சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!

Google Oneindia Tamil News

சென்னை: இந்த ஆண்டு தமிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால் பள்ளிகள், கல்லூரிகள் கடந்த 4மாதங்களாக மூடப்பட்டுள்ளன. கல்லூரிகளில் இறுதி ஆண்டு தேர்வுகள் மற்றும் செமஸ்டர் தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை.

இந்நிலையில் புதிய கல்வியாண்டு துவங்கிவிட்ட நிலையில் பள்ளிகள் இதுவரை திறக்கப்படவில்லை. பிளஸ் 2 தேர்வு முடிவுகளும் எப்போது வெளியாகும் என்பது உறுதியாக தெரியவில்லை. இதனால் கல்லூரிகள் திறப்பது எப்போது எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்து தெளிவாக தகவல்கள் இல்லை.

திமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா திமுக பக்கம் சாய்கிறதா பாஜக.. வாஜ்பாய் இருக்கும்போது நடந்தது.. மீண்டும் நடக்குமா "யதார்த்த அரசியல்?"

தனித்தனியாக விண்ணப்பித்தார்கள்

தனித்தனியாக விண்ணப்பித்தார்கள்

தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் அன்பழகன் அறிவித்துள்ளார். முன்னதாக தமிழகத்தில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர வேண்டும் எனில் ஒவ்வொரு கல்லூரிக்கும் சென்று தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பொறியியல் பாணியில்

பொறியியல் பாணியில்

பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்படும் ஒற்றை சாளர முறை கலந்தாய்வு போன்று கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் கலந்தாய்வு கொண்டுவருதற்கான திட்டங்கள் அரசிடம் நீண்ட காலமாக இருந்தது. தற்போது இந்த ஆண்டில் இருந்தே இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக உயர்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

2 நாளில் இணையதளம்

2 நாளில் இணையதளம்

இதன்படி தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வி துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார். 2 நாளில் இணையதளத்தை தொடங்குவதற்கான பணிகளும் நடந்து வருவதாகவும் கூறியிருக்கிறார்.

மாணவர்களுக்கு என்ன பலன்

மாணவர்களுக்கு என்ன பலன்

இதனால் மாணவர்களுக்கு என்ன பலன் என்றால், இரு கல்லூரிக்கு விண்ணப்பித்துவிட்டு ஒரே நேரத்தில் நேர்காணலுக்கு செல்லக்கூடிய சூழல் இனி இருக்காது. ஒரே விண்ணப்பத்தில் பல கல்லூரிகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கக்கூடிய பலனும் இருக்கிறது.

Recommended Video

    ONLINE CLASS குழந்தைகளுக்கு நல்லதா ?? | Dr. Shobana | Oneindia Tamil
    எப்படி விண்ணப்பிப்பது

    எப்படி விண்ணப்பிப்பது

    பிளஸ் 2 தேர்வுகள் முடிவு வெளியான பின்னரே இதற்கான பணிகள் தொடங்கும் என தெரிகிறது. ஏனெனில் முந்தைய ஆண்டுகளில் 12ம் வகுப்பு தேர்வுகள் முடிவுகள் வெளியாவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வந்தது. எனவே தேர்வு முடிவுகள் எப்போது என அறிவிக்கப்பட்ட பின்னரே, ஆன்லைனில் விண்ணப்பிப்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் எனதெரிகிறது. எனினும் அடுத்த சில நாட்களில் எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த வழிகாட்டுதல்கள் வெளியாக வாய்ப்பு உள்ளது.

    English summary
    students can apply online to join arts and science colleges in Tamil Nadu from this year: says higher education minister KP anbazhagan. new website likely to launch with in two days
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X