சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ரஜினிக்கு வாழ்த்து சொன்ன மலையாள இயக்குநர்.. வச்சு செய்த பேஸ்புக்வாசிகள்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ஜனவரியில் அரசியல் கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தெரிவித்து உள்ள நிலையில், பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ரஜினிக்கு பேஸ்புக்கில் வாழ்த்து தெரிவித்தார்.

அல்போன்ஸ் புத்திரனின் கருத்தை ரஜினி ரசிகர்கள் பலர் வரவேற்றாலும், சிலர் ரஜினிக்கு எதிராகவும் அல்போன்ஸ் புத்திரனிடம் கருத்து கூறினர். இதனால் அவருக்கும், விமர்சகர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

யாரு..ங்க ரஜினி.. தமிழர்கள் இப்படி முட்டாளா இருக்காங்களே... மார்க்கண்டேய கட்ஜு வேதனை!

நடிகர் ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல மலையாள இயக்குனரான, பிரேமம் படத்தை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் ரஜினிக்கு தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அரசியலில் வருகை தந்ததற்கு வாழ்த்துக்கள் எனவும், ஒரே சூப்பர் ஸ்டார் எனவும் அவர் கருத்து பதிவிட்டார்.

அல்போன்ஸ் புத்திரன் பதிவுக்கு ரஜினி ரசிகர்கள் பலர் வாழ்த்து தெரிவித்தனர். அதே வேளையில் ரஜினிக்கு எதிரான மனநிலை கொண்ட சிலர் அல்போன்ஸ் புத்திரன் பதிவுக்கு கீழே எதிர் கருத்து தெரிவித்தனர்.அதில் ஒருவர் ''பாஜகவின் வேறு ஒரு வடிவமே ரஜினி . உங்களது பதிவிலேயே இதுதான் தரம் குறைந்த மற்றும் வீணான பதிவு" எனப் பதிவிட்டார். இது அல்போன்ஸ் புத்திரனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அவருக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த அல்போன்ஸ் புத்திரன், 'யார் வீணாகிறார்கள் என்று பார்ப்போம்" எனப் பதிவிட்டார்.

இதேபோல் எதிர் கருத்து கொண்ட பலருக்கும், இயக்குனருக்கும் இடையே பேஸ்புக்கில் கடும் மோதலே நடந்தது. தொடர்ந்து ரஜினி ரசிகர்கள், எதிர்க்கருத்து கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்க பேஸ்புக் முழுவதும் ஒரெ மோதல் களோபரமாக காட்சியளித்தது.

Argument between Alphonse Puthren and Netizens over Rajinis political entry

இதே அல்போன்ஸ் புத்திரன் அரசியலில் உள்ள நடிகர் கமல்ஹாசனையும் பாராட்டி முன்பு பதிவிட்டுள்ளார். அப்போது அவர் வெளியிட்ட பதிவில், முதல்வன் படத்தில் இருப்பது போன்ற ஒரு விருப்பம் இருந்தால் ... ஒரு நாள் முதல்வராக தமிழகத்தை கவனித்துக்கொள்வதற்காக கமல்ஹாசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். அவர் தனது புதுமையான யோசனைகளுடன் அரசை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வார் என கூறியது குறிப்பிடத்தக்கது.

English summary
Director Alphonse Puthiran congratulated actor Rajinikanth on his political arrival on Facebook. There was a heated argument between him and them as some people commented to Alphonse Putra against Rajini
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X