சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிஸ்ஸாயிடுச்சே.. 2 அம்புகள்.. மேலிடத்துக்கு எடப்பாடி தந்த ஸ்ட்ராங் "மெசேஜ்".. ஓபிஎஸ்ஸுக்கு தலைவலி

எடப்பாடி பழனிசாமிக்கு 2 விதமான நெருக்கடிகளை ஓபிஎஸ் டீம் தர துவங்கி உள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: 2 விதமான நெருக்கடிகளை ஓபிஎஸ் டீம் தந்து கொண்டிருக்கும் நிலையில், எதற்கும் அசராமல் அதே கெத்துடன் காணப்படுகிறாராம் எடப்பாடி பழனிசாமி..!!!

சட்டரீதியான போராட்டங்களை ஓபிஎஸ் + எடப்பாடி இரு தரப்புமே எடுத்து வருவதால், இன்னும் அதிமுக விவகாரம் ஒரு முடிவுக்கு வரவில்லை..

அதேசமயம், அதிமுக பலவீனப்பட்டு இருப்பதை, பாஜகவும் விரும்பவில்லை.. கட்சி ஒன்றாக இருக்க வேண்டும் + வலுவில்லாமலும் இருக்க வேண்டும் என்றே கணக்கு போடுகிறது..

அன்பு மலர்களே.. மீண்டும் இணையும் ’இரட்டை இலை’? எட்டிப்பார்த்த 'மாஜிக்கள்’! கதவை அடைத்த எடப்பாடி! அன்பு மலர்களே.. மீண்டும் இணையும் ’இரட்டை இலை’? எட்டிப்பார்த்த 'மாஜிக்கள்’! கதவை அடைத்த எடப்பாடி!

 PLAN 1

PLAN 1

மேலும், திமுகவை எதிர்க்க வேண்டும் என்றால், அது அதிமுகவால் மட்டுமே முடியும் என்பதை பாஜக ஆரம்பம் முதலே நம்பிக் கொண்டிருக்கிறது.. தமிழகத்தில் 10 எம்பி சீட்டுக்களையாவது பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகிறது.. அதற்காகவே அதிமுகவின் இணக்கத்தை விரும்புகிறது.. கடந்த சில மாதங்களாகவே, அதிமுகவின் உட்விவகாரங்களில் பாஜக தலையிடாத நிலையில், தற்சமயம், இவர்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும், அதற்காக மறைமுக அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

 PLAN 2

PLAN 2

பாஜக தலையிட துவங்கியதாக தகவல்கள் கசிந்ததுமே, ஓபிஎஸ் டெல்லிக்கு செல்கிறார் என்றும், பிரதமர் மோடி, அமித்ஷா இருவரையும் சந்தித்து பேச போவதாகவும், வைத்திலிங்கம் பேட்டி தந்துள்ளார்.. அதிமுகவில் எந்த அடி எடுத்து வைத்தாலும் அதன்மூலம் இந்த நிமிடம்வரை, எடப்பாடி பழனிசாமிக்கு பெரிதாக பலன் கிடைக்கவில்லை.. எடுத்த முயற்சிகள் எல்லாமே தோல்வியில் உள்ள நிலையில், வழக்குகள், விசாரணைகள் கழுத்தை நெரிக்கும்நிலையில், பாஜகவின் மறைமுக பிரஷர் உள்ள நிலையில், கெத்தாக இருக்கிறாராம் எடப்பாடி பழனிசாமி.

மெசேஜ்

மெசேஜ்

இந்நிலையில்தான், எடப்பாடி பழனிசாமி தந்துள்ள பேட்டி, அதிமுகவுக்குள் மேலும் டென்ஷனை கூட்டி உள்ளது.. "அதிமுகவிற்கு எதிராக செயல்படுபவர்களை இனி கட்சியில் சேர்க்க வாய்ப்பே இல்லை... அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது... ஒரு கட்சி விவகாரத்தில் இன்னொரு கட்சி தலையிட முடியாது என்று தி்ட்டவட்டமாக கூறியுள்ளார் எடப்பாடி பழனிசாமி.. இது ஓபிஎஸ் + பாஜக என இரு தரப்புக்குமே விடுக்கப்பட்ட மெசேஜ் போலவே பார்க்கப்பட்டு வருகிறது..

