மோப்பம் பிடித்த ஸ்பெஷல் டீம்.. அந்த 4 புள்ளிகள்.. "உள்ளே வெளியே" பரபரப்பில் திமுக.. என்ன நடக்கிறது?
சென்னை: திமுக தரப்பில் நித்தம் ஒரு புது தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், அறிவாலயமே பரபரப்புடன் காணப்படுகிறது..!
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் இப்போதைக்கு 34 பேர் அமைச்சர்களாக உள்ளனர்.
3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!
ஆனால், அமைச்சரவை நியமிக்கப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே அமைச்சரவையில் மாற்றம் என்ற செய்திகள் அவ்வப்போகும் வெளியாக ஆரம்பித்தது.

உதயநிதி ஸ்டாலின்
எனினும் அப்படி எந்த மாற்றமும் நிகழ்த்தப்படவில்லை.. அப்படியே மாற்றியமைக்கப்பட்டாலும், அனைத்து துறை அமைச்சர்களுக்கும் இலாகா மாற்றம் நடக்க வாய்ப்பில்லை என்பது தெளிவாக தெரியவந்தது. தற்போது, உதயநிதி ஸ்டாலினை அமைச்சரவையில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வலுத்து வரும்நிலையில், அவருடன் சேர்த்து மேலும் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற தகவலும் வெளியாகி கொண்டிருக்கிறது.. ஆனால் எந்தெந்த துறைக்கான அமைச்சர்கள் மாற்றம் என்பது தெளிவாக தெரியவில்லை..

ரிப்போர்ட்
கடந்த ஒரு மாத காலமாகவே, அமைச்சர்களின் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது பற்றி முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறாராம்.. இதற்காக அவர் தனி கண்காணிப்பு பிரிவு ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த பிரிவானது, தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அமைச்சரும் எப்படி செயல்படுகிறார்கள் என்பது ஆய்வு செய்து வருகிறது.. அதன்படி, அமைச்சர்கள் தங்கள் துறை ரீதியான முடிவுகளை உடனுக்குடன் எடுக்கிறார்களா? என்பது பற்றி ஸ்டாலின் அதில் கண்காணித்து வருகிறராம்..

பாராட்டு
குறிப்பாக, அமைச்சர்கள் தங்கள் துறை பணிகளை நிலுவையில் வைத்துள்ளார்களா? ஏன் நிலுவையில் வைத்துள்ளனர்? என்பது பற்றியும் முதல்வர் ஸ்டாலின் அறிந்து கொள்கிறாராம். இந்த ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான், முடிவுகளையும் அவர் எடுத்து வருவதாக சொல்கிறார்கள்.. சமீபத்தில் ஓராண்டு பூர்த்தியானபோது, சில அமைச்சர்களை நேரிலேயே அழைத்து பாராட்டியிருந்தார் ஸ்டாலின். அதற்கு காரணமும் இந்த ரிப்போர்ட்தானாம்..

அறிவுரைகள்
அந்த குறிப்பிட்ட அமைச்சர்களுக்கு நம்பிக்கையும், தெம்பையும் ஊட்டி உள்ளார்.. அப்போது அவர்களுக்கு சில அறிவுரைகளையும் தந்ததாக தெரிகிறது.. அதேபோல, சில அமைச்சர்கள் மீது அதிருப்திக்கு முதல்வர் ஆளாகி உள்ள நிலையில், அதற்கும் காரணம் இதே ரிப்போர்ட்தான் என்கிறார்கள் திமுகவினர்.. குறிப்பாக 4 பேர் மீது அதிருப்தி உள்ள நிலையில், அவர்களின் இலாக்காக்களை பறிக்கவும் வாய்ப்புள்ளதாக தெரிகிறது.. அந்த 4 பேரையும் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கூடும் என்ற தகவல்கள் பரபரத்த உடனேயே, கட்சிக்குள் பூகம்பமே வெடித்து வருகிறதாம்..

4 பேர் யார்?
எனினும், சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் 3 முறை வாய்ப்பு தந்தும், தொடர் அதிருப்திகள் வந்துள்ள நிலையில், இந்த முறை நிச்சயம் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது.. அப்படி 4 அமைச்சர்கள் நீக்கப்பட்டால் அவர்களுக்கு பதில் 4 புதியவர்கள் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்ற இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.. அதுமட்டுமல்ல, அந்த 4 பேருமே இளைஞர்களாக இருப்பார்கள் என்றும் கொசுறு தகவல் பரவி கொண்டிருக்கிறது.. அவர்கள் யார் என்பதே அறிவாலயத்தை வட்டமடிக்கும் கேள்வியாக உள்ளது.. பார்ப்போம்..!