சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்ணை கவ்வும் பாஜகவின் வாய் சொல் வீரர்கள்.. ஒரு இடத்தில் மட்டும்தான் வெற்றி என எக்சிட் போல் கணிப்பு

Google Oneindia Tamil News

Recommended Video

    Exit poll 2019 | 38 இடங்களை திமுக வெல்லலாம்.. இந்தியா டுடே - ஆக்சிஸ் கருத்துக்கணிப்பு

    சென்னை: எக்சிட் போல் கணிப்புகளின்படி தமிழகத்தில் 5 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர்களில் 4 வேட்பாளர்கள் தோற்பர் என அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தல் நேற்றோடு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகின. இதில் நியூஸ் எக்ஸ் நிறுவனம் நிகழ்த்திய கருத்து கணிப்புகள் வெளியாகின.

    இதில் தமிழகத்தில் வேலூர் தொகுதி தவிர்த்து மொத்தம் 38 தொகுதிகளில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற கருத்து கணிப்பை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி பாஜக போட்டியிட்ட 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறுவர் என கூறியுள்ளது.

    இதுக்கே பயந்தா எப்படி? திடீரென்று வைரலாகும் 2004 கருத்து கணிப்பு முடிவுகள்.. காரணம் இதுதான்! இதுக்கே பயந்தா எப்படி? திடீரென்று வைரலாகும் 2004 கருத்து கணிப்பு முடிவுகள்.. காரணம் இதுதான்!

    அதிமுகவிலிருந்து விலகியவர்

    அதிமுகவிலிருந்து விலகியவர்

    அந்த ஒருவர் ஏற்கெனவே சிட்டிங் எம்பியாக இருக்கும் பொன் ராதாகிருஷ்ணனோ, தமிழிசை சவுந்திரராஜனோ, எச் ராஜாவோ, சிபி ராதாகிருஷ்ணனோ அல்ல. அதிமுகவிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த கடந்த 2017-இல் இணைந்த நயினார் நாகேந்திரன் ஆவார்.

    தோல்வி

    தோல்வி

    கருத்து கணிப்புகளின்படி இந்த தேர்தலில் ராமநாதபுரத்தில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் மட்டுமே வெற்றி பெறுவாராம். மற்ற அனைவரும் தோல்வி அடைவர் என்றே கூறுகிறது.

    அதிர்ச்சி

    அதிர்ச்சி

    தூத்துக்குடியில் தமிழிசையும் கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணனும், சிவகங்கையில் எச் ராஜாவும் கோவையில் சிபி ராதாகிருஷ்ணனும் போட்டியிட்டனர். இது கட்சியினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    2014-ஐ பிரதிபலிக்கும் தேர்தல்

    2014-ஐ பிரதிபலிக்கும் தேர்தல்

    கடந்த 2014-ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் என்ன முடிவுகள் வெளியானதோ அதே முடிவுகள் கருத்து கணிப்புகளின்படி இந்த ஆண்டு தேர்தலிலும் பிரதிபலிப்பதாகவே பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு பாஜக சார்பில் குமரியிலிருந்து பொன்னார் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். அது போல் இந்த ஆண்டும் ஒரே ஒரு எம்பி அதுவும் ராமநாதபுரத்தில் இருந்து தேர்வு செய்யப்படுவார் என்கின்றன கருத்து கணிப்புகள்.

    English summary
    As per Exit poll results BJP candidates in Tamilnadu will only get 1 seat out of 5 they contested.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X