சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னுயிர் இருக்கும் போதே விடுதலை கோப்பில் மை படட்டும்!.. பேரறிவாளன் குறித்து அற்புதம்மாள் உருக்கம்

Google Oneindia Tamil News

Recommended Video

    #29YearsTooMuchGovernor | பேரறிவாளன் விடுதலை விவகாரம்: அற்புதம்மாள் உருக்கம்- வீடியோ

    சென்னை: என்னுயிர் இருக்கும்போதே விடுதலை கோப்பில் மை படட்டும் என பேரறிவாளன் விடுதலை குறித்து அற்புதம்மாள் உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ஆம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்காக வருகை தந்தார். அப்போது அவர் அங்கு மனித வெடிகுண்டு வைத்து படுகொலை செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்து வருகின்றனர்.

    'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ'அம்மா சாவில் கூட இல்லை'.. தினகரன் குறித்து கோவை ஓட்டலில் புகழேந்தி கடும் விமர்சனம்.. வைரல் வீடியோ

    எழுவர் விடுதலை

    எழுவர் விடுதலை

    இவர்களின் விடுதலைக்காக பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் சட்ட போராட்டம் நடத்தி வருகிறார். இது தொடர்பான வழக்கின்போது தமிழக அரசே எழுவரின் விடுதலை குறித்து முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

    ஆளுநர்

    ஆளுநர்

    இதையடுத்து ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் அந்த கோப்பு மீது ஆளுநர் நடவடிக்கை எடுக்கவில்லை.

    அமைச்சரவை

    இதனால் #29YearsTooMuchGovernor என்ற ஹேஷ்டேக் டிரென்டிங் ஆனது. இந்த நிலையில் இந்த ஹேஷ்டேக்கை கொண்டு அற்புதம்மாள் டுவிட்டரில் உருக்கமான கருத்தை பதிவிட்டுள்ளார். அவர் கூறுகையில் அமைச்சரவை பரிந்துரைத்து 1 ஆண்டு.

    மை படட்டும்

    மை படட்டும்

    நிரபராதி, விடுதலை செய்யனும்னு சம்பந்தப்பட்ட பலர் ஒப்புக் கொண்டும் தாமதமேனோ? நிரபராதிக்கு தீர்வு அரசியல் சட்டம் 161 என அறிவீரே! 29 வருட அநீதியில் உங்கள் பங்கு ஒன்றுடன் முடியட்டும்; என்னுயிர் இருக்கும்போதே கோப்பில் மை படட்டும்! என தெரிவித்துள்ளார்.

    English summary
    Arputhammal tweet that 7 tamils have to be released when she is alive. TN Governor has to sign in the resolution passed by TN assembly which says to release them.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X