• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

நான் என்னத்தப்பா கண்டேன்.. சாதனை தங்கம் கோமதியின் தாயார் வெள்ளந்தி பேச்சு!

|

சென்னை: "என்ன அத்தை.. டிவி போட்டு பாக்கலையா? கோமதி ஓடி ஜெயிச்சுட்டாங்களேன்னு ஒரு பாப்பா ஓடிவந்து டிவி பாக்க சொன்னா, ஆனா எனக்கு டிவி எல்லாம் போட்டு பார்க்க தெரியாதுங்க" என்று கள்ளங்கபடமற்று பேசுகிறார் கோமதியின் தாய் மாரிமுத்து!

கோமதி! சாதித்தே தீர வேண்டும் என்ற வைராக்கிய குணம் கொண்ட கருத்த மேனி கொண்ட பெண். ஆசிய தடகளப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கத்தைப் வாங்கி தந்திருக்கிறார்.

800 மீட்டர் மகளிருக்கான ஓட்டப் பந்தயம் அது. 800 மீட்டர் தூரத்தை 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து சாதனை படைத்துள்ளார் கோமதி.

கோயம்பேடு பக்கம் போய்ராதீங்க.. கிலோ பீன்ஸ் ரூ. 160க்கு விக்குதாம்.. எல்லா காய் விலையும் விர்விர்!

ஏழ்மை குடும்பம்

ஏழ்மை குடும்பம்

திருச்சி அருகே மணிகண்டம் என்ற பகுதியை சேர்ந்தவர். ரொம்பவும் ஏழ்மையான குடும்பம். வெளிப்படையாக சொல்ல போனால் அடிப்படை வசதி கூட இல்லாத ஒரு பின் தங்கிய கிராமத்தில், இப்படி ஒரு வீராங்கனை வெளியே வந்துள்ளது புருவத்தை உயர்த்துகிறது.

மைதானம்

மைதானம்

அடிப்படை வசதியே இல்லை என்றால், விளையாட்டு மைதானம் எங்கே இருக்க போகிறது. மைதானம் போக வேண்டும் என்றால், வீட்டில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரம் போக வேண்டுமாம். அப்படி சென்றுதான் பயிற்சி எடுத்துள்ளார் கோமதி.

ஊக்கம்

ஊக்கம்

விளையாட்டில் ஆர்வம் உள்ள எத்தனையோ பேர் குடும்ப வறுமை காரணமாக எல்லா திறமையையும் தங்களுக்குள்ளேயே போட்டு மறைத்து கொள்வது இயல்பு. ஆனால் கோமதியை ஊக்கப்படுத்தியது அவரது அப்பா மாரிமுத்துதான். சின்ன வயசிலேயே சைக்கிள் ஓட்ட கத்து கொடுத்தது முதல், கூடவே இருந்து ஊக்கத்தை தந்தவர் அவர்தானாம். ஆனால் புற்றுநோயால் சமீபத்தில் அவர் இறந்துவிட, அந்த சோகத்திலிருந்து மீள நிறையவே கஷ்டப்பட்டுள்ளார் கோமதி!

கடின உழைப்பு

கடின உழைப்பு

கோமதிக்கு இப்போது 30 வயது. இன்று இப்படி ஒரு சாதனையை படைக்க கோமதியின் 10 வருட கடின முயற்சிதான் காரணமாக இருக்கிறது. பெங்களூருவில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் கோமதி வேலை பார்த்து வருகிறாராம்.

சறுக்கல்கள்

சறுக்கல்கள்

எத்தனையோ தோல்விகள்.. இழப்புகள்.. வலிகளை கடந்து வந்து இந்த சாதனையை கோமதி படைத்துள்ளார் என்றாலும், "என் மகளை இந்த நிலையில் பார்க்க அவள் அப்பா இல்லையே" என்று கோமதியின் தாயாரின் கண்ணீருக்கு நம்மிடம் பதில் இல்லைதான்!

 
 
 
English summary
Family background of Asian Athletics Championships Gold Medalist Gomathi Marimuthu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X