India
 • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அவசர அவசரமாக.. ஓபிஎஸ் வீட்டுக்கு ஓடிவந்த மனோஜ், வைத்திலிங்கம்.. "ஐயா.. விட்ராதீங்க".. கதறும் வாய்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: ஹைகோர்ட் இன்று புது உத்தரவை பிறப்பித்துள்ள நிலையில், ஏராளமான ஆதரவாளர்கள் ஓபிஎஸ் வீட்டின் முன்பு கூடி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சிக்குள் மட்டுமே இதுவரை வாதங்களாக நடந்து வந்த விஷயம், இப்போது சட்டரீதியாகவும் விஸ்வரூபமெடுத்துள்ளது....

  இபிஎஸ்ஐ கண்டித்து ஓபிஎஸ் அணியினர் கொளத்தூரில் கண்டன ஆர்ப்பாட்டம் - வீடியோ

  இதனிடையே, அதிமுகவின் பொதுக்குழுக் கூட்டம், 11ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதுகுறித்த எதிர்பார்ப்புகள் எகிற ஆரம்பித்தன.

  பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர! பிளான் பி.. பொதுக்குழு திட்டத்தில் அதிரடி மாற்றம்? ஆன்லைனில் அதிமுக பொதுக்குழு?- எடப்பாடி டீம் பரபர!

  சிக்கல்

  சிக்கல்

  இந்த கூட்டத்தை வேறு இடத்தில் நடத்த முடிவு செய்து, அதற்காக பல இடங்களையும் பார்த்தனர்.. ஆனால், கடைசியில், வானகரம் திருமண மண்டபத்திலேயே நடத்த, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் முடிவு செய்தனர்.. ஆனால், இந்த பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி, ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கோர்ட்டுக்கு சென்றனர்.. எப்போது சட்ட ரீதியான நடவடிக்கையை ஓபிஎஸ் கையில் எடுத்தாரோ, அப்போதே எடப்பாடிக்கு பெரும் சிக்கலையே அது ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டதாக கூறப்படுகிறது..

   பொருளாளர் பதவி

  பொருளாளர் பதவி

  ஒருவேளை அதையும் மீறி, திட்டமிட்டபடி பொதுக்குழு நடந்தால், ஓபிஎஸ்ஸிடம் உள்ள பொருளாளர் பதவியும் பறிக்கப்படும் என்றும் அதேசமயம், பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, தற்காலிக பொதுச்செயலராக பழனிசாமியை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வட்டமடிக்க துவங்கிவிட்டன.

   தனி நீதிபதி

  தனி நீதிபதி

  இந்நிலையில், சென்னை ஹைகோர்ட்டில், பொதுக்குழு குறித்த மேல்முறையீடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், "பழைய உத்தரவுகள் அனைத்தும் ஜுன் 23 பொதுக்குழுவிற்கு மட்டுமே பொருந்தும்.. மேலும், பொதுக்குழுவுக்கு தடை விவகாரத்தில் தலையிட முடியாது, பொதுக்குழுவுக்கு தடை கோரி தனி நீதிபதியைத்தான் அணுக வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுரை வழங்கியுள்ளனர்.. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி நியமிக்கப்பட்ட அவைத்தலைவர் நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓபிஎஸ் தரப்பில் வாதிடப்பட்டு வருகிறது.

  ஆச்சரியம்

  ஆச்சரியம்

  நீதிபதிபதிகளின் இந்த அதிரடி முடிவானது, எடப்பாடி தரப்புக்கு இன்ப அதிர்ச்சியையும், ஓபிஎஸ் தரப்புக்கு கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.. இன்றைய தினம் கோர்ட்டில் விசாரணை வர உள்ள நிலையில், காலையில் இருந்தே ஓபிஎஸ் - எடப்பாடி இரு தரப்பிலுமே பிஸியானார்கள்.. இருவரின் வீடுகளுமே மிகுந்த பரபரப்பில் காணப்பட்டது.. பாதகமான உத்தரவு வந்துவிட்டால், அடுத்து என்ன செய்வது என்ற ஆலோசனையில் இரு தரப்புமே இறங்கினர்.

   மனோஜ் பாண்டியன்

  மனோஜ் பாண்டியன்

  எடப்பாடி பழனிசாமி வீட்டுக்குள் ஒவ்வொரு தலைவர்களாக உள்ளே சென்று கொண்டே இருந்தனர்.. மறுபக்கம், அவர் வீட்டு வாசலில் ஏராளமான தொண்டர்கள் குவிந்தனர்.. அதிமுக கொடி மற்றும் இரட்டை விரலை காண்பித்து எடப்பாடிக்கு ஆதரவாக கோஷம் எழுப்பினார்கள்.. அதேபோல, ஓபிஎஸ் வீட்டிலும் சீனியர்கள் குவிந்தனர்.. அதிலும் மனோஜ் பாண்டியனும், வைத்திலிங்கமும் காரை விட்டு இறங்கி திபுதிபுவென ஓபிஎஸ் வீட்டுக்குள் ஓடியதை காண முடிந்தது. இவர்கள் வீட்டிற்குள் நுழையும் நேரம்தான், ஹைகோர்ட்டில் பரபரப்பான வாதங்கள் நடந்து கொண்டிருந்தது.

  ஆக்ரோஷம்

  ஆக்ரோஷம்

  அதற்குள், கிரீன்வேஸ் சாலையில் உள்ள ஓபிஎஸ் வீட்டு முன்பு தொண்டர்கள் குவிந்தனர்.. பிறகு சற்று நேரம் கழித்து ஓபிஎஸ் வெளியே வந்தார்.. "ஐயா, அவங்களை விடாதீங்க.. நீங்கதான் வரணும்" என்று ஓபிஎஸ்-யிடம் ஆக்ரோஷமாக தொண்டர்கள் கூறினார்கள்.. அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார் ஓபிஎஸ்.. பிறகு ஒரு பெண் தொண்டர் ஓபிஎஸ்ஸை பார்த்ததுமே, "உங்க கூட நாங்க இருக்கோம் ஐயா.. அம்மாவுடைய கட்சி நமக்குதான்" என்றார்.. ஓபிஎஸ்ஸூக்கு தெரிந்த நிர்வாகி ஒருவர் அங்கு வந்து நின்றார்.. அவரை பார்த்ததுமே தோளில் தட்டிக்கொடுத்து பேசினார் ஓபிஎஸ்.

  கிருஷ்ணன்

  கிருஷ்ணன்

  இந்த ரணகளத்திலும், சிலர் ஓபிஎஸ்ஸுடன் செல்பி எடுக்க வந்தனர்.. ஓபிஎஸ்ஸும் அவர்களுக்கு எந்தவிதமான மறுப்பும் காட்டாமல் செல்பி எடுக்க ஒத்துழைப்பு தந்தார்.. பிறகு, மறுபடியும் நிர்வாகிகளுடன் வீட்டுக்குள் சென்று ஆலோசனையில் ஈடுபட்டார்.. இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்றும், தானும் போட்டியிட இருப்பதாக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் திடீரென அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  English summary
  Are Edappadi Palaniswami, supporters ready for the admks general body and what will ops do the next : எடப்பாடி, ஓபிஎஸ் இருவர் வீட்டிலும் ஆதரவாளர்கள் குவிந்து வருகிறார்கள்
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X