சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"திமிங்கிலம்" பெருஸ்ஸா மாட்டிக்கிச்சே.. 2 புள்ளியை "தூக்க போறாங்க".. அதிர்ந்த பாஜக.. மாஸ்டர் மைண்ட்

Google Oneindia Tamil News

சென்னை: பாஜகவுக்கு கடுப்பை தரக்கூடிய அளவுக்கு திமுக தன் வேகமான காய்நகர்த்தலை துவங்கி உள்ளது. அதற்கேற்றபடி ஒரு முக்கியமான செய்தி, அரசியல் களத்தை வட்டமடித்து கொண்டுமிருக்கிறது.

ஒரு கட்சியின் பலவீனங்களில்தான் இன்னொரு கட்சியின் வளர்ச்சி ஆரம்பமாகிறது என்பது பொதுவான அரசியல் லாஜிக்.. இதை மிக சரியாக கையாண்டு, அதற்கேற்ப காய் நகர்த்தல்களை செய்து வருவது பாஜகதான்.

இந்த யுக்திதான் பெருவாரியான மாநிலங்களில் பாஜகவுக்கு கை கொடுத்து வருகிறது.. வலுவான கட்சியே என்றாலும்கூட, அதன் அடிப்படை பலவீனங்களை நோண்டி வெளியே கொண்டு வந்து, அதன்மூலம் அவர்களை டேமேஜ் செய்து, அந்த டேமேஜின் மூலம் தங்கள் இமேஜை உயர்த்த பார்க்கும் தந்திரம்தான்.

பாஜகவுக்கு விழுந்த அடி.. இடைத்தேர்தலில் 3-லும் அவுட்! உ.பி செட்பேக் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா?பாஜகவுக்கு விழுந்த அடி.. இடைத்தேர்தலில் 3-லும் அவுட்! உ.பி செட்பேக் லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா?

 டேமேஜ்ஜா

டேமேஜ்ஜா

பல மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சியை எட்டிப்பிடிக்க உதவியதே இந்த பாணி அரசியல்தான்.. தற்சமயம் தமிழகத்தை குறி வைத்து மேலிட பாஜகவின் அரசியல் நகர்ந்து வருகிறது.. திமுக அரசை எப்படியாவது டேமேஜ் செய்துவிட வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி உள்ளது. இதற்காக கடந்த 6 மாத காலமாகவே திமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களையும், குற்றச்சாட்டுகளையும் தமிழக பாஜக சுமத்தி வருகிறது. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளில் ஒன்றைகூட ஆதாரப்பூர்வமாக தமிழக பாஜக நிரூபிக்கவில்லை என்பது வேறு விஷயம்.

 மூலதனம்

மூலதனம்

அதேசமயம், திராவிட கட்சிகளின் முதுகில் சவாரி செய்துதான் தேர்தலை சந்திக்க வேண்டிய நிலைமையில்தான் பாஜக இருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.. அதற்கேற்றவாறு அதிமுகவில் நிலவும் பூசல்கள் மற்றம் பலவீனங்களை, பாஜகவின் மூலதனமாக்கி கொண்டதுடன், அதே அதிமுகவைதான் தேர்தலிலும் நம்பி உள்ளது. சுருக்கமாக சொல்லப்போனால், அதிமுகவை மறைமுகமாகவும், திமுகவை நேரடியாகவும் எதிர்க்கும் அரசியலை பாஜக மேற்கொண்டு வருவதாகவே அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

போஸ்டிங்

போஸ்டிங்

அந்தவகையில், கடந்த ஒரு வருட காலமாகவே, தமிழக கட்சிகளில் உள்ள அதிருப்தியாளர்களுக்கு பாஜக வலையை விரித்துள்ளது.. அப்செட்டில் உள்ளவர்கள், சீட் கிடைக்காமல் ஒதுங்கி இருப்பவர்கள், போதுமான அங்கீகாரம் தராமல் ஒதுக்கப்பட்டவர்கள், போஸ்டிங் கிடைக்காதவர்கள், இப்படியானவர்களுக்கு தூண்டிலை வீசி வருகிறது. எனினும், சொல்லி கொள்ளும் அளவுக்கு அதிமுக, திமுக தரப்பில் இருந்து பாஜக பக்கம் யாரும் தாவவில்லை என்பதே உண்மை. இன்னும் சொல்லப்போனால், திமுக மீது அதிருப்தி கொண்டு, பாஜக பக்கம் தாவிய சீனியர்கள் சிலர், மறுபடியும் திமுகவுக்கே வரப்போகிறார்களாம் கு.க.செல்வத்தை போல.

