• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மொத்தம் 72 தொகுதிகள்.. "திமுகவை காலி செய்வோம்".. அர்ஜுன் சம்பத்தின் தேர்தல் அறிக்கை + ஹைலைட்

|

சென்னை: திமுகவை காலி செய்ய போறோம், இந்துக்கள் அனாதையா நிற்கிறோம் என்று அன்னைக்கு புலம்பிய இந்து மக்கள் கட்சி இப்போது தங்களின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.. இதை பார்த்துதான் தமிழக மக்கள் மூக்கின் மேல் விரலை வைத்து கொண்டிருக்கிறார்கள்.

ரஜினிதான் அடுத்த முதல்வர் என்று மார்தட்டி சொன்னவர்களில் மிக முக்கியமானவர் அர்ஜுன் சம்பத்.. எத்தனையோ சமயங்களில் ரஜினியே சும்மா இருந்தாலும், அடிக்கடி பேட்டிகளை தந்து அவரை உசுப்பேற்றி, அரசியலுக்கு அவரை வரும்படி அழைத்து கொண்டே இருந்தவர்.

இறுதியில் ரஜினியின் அறிவிப்பால் இவர் மனம் நொந்து போனார்.. எனினும் ரஜினி முன்வைத்த ஆன்மீக அரசியல் மீது தீரா பற்று கொண்டவர் அர்ஜுன் சம்பத்.. பலமுறை இதே ஆன்மீக அரசியல் குறித்தும் பேட்டிகளை தந்துள்ளார். மற்றொரு பக்கம் திமுகவையும் விடாமல் விமர்சித்து வருகிறார்.

 திமுக

திமுக

"கிராம சபை என்பது கட்சி சார்பற்றது... அங்கு எதுக்காக அரசியல் செய்ய வேண்டும்... திமுகவின் இந்த அரசியல் நடவடிக்கை ஜனநாயக அமைப்புகளையும் நாற்றங்கால்களையும் சிதைக்கும் வேலை.. ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்காத காரணத்தால் 3வது அணி எந்த அளவிற்கு மாற்றாகவும், வலிமையாகவும் இருக்கும் என்பதை கணிக்கமுடியாது.. ரஜினியே அரசியல் வேண்டாம் என்று ஒதுங்கிவிட்ட நிலையில், அவரது கொள்கையை வைத்து, திமுகவையே காலி செய்வோம்... வரும் தேர்தலில் இந்துக்கள் அனாதையாக நிற்கிறோம்.. எனினும், நாங்கள் ஆன்மீக அரசியலை முன்னெடுத்து செல்கிறோம்" என்று சொன்னார்.

 72 தொகுதிகள்

72 தொகுதிகள்

இந்த முறை இந்து மக்கள் கட்சி 72 தொகுதிகளில் தனித்து போட்டியிடுகிறது.. சுயேச்சையாக களம் இறங்கியுள்ளது... இந்து மக்கள் கட்சி போட்டியிடாத இடங்களில் அதிமுக-பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாகவும், பாஜக போட்டியிடும் 20 தொகுதிகளில் தீவிரமாக களப்பணியாற்ற போவதாகவும் தெரிவித்துள்ளது. திமுகவை காலி செய்வோம் என்று ஏற்கனவே சொல்லி இருந்த நிலையில், 72 தொகுதிகளில் மட்டுமே இந்த கட்சி போட்டியிடுவதாக தெரிவித்துள்ளது.

 தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

இதுகுறித்து அர்ஜுன் சம்பத் சொல்லும்போது, "திமுக தேர்தல் அறிக்கையில் இந்துக்களுக்கு சலுகைகள் என இரட்டை வேடம் போடுகிறது.. கபட நாடகம் ஆடுகிறது... இந்த தேர்தலில் எங்களுடைய முக்கிய குறிக்கோள் இந்து வாக்கு வங்கியை ஒன்றிணைப்பதுதான். இந்து மக்கள் கட்சி பாஜக வேட்பாளர்களுக்கு ரஜினிகாந்த் ரசிகர்கள் ஆதரவு அளிக்க வேண்டும். நான் ரஜினிகாந்தை சந்தித்து ஆதரவு கேட்பேன்" என்று கூறியுள்ளார்.

 ஜார்ஜ் கோட்டை

ஜார்ஜ் கோட்டை

இதையடுத்து, இந்து மக்கள் கட்சியின் தேர்தல் அறிக்கையை அர்ஜூன் சம்பத் வெளியிட்டார். அதில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்... மெரினா கடற்கரைக்கு தமிழர் கடற்கரை என்று பெயர் சூட்டப்படும்... ராமேஸ்வரம் புனிததீவாக அறிவிக்கப்படும். செயின்ட் ஜார்ஜ் கோட்டையை வள்ளுவன் கோட்டையாக மாற்றப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.

 ஹைலைட்

ஹைலைட்

இருந்தாலும், அதில் ஒரே ஒரே அறிவிப்பு பெரும் ஹைலைட்டாகி வருகிறது.. "ஒரு குடும்பத்துக்கு 1 கோடி ரூபாய் வழங்கி மக்கள் அனைவரையும் கோடீஸ்வரர் ஒரு வழக்க பேச்சு நம் நாட்டில் உள்ளது.. ஒருசில தேர்தல் அறிவிப்புகள் உண்மையிலேயே மாற்றத்தை தந்துள்ளன என்பதை மறுக்க முடியாது.. அதேசமயம், ஓட்டுக்களை பெறுவதற்காக எதையாவது அள்ளி தெளித்து வாக்குறுதிகளாக தருகிறார்கள் என்ற ஒரு பிம்பமும் தமிழக அரசியல் கட்சிகளின் மீது இருக்கிறது..

 15 லட்சம்

15 லட்சம்

இப்போது ஒரு கோடி ரூபாயை எல்லா வீட்டுக்கும் தருவது சாத்தியமா? என்ற கேள்வி ஒரு பக்கம் இருந்தாலும், இந்த அறிவிப்புதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.. ஏற்கனவே மேலிடத்தில் அறிவிக்கப்பட்ட அந்த "15 லட்சம் ரூபாய்"க்கு இன்னும் விடையே நமக்கு கிடைக்கவில்லை.. அதற்குள் 1 கோடியா?! பார்ப்போம்..!!

 
 
 
English summary
Arjun Sampath contest in 72 constituencies alone in TN Assembly election 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X