டெல்லியும் விடாது! கோட்டையும் விடாது! அதிமுகவின் 4 டாப் புள்ளிகளுக்கு குறி.. போகிற பக்கமெல்லாம் கேட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவை சேர்ந்த 4 டாப் தலைகளுக்கு டெல்லி குறி வைத்து உள்ளது. இன்னொரு பக்கம் தமிழ்நாடு அரசும் இவர்கள் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளதால் அதிமுகவிற்கு கடுமையான நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லி சென்று இருக்கிறார். வேலுமணி உள்ளிட்ட முக்கிய தலைகளுடன் அவர் டெல்லி சென்று இருக்கும் நிலையில்தான் தற்போது சிபிஐ அமைப்பு அதிமுக முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கரை குறி வைத்து உள்ளது.

குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணாவிற்கு எதிராக சிபிஐ கடிதம் எழுதியுள்ளது. 12 பேர் மீது வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசிடம் அனுமதி கேட்டு சிபிஐ கடிதம் எழுதியுள்ளது.

 ஏற்பு

ஏற்பு

இந்த கடிதத்தை தமிழ்நாடு அரசு ஏற்கும் என்று ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முறையாக வழக்கு பதிய இன்று தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்தது. தமிழ்நாட்டில் சட்ட விரோதமான குட்கா விற்பனைக்கு பின்னணியில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மற்றும் காவல்துறை டிஜிபி ஆகியோர் லஞ்சம் வாங்கி இருப்பதாக 2017ல் புகார் எழுந்தது. இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக்கோரி அப்போதைய திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

வருமான வரித்துறை ரெய்டு

வருமான வரித்துறை ரெய்டு

40 கோடி ரூபாய் வரை இதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் வைக்கப்பட்டது. இதில் ஏற்கனவே வருமான வரித்துறை ரெய்டு நடந்த நிலையில்தான் தற்போது சிபிஐ வழக்கு பதிவு செய்ய தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்துள்ளது. ஏற்கனவே சி விஜயபாஸ்கருக்கு எதிராக தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடைபெற்று வழக்கு உள்ளது. முறைகேடாக 27 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு உள்ளது.

புகார்

புகார்

இது போக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர் சந்திரசேகர் வீட்டில் வருமானவரித்துறையினர் கடந்த சில நாட்களுக்கு முன் சோதனை செய்தனர். 2 நாட்களாக இவரின் வீட்டில் சோதனை செய்தனர். எஸ்.பி.வேலுமணியின் ஆதரவாளர் மற்றும் நண்பர்தான் சந்திரசேகர். இதில் பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. எஸ்.பி வேலுமணி மற்றும் சந்திரசேகர் வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறையும் இரண்டு முறை ரெய்டு நடத்தியது.

ரெய்டு

ரெய்டு

அதாவது வருமான வரித்துறை ரெய்டு இல்லாமல் அதற்கு முன்பே இரண்டு முறை லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டு நடத்தியது. லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டில் எஸ். பி வேலுமணி உட்பட 17 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. எஸ்.பி வேலுமணி அவருக்கு நெருக்கமான அன்பரசன், கே. சந்திரபிரகாஷ், ஆர். சந்திரசேகர், ஆர் முருகேஷ் ஆகியோர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

எடப்பாடி

எடப்பாடி

இது போக நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் செய்யாதுரையின் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறை சார்பாக சோதனை செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமியின் சம்மந்தி - செய்யாதுரை இருவருக்கும் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது. அரசின் ஒப்பந்தங்களை இவருக்கு முறைகேடாக கொடுத்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை வளையத்தில் செய்யாதுரை இருக்கும் நிலையில், அவரை வருமான வரித்துறையும் குறி வைத்துள்ளது.

காமராஜ்

காமராஜ்

இது போக செய்யாதுரையின் ஆடிட்டர்தான் காமராஜ் நடத்தும் நிறுவனத்திற்கும் ஆடிட்டர் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டு பேருக்கும் ஒரே ஆடிட்டர். அவர் மயிலாப்பூரை சேர்ந்தவர். இதன் காரணமாக மாஜி அமைச்சர் காமராஜும் வருமானவரித்துறை மூலம் சோதனை செய்யப்பட்டார். லஞ்ச ஒழிப்புத்துறையும் அதே நாளில் காமராஜ் வீட்டில் ரெய்டு நடத்தியது. இதையடுத்து காமராஜ் உட்பட 6 பேர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. வருமானத்திற்கு அதிகமாக 59 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக இவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

குறி

குறி


மொத்தத்தில் 4 பேர் அதிமுகவில் டெல்லி மூலமும் ( வருமான வரித்துறை, சிபிஐ), தமிழ்நாடு அரசு (லஞ்ச ஒழிப்புத்துறை) மூலமும் குறி வைக்கப்பட்டு உள்ளனர்.

எஸ்.பி வேலுமணி - சந்திரசேகர் - வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை
செய்யாதுரை (எடப்பாடி சம்மந்தி) - வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை
காமராஜ் - வருமான வரித்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை
விஜயபாஸ்கர் - சிபிஐ மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+