் முதலில் மனிதர்களின் நுரையீரலை தாக்கக்கூடும் என்கின்றனர் மருத்துவ நிபுணர்கள். இந்த வைரஸ் மனிதர்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரவும் என்று சீனாவின் தேசிய மருத்துவ கமிஷன் அறிவித்துள்ளது. சுவாச பிரச்சனை, காய்ச்சல் மற்றும் இருமல் ஆகியவை இதன் அறிகுறிகள். இந்த வைரஸால் நுரையீரல் உள்பட சுவாச மண்டலத்தின் செல்களிலும் வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் சுவாசிக்க முடியாமல் மரணம் நிகழ்கிறது. இந்த புதிய வகையான உயிரைக்குடிக்கும் வைரஸ் பற்றி பஞ்சாங்கம் முன்பே எச்சரித்துள்ளது.

    உலகம் முழுவதும் பீதி

    உலகம் முழுவதும் பீதி

    இந்த வைரஸ் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்பதால், இதனை தடுப்பதற்கு தற்போதைக்கு ஊசியோ சிகிச்சையோ ஏதுமில்லை. இந்த வைரஸ் இருக்கும் நபர்களிடம் இருந்து தள்ளி இருப்பதன் மூலம் இது பரவாமல் தடுக்க முடியும். சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகிறது. அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், தைவான், தாய்லாந்து, தென்கொரியா உள்ளிட்ட நாடுகளிலும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் உலக நாடுகளும் அச்சத்திற்குள்ளாகி உள்ளன. கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளதால் மருத்துவ அவசரநிலையை அறிவிப்பது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் பரிசீலித்து வருகிறது. பன்றிக் காய்ச்சல், எபோலா வைரஸ் பரவிய காலங்களில் மருத்துவ அவசரநிலை அறிவிக்கப்பட்டது

    விகாரி பஞ்சாங்கம் எச்சரிக்கை

    விகாரி பஞ்சாங்கம் எச்சரிக்கை

    விகாரி புத்தாண்டு சித்திரை 1ஆம் தேதி ஞாயிறுக்கிழமை பிறந்தது. கடகம் லக்னத்தில் சூரியன் ஓரையில் புத்தாண்டு பிறந்தது. சனி ஆறாம் வீட்டில் பலம் பெற்ற குரு உடன் இணைந்திருந்த போது பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டு உலகத்தில் ஒரு புதிய வைரஸ் நோய் ஏற்படும் என்று பஞ்சாங்கம் கணித்துள்ளது.

    உலக பாதிக்கும் வைரஸ்

    உலக பாதிக்கும் வைரஸ்

    விகாரி வருஷ பஞ்சாங்கத்தில் புதிய வைரஸ் நோய் ஒன்று மேற்கு திக்கில் இருந்து உற்பத்தி ஆகும் என்று எச்சரித்துள்ளது. இதற்குக் காரணம் விகாரி வருடத்தில் தன சப்தமாதியான அசுர சுக்கிரன் இந்த ஆண்டு ரஸாதிபதியாக பலம் பெற்றும் பலத்துடன் இருப்பதும் உச்சமான ராஜ கிரகமான சூரியன் மேஷத்தில் உச்சம் பெற்றும் லக்கினத்தில் சந்திரன் ஆட்சி பெற்று நிற்பதும், தேவகுரு பார்த்தும் சுக்கிரன் ராகு சாரம் பலம் பெற்றும் இருக்கிறார். இதன் பலனாக பல புதிய நோய்கள் உற்பத்தி ஆகும். விஷ பூச்சிகளால் மக்களுக்கு அதிக தொல்லைகள் ஏற்படும் என்றும் கணித்துள்ளது.

    சிறுநீரக கோளாறு மரணங்கள்

    சிறுநீரக கோளாறு மரணங்கள்

    விகாரி வருடத்திய தமிழ் பஞ்சாங்கத்தில் மழை, புயல் பற்றி ஏற்கனவே கணித்திருந்தது பலித்தது. அதே போல அரசியல் கட்சி தொடர்புடையவர்களுக்கு சிறுநீராக கோளாறு பாதிப்பு ஏற்பட்டு உயிர் பிரிய நேரும் என்று கணித்திருந்ததும் பலித்தது குறிப்பிடத்தக்கது. சென்னை பெரு வெள்ளம், கஜா புயல், ஒக்கி புயல் பற்றி பஞ்சாங்கம் முன்பே கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கிரகங்களின் சஞ்சாரம், கூட்டணியை வைத்து நோய்களையும், மழை வெள்ளத்தையும் அரசியல் நிகழ்வுகளையும் பஞ்சாங்கம் மூலம் ஜோதிடர்கள் கணிக்கின்றனர்.

    English summary
    The ‘Arcot’ Panchangam, penned by KN Narayanamoorthy, is one of the trusted panchangams and it shot to fame by had predicted rain and accidents. The spread of coronavirus and other deadly diseases are predicted based on the movement of Rahu and Kethu. The eclipses too play a major role in prediction of events that influence the World.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X