சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இடைத்தேர்தல்: பாஜகவிடம் ஆதரவு கேட்பதா? கண்டுகொள்ளாமல் விடுவதா? குழப்பத்தில் அதிமுக

Google Oneindia Tamil News

Recommended Video

    பாஜகவிடம் ஆதரவு கேட்பதா? கண்டுகொள்ளாமல் விடுவதா? குழப்பத்தில் அதிமுக| AIADMK confused support of BJP

    சென்னை: நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவின் ஆதரவை கேட்பதா? அல்லது அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவதா? என்கிற குழப்பத்தில் இருக்கிறதாம் அதிமுக.

    லோக்சபா தேர்தலில் அதிமுக-பாஜக-தேமுதிக-பாமக கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால் ஒரே ஒரு தொகுதியில்தான் அதிமுக மட்டும் ஜெயித்தது.

    Assembly By Elections: AIADMK to seek BJP Support?

    இதனைத் தொடர்ந்து வேலூர் லோக்சபா தொகுதி தேர்தலில் அதிமுக போட்டியிட்டது. ஆனால் கூட்டணியில் பாஜக இருப்பதாக காட்டிக் கொள்ளாமலேயே பிரசாரம் செய்தது. அப்போது முத்தலாக் தடை சட்டம் கொண்டுவரப்பட்டதால் அதிமுக பதுங்கி பிரசாரம் செய்தது என கூறப்பட்டது.

    தற்போது நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு அக்டோபர் 21-ல் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் நாங்குநேரில் பாஜக போட்டியிட விரும்பியது.

    ஆள் மாறாட்ட மோசடி.. அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்ஆள் மாறாட்ட மோசடி.. அனைத்து நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு சிபிசிஐடி போலீசார் கடிதம்

    ஆனால் அதிமுகவோ 2 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்தது. அத்துடன் தேமுதிக, பாமக, தமாகா என கூட்டணி வைத்த கட்சிகளின் தலைவர்களை அதிமுக அமைச்சர்கள் குழு நேரில் சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறது.

    இந்த வரிசையில் பாஜகவிடம் ஆதரவு கேட்பதா? வேண்டாமா? என்கிற குழப்பத்தில் இருக்கிறதாம் அதிமுக.

    English summary
    According to the sources, AIADMK top leaders confused over seeking the support of BJP on Assembly by elections.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X