 தினகரன் சாய்ஸ்

தினகரன் சாய்ஸ்

இது தொடர்பாக அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் நாம் பேசினோம்.. அவர்கள் நம்மிடம் சொன்னதாவது: அதிமுகவை இணையவைப்பதுதான் பாஜக முடிவாக உள்ளது.. காரணம், தமிழகத்தை பொறுத்தவரை, திமுகவைவிட அதிமுகவுக்குதான் வாக்கு வங்கி எப்போதும் அதிகம்.. இத்தனைக்கும் டிடிவி தினகரன் பிரித்த வாக்குகள் அதிமுகவுடையதுஎன்றாலும், அதிமுகவின் தொண்டர்கள் பலத்தில் யாரும் "கை" வைக்க முடியாது.. ஆனால், திமுகவின் அசுர வளர்ச்சி பார்த்தபிறகுதான், டிடிவியையும் கட்சிக்குள் இழுத்து கொண்டு வர பாஜக முயற்சிக்கிறது..

 41000 + கோடி

41000 + கோடி

பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும் என்று சொல்வது, ஓபிஎஸ், எடப்பாடிக்கு மட்டுமில்லை, சசிகலா, தினகரனுக்கும் சேர்த்துதான்.. இதையெல்லாம் எடப்பாடி அறியாமல் இல்லை.. தெரிந்துதான், இப்படிபேட்டி தந்துள்ளார்.. என்னதான், புதிய நிர்வாகிகளை நியமித்து ஓபிஎஸ் அதிரடிகளை காட்டினாலும், எடப்பாடியின் தொடர்பிடிவாதம் அவரை அப்செட்டில் மூழ்கடித்துள்ளது.. அதனால்தான், எடப்பாடி பழனிசாமியின் ஊழல் விவகாரங்களை, ஓபிஎஸ் டீம் பகிரங்கப்படுத்த துவங்கி உள்ளது.. நேற்றைய தினம் ஜேசிடி பிரபாகர் பேட்டியின் சாராம்சமும் அதை நோக்கி நகர்ந்து செல்லும் அரசியல்தான்..

 2 மேட்டர்

2 மேட்டர்

ஒருபக்கம் மோடியை சந்திக்க போகிறோம், இன்னொரு பக்கம் 41 ஆயிரம் கோடி ஊழல் விவகாரம் என இரண்டு மேட்டர்களையும் ஒரே நாளில் கையில் எடுத்துள்ளனர்.. நவம்பர் 21ம் தேதி என கெடு ஒன்றையும் விதித்துள்ளார்.. ஊழல் தொடர்பாக விடுக்கப்பட்ட கெடு இதுவென்றாலும், கட்சியில் ஒன்றிணைய விடுக்கப்பட்ட கெடுவாகவே இது பார்க்கப்பட்டு வருகிறது.. எதற்கும் ஒத்துவராமல் இருக்கும் எடப்பாடி, 41 ஆயிரம் கோடி விவகாரத்திலாவது இணைவாரா? என்று பார்க்கலாம்" என்றனர்.

கிடுக்கிப்பிடி

கிடுக்கிப்பிடி

இன்னொரு விஷயம் எடப்பாடி தரப்பில் இருந்து கசிந்துள்ளது.. கடந்த சில நாட்களாகவே, அதாவது சுப்ரீம்கோர்ட்டின் உத்தரவு எடப்பாடிக்கு பின்னடைவாக வந்ததில் இருந்தே, ஓபிஎஸ்ஸை தென்மண்டல முக்கிய புள்ளிகள் விமர்சிக்காமல் உள்ளனர்.. இந்த விஷயம் எடப்பாடியின் கவனத்துக்கு சென்றுள்ளது.. இதை கேட்டுதும் அதிர்ந்துபோனாராம்.. தென்மண்டல வாக்குகளை எப்படியாவது பெற வேண்டும் என்பதற்காகத்தான் 6 மாதமாக வியூகம் அமைத்து வருகிறார்.. அதற்காகவே பலரது எதிர்ப்பையும் மீறி முக்குலத்தோர் புள்ளிகளுக்கு போஸ்டிங்கும் ஒதுக்கி தரப்பட்டுள்ளது.. அப்படி இருந்தும், ஓபிஎஸ்ஸை விமர்சிக்க தயங்குபவர்கள் யார் என்ற லிஸ்ட் எடுக்க சொல்லி உள்ளாராம்.. அதுமட்டுமல்ல, ரகசிய டீம் ஒன்றை இதற்காகவே நியமித்து தென் மாவட்டங்களை உன்னிப்பாக கண்காணிக்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளாராம்.

English summary
Are Edapadi palanisamy and OPS ready to join soon and What will TTV Dinakaran do next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X