சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆட்டம் காட்டும் அமித் ஷா.. தூண்டிலில் சிக்கும் அதிமுக மீன்கள்.. 4 பேராமே.. திரும்பி பார்த்த எடப்பாடி

Google Oneindia Tamil News

சென்னை: அதிமுகவில் இருக்கும் சில அதிருப்தி தலைகளை தங்கள் கட்சிக்கு அள்ளி வர பாஜக திட்டமிட்டுள்ளதாக கமலாலய வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக - பாஜக இடையே தற்போது லேசான ஊடல் ஏற்பட தொடங்கி உள்ளது. இந்த உரசலுக்கு இரண்டு விதமான காரணங்கள் உள்ளன. முதல் காரணம் அமித் ஷா குறித்து எடப்பாடி பழனிசாமி கொடுத்த பேட்டி,

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா இரண்டு வாரம் முன் சென்னை வந்தார். தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் வந்திருந்தார். முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் எடப்பாடி பழனிசாமி இந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை.

ஓபிஎஸ் + சசி + டிடிவி.. அடித்து சொன்ன அமித் ஷா.. கொந்தளித்த எடப்பாடி! பிரச்சனை தொடங்கியது இங்குதான்? ஓபிஎஸ் + சசி + டிடிவி.. அடித்து சொன்ன அமித் ஷா.. கொந்தளித்த எடப்பாடி! பிரச்சனை தொடங்கியது இங்குதான்?

ஏன்

ஏன்

அமித் ஷாவை சந்திக்க ஏன் செல்லவில்லை என்று எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்டது. இதற்கு காட்டமாக பதில் அளித்த எடப்பாடி, அதிமுக பாஜக என்பது வேறு வேறு கட்சிகள். அதிமுகதான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சி. பாஜக என்பது தேசிய கட்சி. அதிமுக என்பது பிரதான மாநில கட்சி. அப்படி இருக்கும் போது அமித் ஷா தமிழ்நாடு வரும் போதெல்லாம் அமித் ஷாவை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர் ஒவ்வொருமுறை வரும்போதெல்லாம் போய் சந்திக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டு உள்ளார்.

கூட்டணி

கூட்டணி

இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் அதிமுக தற்போது மிகப்பெரிய கூட்டணி ஒன்றிற்கு தீவிரமாக முயற்சிகளை செய்து வருவதாக செய்திகள் வந்தன. அதாவது பாஜக ஒத்துவரவில்லை என்றால் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கான முயற்சிகளை எடப்பாடி பழனிசாமி செய்ய வாய்ப்பு உள்ளதாக செய்திகள் வந்தன. இந்த இரண்டு விஷயங்கள்தான் அதிமுக - பாஜக இடையே உரசலை ஏற்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. எடப்பாடி பேசியதையும், காங்கிரஸ் - அதிமுக கூட்டணி தொடர்பான செய்திகளையும் பாஜக மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

அப்செட்

அப்செட்

இந்த நிலையில்தான் ஒருவேளை அதிமுக பாஜகவை கைவிட நினைத்தாலோ.. பாஜகவிற்கு எதிராக செயல்பட நினைத்தாலோ டெல்லி அதற்கு தக்க பாடம் கற்பிக்கும் என்று டெல்லி வட்டார தகவல்கள் கூறுகின்றன. அதாவது அதிமுகவில் யாராவது பாஜகவை எதிர்க்க துணிந்தால், அவர்களுக்கு எதிராக டெல்லி மேலிடம் காய் நகர்த்தும். அதிரடி முடிவுகளை எடுக்கும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எடப்பாடி பழனிசாமி பாஜகவை மீறி செயல்பட விரும்பினால் செயல்படலாம். ஆனால் அதற்கு பாஜக தக்க பாடத்தை.. முக்கியமாக அமித் ஷா தக்க பாடத்தை கொடுப்பார் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4 பேர்

4 பேர்

முக்கியமாக அதிமுகவை சேர்ந்த 4 மாஜி அமைச்சர்கள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. பாஜகவுடன் இவர்கள் நட்பாக இருக்கிறார்கள். அதிமுக - பாஜக இடையே மோதல் வரும் பட்சத்தில் அப்படியே பாஜக கேம்பிற்கு இவர்கள் தாவுவார்கள் என்றும் கூறப்படுகிறது. இரண்டு தென் மாவட்ட நிர்வாகிகள், இரண்டு வட மாவட்ட நிர்வாகிகள் பாஜகவுடன் நெருக்கமாக இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. இந்த மனக்கசப்பை போக்கவே ஆளுநர் ரவியை சந்தித்து எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது. ஆனால் இந்த மீட்டிங் எடப்பாடிக்கு பெரிதாக பலன் அளிக்கவில்லை என்று அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன..

English summary
Are these 4 ex minister from AIADMK in contact with BJP? The tussle between Edappadi Palanisamy and Amit Shah
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X