• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மீண்டும் ரஜினி வர போகிறாரா.. "நான் வர்றேன்".. பொடி வைத்து பேசும் அர்ஜூனமூர்த்தி.. திமுகவுக்கு செக்?

|

சென்னை: "எந்த சூழ்நிலையிலும் எனக்கு தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான்... அரசியலில் இல்லையென்றாலும், எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி நான் ஒரு ரசிகன் என்பதில் பெருமைகொள்கிறேன்"என்று அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதத்தில் இருந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியவர் ரஜினிகாந்த்.. டிசம்பர் மாதம் கட்சி துவங்குவதாக அறிவித்திருந்தார்.. அதற்கான சில நடவடிக்கைகளையும் முன்னதாகவே மேற்கொண்டார். அதில் ஒரு பகுதியாக, அர்ஜுனமூர்த்தி என்பவரை தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்திருப்பதாக ரஜினி அறிவித்தார்.

  சென்னை: ரஜினி ரசிகர்களை அழைக்கும் அர்ஜுன மூர்த்தி.. அதிர்ச்சியில் கமல், மு. க. ஸ்டாலின்!

  ரஜினி கட்சி துவங்குவதற்காக பல வருடம் காத்து கிடந்த நிர்வாகிகள், தீவிர விசுவாசிகள் பலர் இருந்தும் திடீரென அர்ஜுனமூர்த்தி என்பவருக்கு ரஜினி பொறுப்பை தந்தது சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.. அர்ஜூனமூர்த்தி இவர், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவராகப் பதவி வகித்துவந்து, பின்னர் அதை ராஜினாமாவும் செய்தவர் என்பதால், அது ரஜினிக்கு மேலும் பின்னடைவாகவே பார்க்கப்பட்டது.

  இந்த கருணாஸை புரிஞ்சுக்கவே முடியலையே.. கேள்வியும் கேட்கிறார்.. ஆதரவாவும் பேசுகிறார்..!

  பொறுப்பு

  பொறுப்பு

  காரணம், பாஜகவின் நிழல் போலவே ரஜினியை கருதப்பட்டு வந்த நிலையில், அதே பாஜகவை சேர்ந்த ஒருவருக்கு பொறுப்பை தந்தது சலசலக்கப்பட்டது.. ரஜினி அப்போலோவில் இருந்த சமயத்திலும், பிறகு போயஸ் கார்டன் வீட்டில் ரெஸ்ட் எடுத்தசமயத்திலும், மாவட்ட நிர்வாகிகளுடன் ஓரிரு முறை ராகவேந்திரா மண்டபத்தில், ரஜினியின் புதுகட்சி குறித்து ஆலோசனையும் நடத்தினார்.

  அறிவிப்பு

  அறிவிப்பு

  இந்நிலையில்தான், ரஜினி திடீரென உடல்நிலையை காரணமாகக் கூறி ,கட்சி தொடங்கும் முடிவிலிருந்து விலகினார். இது ரஜினி ரசிகர்கள் முதல் ரஜினியை வைத்து அரசியல் செய்ய நினைத்தவர்களுக்கே பெருத்த அடியாக விழுந்தது. தமிழருவி மணியன் நொந்து போய் மறுநாளே அறிக்கை வெளியிட்டு வீட்டுக்கு கிளம்பி விட்ட நிலையில், அர்ஜூனமூர்த்தியும் ஒருமுறை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,

  பேட்டி

  பேட்டி

  "எனது இரண்டு கண்களில் ஒரு கண் நரேந்திர மோடி.. இன்னொரு கண் ரஜினிகாந்த்... இந்த இருவருமே தமிழ்நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டவர்கள். அதனால் ஈர்க்கப்பட்டே இருவரின் தலைமையை நான் ஏற்றேன்." என்றும் விளக்கம் தந்திருந்தார். இதனிடையே, மீண்டும் அர்ஜுனமூர்த்தியை இணைத்து கொள்ளவும் தயாராக இருப்பதாக பாஜகவும் ஏற்கனவே சொல்லி இருந்தது..

  அறிக்கை

  அறிக்கை

  ஆனால், அர்ஜுனமூர்த்தியோ, "எனக்கு பாஜகவுடன் நெருங்கிய உறவு உள்ளது. அங்குள்ள தலைவர்கள் மீது எனக்கு மிகுந்த நன்மதிப்பு உள்ளது. மீண்டும் பாஜகவில் சேருவது பற்றி இப்போதைக்கு முடிவு செய்யவில்லை" என்று கூறியிருந்தார். இந்நிலையில், அர்ஜுனமூர்த்தி ட்விட்டரில் மாற்றத்தின் பயணம் விரைவில் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கை இதுதான்:

  அறிமுகம்

  அறிமுகம்

  "நமது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்னை நமது நாட்டுக்கு அறிமுகம் செய்தது அனைவரும் அறிந்ததே. இந்தநிலையில், நமது தலைவருக்கு உடல்நலம் குறித்து மருத்துவர்கள் கூறிய ஆலோசனையின் காரணமாக, அவர் அரசியலில் ஈடுபட முடியாமல் போனதும் நாமறிந்த ஒன்று. இதனால் மக்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் வேதனை அடைந்தேன்.

