சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சிறைகள் சமூக விலகலுக்கு உகந்ததல்ல.. 7 பேரையும் வீடுகளில் இருக்க அனுமதியுங்கள்- அற்புதம்மாள்

Google Oneindia Tamil News

சென்னை: சிறைகள் சமூக விலகலுக்கு உகந்ததல்ல. எனவே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் உள்ளவர்களை வீடுகளில் இருக்க அனுமதியுங்கள் என அற்புதம்மாள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Recommended Video

    இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு ஆயிரத்தை தாண்டியது

    கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் 1071 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவை தடுக்க ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது.

    இதையடுத்து மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள். சமூக விலகலை பின்பற்றும் விதமாக சில சிறைச்சாலைகளில் உள்ள சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கப்பட்டு அவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

    ஏற்பாடு

    ஏற்பாடு

    சிறைக்கைதிகளை பார்ப்பதற்கு அவர்களது உறவினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழகத்தில் உள்ள சிறைவாசிகள் சிறைத் துறை அதிகாரிகளிடம் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து 58 நவீன செல்போன்கள் வாங்கப்பட்டு தினமும் ஒவ்வொரு கைதியும் 5 முதல் 7 நிமிடங்கள் வரை வீடியோ காலில் தங்கள் குடும்பத்தினருடன் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அற்புதம்மாள்

    அற்புதம்மாள்

    இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் இந்த வசதி முதல்முறை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெற்றவர்களை பரோல் போன்ற நிபந்தனை விடுமுறையில் அனுப்பி வைக்குமாறு அற்புதம்மாள் தமிழக அரசிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

    சோஷியல் டிஸ்டன்சிங்

    சோஷியல் டிஸ்டன்சிங்

    இதுகுறித்து அற்புதம்மாள் தனது ட்விட்டரில் கூறியிருக்கையில் நோயாளிகள், 10ஆண்டு தண்டனை முடித்த சிறைவாசிகளை Conditional Leaveல் அனுப்ப கனிவுடன் ஆவன செய்யுங்கள். 24 மணிநேர கண்காணிப்பில் உள்ள சிறைகள் social distancingற்கு உகந்த இடமல்ல. அவர்களை தமது வீடுகளில் இருக்க அனுமதியுங்கள் என கேட்டுக் கொண்டுள்ளார்.

    ட்வீட்

    இந்த கோரிக்கையை தமிழக முதல்வர், சட்டத் துறை அமைச்சர் சிவி சண்முகம், சுகாதாரத் துறை அமைச்சர் சி விஜயபாஸ்கர் ஆகியோருக்கு அனுப்பியுள்ளார். 7 தமிழர்களையும் விடுவிக்குமாறு தமிழக ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானம் அனுப்பியும் இன்னும் அதன் மேல் நடவடிக்கை எடுக்காமல் உள்ளதாக அற்புதம்மாள் வேதனை தெரிவித்து அவ்வப்போது ட்வீட் பதிவிட்டது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Arputham Ammal demands Tamilnadu Government to send 7 tamils to their home in Conditional leave as Corona intensifies.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X