India
  • search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆமா அது என்ன "பெண்ணுறைகள்?".. ஆஹா.. பெண்களின் புது வரப்பிரசாதம்.. இனி பயமில்லை

Google Oneindia Tamil News

சென்னை: ஆணுறைகள் தெரியும்.. அதென்ன பெண் பெண்ணுறைகள்?.. இதை பற்றி பெண்கள் அறிந்து கொள்வது மிக குறைவான அளவிலேயே இருக்க காரணங்கள் என்ன? இந்த பெண் பெண்ணுறைகளின் பலன்கள்? குறைபாடுகள் என்ன?

ஆண் - பெண் கற்பு என்று பொதுவானதாகவே பார்க்கப்பட்டாலும், உடல்ரீதியான பாதிப்பும், தாக்கமும் என்பது பெண்களுக்கு மட்டுமே.. அதனாலேயே பெண்களின் கற்பு மிக உயர்வாகவும், அதிகமாகவும் இந்தியாவில் பேசப்பட்டு வருகிறது.

லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி உல்லாசம்! படுக்கையில் சரிந்து இளைஞர் பலி! உடலுறவின் போது மாரடைப்பா? லாட்ஜில் ரூம் போட்டு காதல் ஜோடி உல்லாசம்! படுக்கையில் சரிந்து இளைஞர் பலி! உடலுறவின் போது மாரடைப்பா?

பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்பும் பெண்களுக்கு அதிகமாகிவிடுகிறது.. மேலும், பால்வினைத் தொற்றுகளும் ஏற்படும் அபாயமும் உள்ளது..

வார்னிங்

வார்னிங்

இதுவே, நாள் ஆக ஆக, கர்ப்பப்பைவாய் புற்றுநோயாக உருவாகுவதற்கான வாய்ப்புகளும் உள்ளதாக டாக்டர்கள் எச்சரிக்கிறார்கள்.. இத்தனை காலமும், இவைகளை தடுப்பதற்காக, ஆண்கள் மட்டுமே ஆணுறைகளை பயன்படுத்தி வந்தனர்.. ஆண்கள் ஆணுறைகளை பயன்படுத்துவதால், ஆணுக்கும், பெண்ணுக்கும் என இரு பாலாருக்குமே பாதுகாப்பு கிடைக்கிறது.

ஆணுறைகள்

ஆணுறைகள்

நம் இந்தியாவில் சில வருடங்களுக்கு முன்பு வரை, எய்ட்ஸ் என்ற உயிர்க்கொல்லி நோய் மிரட்டி கொண்டிருந்தது.. தமிழக அரசும், மத்திய அரசும் ஏராளமான விழிப்புணர்களை ஏற்படுத்தி, ஆணுறைகளையும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்ததால், இத்தகைய நோயை விரட்டி அடித்துள்ளோம் என்பதை மறுக்க முடியாது.. அப்போது முதலே, மக்களும் விழிப்புடன் இருந்து, தங்களை பால்வினை நோயிலிருந்து பாதுகாத்து கொள்ளும் சுயசிந்தனையும் பெருகி உள்ளது.

பெண்ணுறுப்பு

பெண்ணுறுப்பு

சமீபகாலமாகவே, ஆணுறை போலவே பெண்ணுறை என்பது அறிமுகமாகி வருகிறது.. அதாவது, பெண்ணுறை கருத்தடையை ஏற்படுத்தும் என்பதோடு பெண்ணுறுப்பை முழுவதும் சுற்றியிருப்பதால் ஆணிடமிருந்து பரவும் பால்வினைத் தொற்றிலிருந்தும் பாதுகாக்கும் என்கிறார்கள்.. ஆனால், நம் நாட்டில் பெண்ணுறையின் பயன்பாடு மிகவும் குறைவு என்பதால், ஆணுறையைப் போல இது எளிதில் கிடைப்பதில்லை.. பெருநகரங்களில்கூட சில குறிப்பிட்ட மெடிக்கல் ஷாப்களில் மட்டும்தான் கிடைப்பதாகவும், தேவைப்படுவோர் ஆன்லைன் மூலம் வாங்கி கொள்வதாகவும் கூறப்படுகிறது.

எப்படி அணிவது?

எப்படி அணிவது?

ஆணுறை, பெண்ணுறை என்பதை பொறுத்தவரை, ஆண் - பெண் இருவரில் யாராவது ஒருவர்தான் உறை அணிய வேண்டுமாம்.. இரு தரப்பிலுமே உறைகள் அணிந்தால், உராய்வு ஏற்பட்டு, சேதமாக வாய்ப்புள்ளது... அதிலும், இந்த அரிதாக மெல்லிய பெண்ணுறை கிழிந்து விடுவதற்கான வாய்ப்புள்ளது.. எனினும் இந்த பெண்ணுறையை உபயோகப்படுத்துவதால், எந்தவித பக்க விளைவும் இல்லாமல், கருத்தடையை தாண்டியும் பல நன்மைகள் உள்ளதாக சொல்கிறார்கள்..

பேக்கேஜ்

பேக்கேஜ்

பெண்ணுறைகள் ஒரு பயனுள்ள, வசதியான மற்றும் மலிவான கருத்தடை வடிவமாகும்... ஆனால், காலாவதியான ஆணுறைகளில் இருந்து தொற்றுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க, பேக்கேஜில் உள்ள காலாவதி தேதியை எப்போதும் சரிபார்க்க வேண்டும் என்று எச்சரிக்கிறார்கள்.. மற்றபடி இது ஒரு மென்மையான பை போன்று, நைட்ரைல் அல்லது லேடெக்ஸால் ஆனது.. இது உடலுறவின் போது பெண்ணுறுப்பின் உள்ளே செல்கிறது... இந்த உறையின் 2 முனைகளிலும் உள்ள நெகிழ்வான வளையங்கள் அதை ஒரே இடத்தில் வைத்திருக்கின்றன... ஆணுறைகளோ, பெண்ணுறுப்பின் சுவர்களை நலிந்துபோக செய்கிறது மற்றும் விந்து மற்றும் பிற திரவங்களை சேகரிக்கிறது... ஆனால் பெண்ணுறை அப்படி இல்லை, இதை உபயோகிக்கும் விதம் பாதுகாப்பானது.

உடலுறவு

உடலுறவு

ஒவ்வொரு முறை உடலுறவு கொள்ளும்போதும் புதிய உறையைப் பயன்படுத்த வேண்டுமாம்... மாதவிடாய் காலங்களில் கப், டாம்பூன் போன்றவற்றை பெண்ணுறுப்பில் பொருத்துவது போலவே, இந்த பை போன்ற உறையையும் உள்செலுத்த வேண்டும்.. இந்த பெண்ணுறையை உடலுறவுக்கு எட்டு மணி நேரத்திற்கு முன்னதாகவே யோனிக்குள் உட்செலுத்த வேண்டும் என்றும், உடலுறவுக்கு பிறகு, உடனே எடுத்து அப்புறப்படுத்த வேண்டும், உள் வளையத்தை உள்நுழைத்து கர்ப்பப்பை வாயின் வரை கொண்டு போக வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறார்கள்.. ஆக மொத்தம் பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பான இந்த உறைகள், ஒரு வரப்பிரசாதமாக அமைந்து வருகிறது.

English summary
Are women condoms safe for ladies and how to use it procedure female condoms ஆணுறைகளை போன்றே பெண்ணுறைகளும் பாதுகாப்பானது என்கிறார்கள்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X