சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு; கெஜ்ரிவால்-கமல்ஹாசன் நட்பு கூட்டணி, கட்சி கூட்டணியாக மாறாதது ஏன்!

Google Oneindia Tamil News

சென்னை: கெஜ்ரிவாலிடம் பல்வேறு ஆலோசனைகள் பெற்று கட்சியை ஆரம்பித்தவர். கமல் கட்சி தொடக்க விழாவில் கூட கெஜ்ரிவால் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

Recommended Video

    #TNElection2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் ஆம் ஆத்மி போட்டியில்லை: அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு!

    தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

     சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்.. ஒப்பந்தம் கையெழுத்தானது சட்டசபை தேர்தல்: திமுக கூட்டணியில் விசிகவுக்கு 6 தொகுதிகள்.. ஒப்பந்தம் கையெழுத்தானது

    ஆம் ஆத்மியால் நமக்கு எந்த பலனும் இல்லை என்று கமலுக்கும் தெரியும். ஆனால் நட்புரீதிக்காகவாவது கெஜ்ரிவால் இங்கு கூட்டணி வைத்து போட்டியிட்டு இருக்கலாம் என்று கமல் கருதுவதாக கூறப்படுகிறது.

    கெஜ்ரிவால் நிகழ்த்திய அதிசயம்

    கெஜ்ரிவால் நிகழ்த்திய அதிசயம்

    மிகப்பிரமாண்டமான செலவில் எடுக்கப்பட்ட, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்கள் தோல்வியை தழுவுவதும், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, மிக சிறிய பட்ஜெட்டில் வரும் திரைப்படங்கள் சில பெரு வெற்றியை குவிப்பதும் திரையிலகில் அடிக்கடி நிலவுவது உண்டு. இப்படிப்பட்ட சில சம்பவங்கள் அரசியலிலும் அவ்வப்போது அரங்கேறும். இப்படி ஒரு அதியசத்தை நிகழ்த்தியவர்தான் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால்.

    ஊழல் எதிர்ப்பு ஆயுதம்

    ஊழல் எதிர்ப்பு ஆயுதம்

    தலைநகர் டெல்லியில் காங்கிரஸ், பாஜக என பெரும் முதலைகள் கோலோச்சிய நிலையில், எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி அந்த முதலைகளை வீழ்த்தி தொடர்ந்து 3-வது முறையாக டெல்லியை தனது கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறார் கெஜ்ரிவால். இதற்கும், தமிழ்நாட்டுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்கிறீர்களா? கண்டிப்பாக இருக்கிறது. கெஜ்ரிவாலைப்போல் தமிழகத்திலும் ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்று மக்களை நம்பி மக்கள் நீதி மய்யத்தை ஆரம்பித்தார் கமல்ஹாசன்.

    கமல்ஹாசன்-கெஜ்ரிவால் நட்பின் ஆழம்

    கமல்ஹாசன்-கெஜ்ரிவால் நட்பின் ஆழம்

    கெஜ்ரிவாலுக்கும், கமல்ஹாசனுக்கும் இருக்கும் நட்பு மிகவும் ஆழமானது. இது நாடு அறிந்த ஒரு நட்பு ஆகும். கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிரான அமைப்பை கட்சியாக மாற்றி அதில் வெற்றி கண்டவர். இதேபோல் ஊழல் எதிர்ப்பு என்னும் ஆயுதத்தை எப்போதும் கையில் வைத்திருக்கும் கமல்ஹாசன் கெஜ்ரிவாலிடம் பல்வேறு ஆலோசனைகள் பெற்று கட்சியை ஆரம்பித்தவர். கமல் கட்சி தொடக்க விழாவில் கூட கெஜ்ரிவால் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

    கெத்தாக நிற்கும் மக்கள் நீதி மய்யம்

    கெத்தாக நிற்கும் மக்கள் நீதி மய்யம்

    கமல் டெல்லி சென்று கெஜ்ரிவாலை சந்தித்து பேசியதும், கெஜ்ரிவால் சென்னையில் கமல்ஹாசன் வீட்டிற்கு சந்தித்து பேசியதும் இருவரின் நட்புக்கு எடுத்துக்காட்டு. தற்போது சட்டசபை தேர்தலில் 3-வது கூட்டணிக்கு தலைமை தாங்கும் அளவுக்கு மக்கள் நீதி மய்யம் கெத்தாக நிற்கிறது. ''எங்கள் கூட்டணி உறுதியாகி விட்டது; கமல்தான் முதல்வர்'' என்று சரத்குமார் வெளிப்படையாக அறிவித்து விட்டார். திமுகவுடன் தொகுதி பங்கீட்டு பிரச்சினையில் உள்ள காங்கிரசும் ஒரு பக்கமும் மய்யத்துடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

    கெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு

    கெஜ்ரிவால் எடுத்த அதிரடி முடிவு

    இந்த நிலையில் கெஜ்ரிவாலும் கமல்ஹாசனும் நண்பர்கள் என்பதால் மக்கள் நீதி மய்யம்-ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். இந்த கூட்டணி தொடர்பான பேச்சுகளும் அடிபட்டன. ஆனால் எதிர்பாராதவிதமாக தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். உண்மையை சொல்லப் போனால் தமிழகத்தில் ஆத் ஆத்மி போட்டியிட்டு எந்த பிரயோஜனமும் இல்லை. இப்படி ஒரு கட்சி இருக்கிறதா? என்றே தமிழக மக்கள் பாதி பேருக்கு தெரியாது. அதனால் எதற்கு தேவையில்லாமல் போட்டியிட்டு என்று கெஜ்ரிவால் இந்த முடிவை எடுத்து இருக்கலாம்.

    கமலுக்கு கிடைத்த ஏமாற்றம்

    கமலுக்கு கிடைத்த ஏமாற்றம்

    ஆனால் கெஜ்ரிவாலின் இந்த முடிவு கமலுக்கு நிச்சயம் ஏமாற்றத்தை கொடுத்து இருக்கும். ஆம் ஆத்மியால் நமக்கு எந்த பலனும் இல்லை என்று கமலுக்கும் தெரியும். ஆனால் நட்புரீதிக்காவது கெஜ்ரிவால் இங்கு கூட்டணி வைத்து போட்டி இருக்கலாம் என்று கமல் கருதுவதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யத்துடன் தேர்தல் பணியாற்ற கமலுக்கு, ஆம் ஆத்மி நிர்வாகிகள் ஓரளவு உதவியாக இருந்திருப்பார்கள். ஆம் ஆத்மி கட்சி குறித்து தெரியவில்லை என்றாலும், டெல்லி முதல்வர் என்ற வகையில் கெஜ்ரிவாலை ஓரளவு மக்களுக்கு தெரியும் என்பதால் கொஞ்சம் நமக்கு உதவியாக இருக்கும் என்று கமல் நினைத்து இருக்கலாம். இதனால் கெஜ்ரிவாலின் இந்த முடிவு கமலுக்கு கொஞ்சம் ஏமாற்றம் கொடுத்துள்ளது. தனக்காக பிரசாரம் செய்ய கெஜ்ரிவாலை கமல் அழைத்துள்ளளதாக கூறப்படுகிறது. கெஜ்ரிவால் கமலுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    He started the party after getting various suggestions from Kejriwal. Kejriwal even attended the Kamal party opening ceremony and surprised everyone
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X