 ஹாட் நியூஸ்

ஹாட் நியூஸ்

போதாக்குறைக்கு, தமிழக பாஜகவுக்குள்ளேயே சறுக்கல்களும், சர்ச்சைகளும், பூசல்களும் வெடித்து கிளம்பி உள்ள நிலையில், அக்கட்சியில் சேருவதற்கு யாரும் பெரிதாக ஆர்வம் காட்ட மாட்டார்கள் என்றே சொல்கிறார்கள்.. அதுமட்டுமல்ல, சமீபகாலமாக நிகழும் பாஜக பூசல்களினால், காயத்ரி ரகுராம், டெய்ஸி போன்ற பெண் நிர்வாகிகள் அதிருப்திக்குள்ளாகி விட்டனர். இதையடுத்து, இந்த 2 பெண்களையுமே தங்கள் பக்கம் இழுக்க கட்சிகள் முயன்று வருகின்றன என்பதுதான் தற்சமய ஹாட் நியூஸ்.

 மிஸ்டர் திருமாவளவன்

மிஸ்டர் திருமாவளவன்

காயத்ரி ரகுராமை பொறுத்தவரை, கடந்த காலங்களில் விசிக, திமுகவை அளவுக்கு அதிகமாகவே விமர்சித்தவர்.. மிஸ்டர் திருமாவளவன் என்று நேரடியாக குறிப்பிட்டு ட்வீட்களை போட்டதுடன், "காலில் உள்ளதை கழற்றுவோம்.. திருமாவளவனுக்கு நேரம் சரியில்லை.. கெட்ட நேரம் ஆரம்பமாயிடுச்சு" என்று கொளுத்தி போட, இதற்காக சிறுத்தைகளிடம் எக்கச்சக்கமாக வாங்கி கட்டி கொண்டவர் காயத்ரி ரகுராம் என்பதை மறுப்பதற்கில்லை.. அந்தவகையில், திமுக, விசிக பக்கம் காயத்ரி ரகுராம் என்ட்ரி தர வாய்ப்பு இல்லை என்பதே ஏற்கனவே கணிக்கப்பட்ட ஒன்றுதான்.

 கெட்ட நேரம்

கெட்ட நேரம்

இந்த சூழலில்தான், காங்கிரஸ் தரப்பு காயத்ரிக்கு ஆதரவு வலையை வீசியுள்ளதாக தெரிகிறது.. தன் மனக்குமுறலை வெளிப்படுத்தவும், நடந்ததை எடுத்து சொல்லவும், மேலிட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு கேட்டும், இதுவரை கிடைக்காத விரக்தியில் நொந்து போயுள்ள காயத்ரிக்கு, கதர் கட்சியின் ஆதரவு வலை என்பது யோசிக்கவே வைத்திருப்பதாக தெரிகிறது.. அந்தவகையில் காயத்ரியை, காங்கிரஸ் கட்சி சரியாக பயன்படுத்தி கொண்டால், அது பாஜகவுக்கான சறுக்கலாகவே பார்க்கப்படும்.

டெய்ஸி

டெய்ஸி

அதேபோல, ஆடியோ மூலம் பரபரப்பை கிளப்பிய டெய்ஸி-க்கு திமுக பக்கம் இழுக்க முயற்சி நடப்பதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.. இதற்கு காரணம், டெய்சியையும் கட்சியிலிருந்து நீக்கவேண்டும் என்று சிலர் அழுத்தம் தருகிறார்களாம்.. இந்த விஷயம் தெரிந்துதான், டெய்ஸி பக்கம் திமுக தூது விட்டிருக்கிறதாம்.. சமீபத்தில், மாநில மகளிரணி செயலாளராக அறிவிக்கப்பட்ட ஹெலன் டேவிட்சன், டெய்சியை திமுகவுக்கு இழுத்துவர ஸ்கெட்ச் போட்டுள்ளதாகவும், இதற்கு கனிமொழி தரப்பும் ஓகே சொன்னதாகவும் சொல்கிறார்கள்.. அந்த வகையில் டெய்ஸி திமுக பக்கம் வந்தால், இதுவும் பாஜகவுக்கான மைனஸாகத்தான் பார்க்கப்படும்.. என்ன நடக்க போகிறது? பார்ப்போம்..!!

English summary
Are there any chances of bjp Daisy joining DMK and Will Gayathri Raghuram join Congress
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X