சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்கள் மகிழ்ச்சி... அரியர் விதிமுறைகளை தளர்த்தியது அண்ணா பல்கலைக் கழகம்

Google Oneindia Tamil News

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தில் 2000 ஆண்டு முதல் படித்த மாணவர்களும், அரியர் தேர்வை எழுதிக்கொள்ளலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் வாய்ப்பு வழங்கி உள்ளது.

அதன்படி, இளநிலை, முதுநிலை பொறியியல் படிப்பில் அரியர் வைத்திருப்போர் 2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரலில் எழுதிக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Arrear holders can write Exam in November 2019 and April 2020, Anna University

கடந்த 9ஆம் தேதி நடந்த அண்ணா பல்கலைகழகத்தின் சிண்டிகேட் கூட்டத்தில், 2000ஆம் ஆண்டுக்கு பின் பொறியியல் படிப்புகளில் அரியர் இருப்பதால், பட்டம் வாங்க முடியாமல் இருக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் நலன் கருதி, அரியர் விதிமுறைகளை தளர்த்துவது என அண்ணா பல்கலைக் கழகம் முடிவு எடுத்துள்ளது.

இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2000ஆம் ஆண்டுக்குப் பின்பு அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் 2001ஆம் ஆண்டுக்கு பிறகு அதன் உறுப்பு கல்லூரிகளில் படித்து, டிகிரி முடிக்க முடியாமல் அரியர் வைத்திருப்பவர்கள் வரும் நவம்பர்- டிசம்பரில் நடக்கும் செமஸ்டர் மற்றும் ஏப்ரல்- மே மாதத்தில் நடக்கும் செமஸ்டரில் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி தொடங்குவது எப்போது.. ரஜினி அளித்த பரபரப்பு பதில் கட்சி தொடங்குவது எப்போது.. ரஜினி அளித்த பரபரப்பு பதில்

மேலும், பழைய நடைமுறைகளின்படி தேர்வு கட்டணத்தை செலுத்தி வர உள்ள இரண்டு செமஸ்டர்களில் கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

English summary
Students who have studied in the year 2000 can also write the Arrear Exam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X