சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை.. தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வரும் 31-ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தமிழக உயர்கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பொறியியல் கல்லூரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

தமிழகத்தை பொறுத்த வரை 1.75 லட்சம் பொறியியல் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு ஆன்லைன் மூலம் இதுவரை 1,20,000 பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ask for more money from students will take Heavy action.. Warning for private engineering colleges

தமிழகத்தில் உள்ள 509 கல்லூரிகளில், 502 கல்லூரிகள் அண்ணா பல்கலை கழகத்திடம் மாணவர் சேர்க்கைக்கான இடங்களை ஒப்படைத்துள்ளன. இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத்ராம் சர்மா, ஒவ்வொரு கல்லூரிகளிலும் 65 சதவீதம் வரை அரசு இடஒதுக்கீட்டில் அளிக்கப்படுவதாக கூறினார்.

அரசு இடஒதுக்கீட்டில் வழங்கப்படும் இடங்களில் கட்டணம் குறைவாகவே வசூலிக்கப்படும் என்றார். அரசு இடஒதுக்கீட்டில் வரும் மாணவர்களுக்கு குறைவான கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.

நள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே! நள்ளிரவில் விம்மி விம்மி அழுத தமிழிசை... என்ன காரணம்னு பாருங்க மக்களே!

அரசு வழங்கும் இடஒதுக்கீட்டு இடங்கள் ஏராளமாக காலியாக உள்ளதால், மாணவர்கள் முறையாக விண்ணப்பித்து பலன் பெற்று கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

கல்லூரிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் அது குறித்த புகார்களை தெரிவிக்க, கூடுதல் இயக்குநர் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். உயர்கல்வித்துறையின் எச்சரிக்கையையும் மீறி கல்லூரிகளில் அதிக கல்வி கட்டணம் மாணவர்களிடமிருந்து வாங்குவதாக புகார் வந்தால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

English summary
Engineering colleges have been warned that they will be forced students to pay more if they have higher fees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X