சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தகிக்கும் தூத்துக்குடி தேர்தல் களம்.. கனிமொழி, தமிழிசை சொத்து மதிப்புகள் இதுதான்

Google Oneindia Tamil News

சென்னை: தூத்துக்குடி லோக்சபா தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் கனிமொழி மற்றும், பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை சவுந்தரராஜன், இருவரது சொத்து மதிப்புகள் தற்போது வெளியாகியுள்ளன.

நேற்றுடன், வேட்புமனுதாக்கல் முடிந்து இன்று வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடந்தது.

லோக்சபா தேர்தலுக்கு தமிழகத்தில் மொத்தம் 1,587 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. 1587 வேட்பு மனுக்களில், 655 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 932 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.

திருப்பரங்குன்றம் உட்பட 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்.18ல் இடைத் தேர்தல் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடிதிருப்பரங்குன்றம் உட்பட 3 சட்டசபை தொகுதிகளுக்கு ஏப்.18ல் இடைத் தேர்தல் இல்லை.. உச்சநீதிமன்றம் அதிரடி

அசையும், அசையா சொத்துக்கள்

அசையும், அசையா சொத்துக்கள்

திமுக வேட்பாளர் கனிமொழி தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: ரூ.21 கோடியே 16 லட்சத்து 57 ஆயிரத்து 370 மதிப்புள்ள அசையும் சொத்துகள் உள்ளன. ரூ.8 கோடியே 92 லட்சத்து 20 ஆயிரத்து 200 மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன.

கனிமொழி கடன்

கனிமொழி கடன்

கனிமொழிக்கு, வங்கிகளில் ரூ.1 கோடியே 92 லட்சத்து 90 ஆயிரத்து 928 ரூபாய் கடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். கனிமொழி, தனது தாய் ராஜாத்தி அம்மாள் பெயரில் ரூ.1கோடியே 27 இலட்சத்து 48 ஆயிரத்து 413 மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

சொத்துக்கள்

சொத்துக்கள்

மற்றொரு ஸ்டார் வேட்பாளரான தமிழிசை சவுந்தரராஜன் தாக்கல் செய்துள்ள சொத்து விவரத்தையும் பார்ப்போம். அசையும் சொத்துக்கள் என்ற வகையில், ரூ.1 கோடியே 50 லட்சத்து 7 ஆயிரத்து 600 மதிப்புள்ள சொத்துக்களும், அசையா சொத்துக்கள் என்ற வகையில் ரூ.50 லட்சம் மதிப்பிலும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

யாருக்கு அரியணை?முடிவு செய்யுமா தமிழ்நாடு.. பரபர கருத்து கணிப்பு

கணவர் சொத்துக்கள்

கணவர் சொத்துக்கள்

தமிழிசை கணவர் சவுந்திரராஜன் பெயரில் ரூ.2 கோடியே 11 இலட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான சொத்துகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் அளவிற்கு கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

English summary
Thoothukudi Loksabha constituency: Here is the assets details of DMK candidate Kanimozhi and BJP candidate Tamilisai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X