• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"ஏஏ.. ஆம்பளையா இருந்தா".. பட்டென திரும்பி சவுண்ட விட்ட சி.வி. சண்முகம்.. விக்கித்து போன விழுப்புரம்

Google Oneindia Tamil News

சென்னை: "ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம்" என்று மேடையிலேயே சட்டம் படித்த, சட்டத்துறை அமைச்சராக இருந்த சிவி சண்முகம் சவால் விட்டுள்ள சம்பவம் பெரிதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது..!
ஆவேசமாக பேசுவதில் அதிமுகவின் சிவி சண்முகத்தை அடிச்சிக்க ஆளே இல்லை.. பொதுக்கூட்டம் என்றாலும் சரி, பொதுஇடம் என்றாலும் சரி, செய்தியாளர்கள் பேட்டி என்றாலும் சரி, ஆவேசமாக பேசுவார்.. பாயிண்ட் பாயிண்ட்டாக கேள்வி எழுப்புவார்.

ஆரம்ப காலம் முதல் இப்போது வரை சிவி சண்மும் பேச்சு என்றால், பரபரப்பை கூட்டிவிடும்.. சில சமயம், ஏழரையை இழுத்துக் கொண்டு வந்து, கோர்ட் கேஸ் வரை கூட சென்றுவிடும்.

திமுகவுக்கு போவாரோ.. பாஜகவில் இருப்பாரோ.. 'எங்களை அழிக்க முடியாது’ - கொட்டித் தீர்த்த சிவி சண்முகம்! திமுகவுக்கு போவாரோ.. பாஜகவில் இருப்பாரோ.. 'எங்களை அழிக்க முடியாது’ - கொட்டித் தீர்த்த சிவி சண்முகம்!

 எங்க வேணும்னாலும் போவேன்

எங்க வேணும்னாலும் போவேன்

இப்படித்தான், கடந்த வாரம் எஸ்பி வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் வீட்டில் ரெய்டு நடந்து கொண்டிருந்தது.. அப்போது விஜயபாஸ்கர் வீட்டிற்குள் தன்னையும் அனுமதிக்குமாறு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். "இது ஜனநாயக நாடா? என்ன நாடு இது? நீங்க யார் கேட்க? நான் எங்க வேண்டுமானாலும் போவேன்.. அதை எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை" என்று வாக்குவாதம் செய்ததை தமிழகமே வேடிக்கை பார்த்தது.

 கோபாலபுரம்

கோபாலபுரம்

அதுமட்டுமல்ல, அதிமுக அலுவலகம் மீதான தாக்குதல் வழக்கின்போது திமுக அரசை ஆவேசமாக கேள்வி கேட்டார்.. இன்னும் 2 நாட்களுக்குள் விசாரணையை தொடங்காவிட்டால் சிபிசிஐடி அதிகாரிகள் மீது புகார் தருவேன்.. கோபாலபுரத்தில் மாவு ஆட்டிக் கொண்டிருக்கிறார்களா? என்று கடும் கோபத்தோடு கேள்வி எழுப்பினார்.. இப்போதும் சண்முகம் ஆவேசமாக பேசியிருக்கிறார்.. விழுப்புரம் மாவட்டம், வானூர் சட்டமன்ற தொகுதி திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடந்தது... இந்த கூட்டத்தில் சி.வி.சண்முகம் சிறப்புரையாற்றினார்.

 இனிக்குதோ

இனிக்குதோ

நன்றாகத்தான் பேசிக் கொண்டிருந்தார்.. திடீரென ஆ. ராசாவை விமர்சிக்க ஆரம்பித்தார்.. "ஆரம்ப காலத்தில் இந்தியாவில் இருந்தவர்கள் எல்லாம் இந்துக்கள்தான்... அப்படி இருக்கும்போது தவறாக ஆ.ராசா பேசி உள்ளார். அப்படியானால் இந்துகள் ஓட்டு மட்டும் இனிக்கிறதா?" என்று ஒரு கேள்வியை கூட்டத்தினரை பார்த்து கேட்டார்.. சிவி சண்முகம் இப்படி கேட்டதுமே, மேடையில் பின்புறத்தில் இருந்த சில திமுகவினர் எதிர்ப்பு குரல் எழுப்பினார்கள்.. இதனால் சண்முகம் இன்னும் டென்ஷனாகிவிட்டார்..

 உச்சக்கட்டம் & சேலஞ்ச்

உச்சக்கட்டம் & சேலஞ்ச்

மேடையில் பேசிக்கொண்டிருந்தபோதே ஆவேசத்தின் உச்சக்கட்டத்திற்கு சென்று விட்டார்... இதோ, இப்படி மிரட்டல் விடுக்கும் திமுகவுக்கு எல்லாம் பயப்படுபவன் நான் கிடையாது.. ஆம்பளையா இருந்தா நேருக்கு நேர் வாடா பார்ப்போம் என்று மேடையிலேயே சவால் விட்டார். தொடர்ந்து பேசியவர், "என்னை மிரட்டலாம், உருட்டலாம்... ஆனால் அசைக்கலாம் என்று மட்டும் நினைக்காதீங்க.. என்ன தான் இரும்பு கோட்டை வைத்தாலும் போகிற உயிர் போக தான் செய்யும். அதற்காக உயிருக்கு பயந்து அடங்கி ஒடுங்கி இருப்பவன் அதிமுக தொண்டனும் இல்ல.. இந்த சண்முகமும் இல்லை' என்று சத்தமாக பேசினார்.

 செக்

செக்

அதுமட்டுமல்ல, தொடர்ந்து பேசிய சண்முகம், "போலீசார்கள் நேர்மை, நியாயத்துடன் இருக்க வேண்டும்... ஆட்சி மாறும்போது எல்லாம் தெரியும்" என்று ஒரு செக் வைத்து, போலீசாருக்கெல்லாம் ஒரு ஜெர்க் தந்தார்.. இதனால், அந்த கூட்டம் முழுவதுமே உஷ்ணமடித்து கொண்டிருந்தது.. இந்த பேச்சுதான் இணையத்தில் அதிமுகவினரே ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார்கள்.

English summary
Are DMK and alliance against Hindus and Ex AIADMK Minister CV Shanmugams Vizhupuram speech
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X