சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

24 மணி நேரத்தில் சாதித்த உதயநிதி.. உதயநிதி கோரிக்கையை ஏற்று 'கர்ணன்' படத்தில் அதிரடி மாற்றம்!

Google Oneindia Tamil News

சென்னை: தி.மு.க இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று கர்ணன் படக்குழு கர்ணன் திரைப்படத்தில் ஒரு மாற்றத்தை செய்துள்ளது.

Recommended Video

    சென்னை: உதயநிதியின் பேச்சுக்கு செவிமடுத்த படக்குழு... கர்ணன் பட சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

    அதாவது கொடியன்குளம் கலவரம் 1997- ஆம் ஆண்டு நடைபெற்றதாக கர்ணன் திரைப்படத்தில் காட்டி வந்த நிலையில் தற்போது 1990-களின் பிற்பகுதியில் கொடியன்குளம் கலவரம் நடந்தது போன்று மாற்றப்பட்டுள்ளது.

    கர்ணன் என்னும் காவியம்

    கர்ணன் என்னும் காவியம்

    'பரியேறும் பெருமாள்' வெற்றி பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ராஜிஷா விஜயன், லால், நட்டி நடராஜ், யோகிபாபு உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் கர்ணன். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கொடியன் குளத்தில் நடந்த கலவரத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் வசூல் ரதியாகவும், விமர்சனரீதியாகவும் பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளது.

    பிரபலங்கள் வாழ்த்து மழை

    பிரபலங்கள் வாழ்த்து மழை

    பல்வேறு சினிமா பிரபலங்களும், அரசியல் தலைவர்களும் கர்ணன் திரைப்பட குழுவினருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். இந்த நிலையில் தி.மு.க இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ' கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்படட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்தல் இன்றி எடுக்கப்படட இப்படம் கொண்டாடப்பட வேண்டியது.

    உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

    உதயநிதி ஸ்டாலின் கோரிக்கை

    நண்பர் தனுஷ், அண்ணன் வி கிரியேசன்ஸ் எஸ்.தாணு, இயக்குனர் மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும், வாழ்த்தையும் தெரிவித்தேன். மேலும், 1995ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம், 1997ல் கழக ஆட்சியில் நடந்தது போல் காண்பிக்கப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குனரிடம் சுட்டிக் காட்டினேன். அந்த தவறை இரு தினங்களில் சரி செய்து விடுகிறோம் என உறுதியளித்தனர் நன்றி' என பதிவிட்டு இருந்தார்.

    உதயநிதி கோரிக்கை ஏற்பு

    உதயநிதி கோரிக்கை ஏற்பு

    இந்த நிலையில் உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கையை கர்ணன் படக்குழு ஏற்றுக் கொண்டுள்ளது. அதாவது கொடியன்குளம் கலவரம் 1997- ஆம் ஆண்டு நடைபெற்றதாக கர்ணன் திரைப்படத்தில் காட்டி வந்த நிலையில் தற்போது 1990-களின் பிற்பகுதியில் கொடியன்குளம் கலவரம் நடந்தது போன்று மாற்றப்பட்டுள்ளது. தற்போது தியேட்டர்களில் இந்த மாற்றப்பட்ட காட்சிகளே திரையிடப்பட்டு வருகிறது.

    English summary
    At the request of DMK youth secretary and actor Udayanithi Stalin, the Karnan film crew made a change in the Karnan film
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X