சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜெயலலிதா மரண விசாரணை.. ஓ.பி.எஸ்-க்கு சம்மன்.. ஆறுமுகசாமி ஆணையம் அதிரடி

வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை: ஓ.பி.எஸ்-க்கு சம்மன்- வீடியோ

    சென்னை: வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதே போல், அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையனையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில், சிகிச்சை அளித்த மருத்துவர்கள், உறவினர்கள், காவல்துறை அதிகாரிகள், கார் ஓட்டுனர்கள் என தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.

    Arumugamasi Commission sends notice to Deputy Chief Minister O. Panneerselvam

    இதனிடையே, சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவிடம் விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் முடிவு செய்துள்ளது.

    இதுதொடர்பாக, பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறை நிர்வாகத்துக்கு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. விசாரணை தொடர்பாக தமிழக உள்துறைக்கும் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளது என கூறி சசிகலா குடும்பத்திற்கு எதிராக ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தி கட்சியை உடைத்தார். அதன் பின்பு தினகரன் உள்ளிட்டோர் ஒதுக்கப்பட்டு தமிழகத்தில் ஆட்சி தொடர்ந்து வருகிறது.

    இந்தநிலையில், வருகிற 20-ம் தேதி ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகுமாறு துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் அமைச்சர் சி.விஜயபாஸ்கர், முன்னாள் அமைச்சர் பொன்னையனையும் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.

    English summary
    Notice to Deputy Chief Minister O. Panneerselvam to appear before the Arumugamasi Commission on December 20.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X