  மாற்றம்

  மாற்றம்

  இதற்கு ஈடுசெய்யும் வகையில் ரஜினிகாந்தின் நீண்டகால அரசியல் மாற்றத்தின் நினைவானது நிச்சயமாக நிகழ வேண்டும் என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்து, நமது தமிழகத்தில் `அரசியல் மாற்றம் ஆட்சி மாற்றம், இப்ப இல்லன்னா எப்போது...' என்று சொன்ன ரஜினிகாந்தின் நல்ல எண்ணம், நல்ல மனது நம் தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என்று நம்புங்கள்.

  பெயர்

  பெயர்

  தற்போது தலைவர் ஒரு நடிகராக, அவரது தொழில் தர்மத்தின் காரணமாக, அவரது பெயருக்கும் புகழுக்கும் களங்கம் வரக் கூடாது என்ற காரணத்தால் அவரது பெயர், புகைப்படங்களை பயன்படுத்த வேண்டாம் என்று நான் விரும்புகிறேன். எனவே, என்னை மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என விரும்பி நாட்டுக்கு அறிமுகம் செய்த அவர்களின் பாதம் தொட்டு வணங்கி, நான் மாற்றத்தின் வழியில் பயணித்து நல்லதொரு மாற்றத்தைத் தருவேன் என்று நம்புகிறேன்.

   நான் ஒரு ரசிகன்

  நான் ஒரு ரசிகன்

  எந்தச் சூழ்நிலையிலும் எனக்குத் தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தான். அரசியலில் இல்லையென்றாலும், எனக்கு தலைவர் என்பதையும் தாண்டி, நான் ஒரு ரசிகன் என்பதில் பெருமை கொள்கிறேன். அந்த அக்கறையில் அவரது புகழுக்கு எந்த இடத்திலும் கெட்டபெயரை நாம் ஏற்படுத்த மாட்டோம்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஆசீர்வாதம் மட்டும் போதும்... அவர்களின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். மிக்க நன்றி. விரைவில் மாற்றத்தின் சேவகனாக உங்கள் முன்." என்று கூறியுள்ளார்.

  அவசியம்

  அவசியம்

  இந்த அறிக்கை இப்போது ஏன்? இதற்கான அவசியம் என்ன? என்பது தெரியவில்லை.. ஆனால் ஒருசில சந்தேகங்களை நமக்கு கிளப்புகிறது.. அர்ஜுனமூர்த்தி மறுபடியும் பாஜகவில் இணைய போகிறாரா? அப்படி இணைவதால், அவரை யாராவது தவறாக விமர்சிக்க கூடும் என்பதால், ரஜினி மீதான தன் மரியாதையை இப்படி வெளிப்படுத்தி உள்ளாரா? தெரியவில்லை.

   மீண்டும் ரஜினி

  மீண்டும் ரஜினி

  அதேபோல, மறைமுகமாக அர்ஜூன மூர்த்தியை ரஜினி களம் இறக்குகிறாரா அல்லது ரஜினியின் மறைமுக ஆதரவு இவருக்கு இருக்கிறது என்பது போல காட்ட வேறு யாரேனும் முயல்கிறார்களா? என்றும் தெரியவில்லை. ரஜினி ரசிகர்கள் திமுக உள்ளிட்ட கட்சிகள் பக்கம் திரும்ப ஆரம்பித்து விட்டனர்... சில மக்கள்மன்ற மாவட்டச் செயலாளர்கள் திமுகவில் சேர்ந்ததை ரஜினி ரசிகர்கள் மெளனமாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

  திமுக

  திமுக

  எனவே அவர்களை தக்கவைக்கவும், வேறு கட்சிகளுக்கு செல்லாமல் இருக்கவும் இப்படி ஒரு திட்டம் போடப்படுகிறதா? என்றும் தெரியவில்லை.. அல்லது கடைசி நேரத்தில் ஏதாவது திசை திருப்பி ரஜினி ரசிகர்கள் திமுகவுக்கோ அல்லது வேறு கட்சிக்கோ வாக்களிக்க விடாமல் தடுக்கும் முயற்சியா இது? என்றும் தெரியவில்லை. ஆனால், இவ்வளவு காலம் இல்லாமல், தமிழக கட்சிகள் ஆளுக்கு ஒரு பக்கம் பிரச்சாரம் செய்து வரும் நிலையில், அர்ஜுனமூர்த்தியின் இந்த அறிக்கை ஏதோ ஒரு விஷயத்தை சொல்லாமல் சொல்கிறது..அத்துடன் என்னமோ நடக்க போகுதுங்கிறது மட்டும் தெரியுது.

   
   
   
  English summary
  Arjunamurthy statement about his move and Rajinikanth
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X