சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுதீஷ் வீட்டுக்கு திடீரென துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு.. பரபரப்பில் விருகம்பாக்கம்

Google Oneindia Tamil News

சென்னை: தேமுதிக துணை செயலாளர் சுதீஷ் வீட்டுக்கு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேமுதிக துணை செயலாளரும், அக்கட்சி பொருளாளர் பிரேமலதாவின் சகோதரருமான சுதீஷ், வரும் லோக்சபா தேர்தலில் கள்ளக்குறிச்சி தொகுதியில் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றுள்ள நிலையில், இவரை எதிர்த்து திமுக முன்னாள் அமைச்சர், பொன்முடியின் மகன் கவுதம சிகாமணி, களம் கண்டுள்ளார்.

சவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா?..வேட்பாளர்களுக்கு துரைமுருகன் கேள்வி!சவால் விடுகிறேன்.. என் மகன் அளவிற்கு இங்கிலீஷ் பேச முடியுமா?..வேட்பாளர்களுக்கு துரைமுருகன் கேள்வி!

விருகம்பாக்கம்

விருகம்பாக்கம்

இந்த நிலையில்தான், சுதீஷ் வசிக்கக்கூடிய சென்னையில் உள்ள வெங்கடேஸ்வரா நகர் வீட்டுக்கு, 3 போலீசார் அடங்கிய துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த பகுதி விருகம்பாக்கம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட தாகும்.

எதற்காக

எதற்காக

தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் கூட இதுவரை தனக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு தேவை என்று கோரிக்கை விடுத்தது கிடையாது. ஆனால் சுதீஷ் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது ஏன் என்றுதான் தெரியவில்லை.

திடீர் பாதுகாப்பு

திடீர் பாதுகாப்பு

யாருடைய உயிருக்காவது, அச்சுறுத்தல் சூழ்நிலை உள்ளது என்றால் அதை பரிசீலித்து காவல்துறையே, நேரடியாக இது போன்ற பாதுகாப்பை வழங்குவார்கள். ஆனால், சுதீஷ் தரப்பிலிருந்து இதுவரை முறைப்படியாக எந்த ஒரு மனுவும் அளிக்கப்படவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

உத்தரவு

உத்தரவு

ஆனால், சுதீஷ் வீட்டுக்கு பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக, காவல்துறைக்கு, அரசின் மேலிடத்திலிருந்து உத்தரவு வந்திருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

English summary
Armed Police personnel deployed in dmdk Deputy secretary Sudhish's house in Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X