சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நான் கிராமத்து பொண்ணு.. ஊக்க மருந்து பயன்படுத்தவே இல்லை.. அடிச்சு சொல்றேன்.. கோமதி மாரியப்பன்

ஊக்கமருந்து பயன்படுத்தவே இல்லை என்று கோமதி மாரியப்பன் கூறியுள்ளார்

Google Oneindia Tamil News

Recommended Video

    Gomathi Marimuthu : ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிய கோமதி மாரிமுத்து விளக்கம்- வீடியோ

    சென்னை: "நான் ஒரு கிராமத்துல பிறந்து வளர்ந்தவள்.. கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டுதான் ஆசிய போட்டியில் ஜெயிச்சேன். அதனால 100 சதவீதம் உறுதியா சொல்வேன், நான் எந்த ஊக்கமருந்தும் பயன்படுத்தவில்லை" என்று கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார்.

    எதையுமே சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் மனோபாவம், வெற்றி பெற்றவர்களையும் விட்டுவைப்பதில்லை. இதற்கு வீராங்கனைகளும் விதிவிலக்கல்ல.

    நம்ம ஊரை சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்க பதக்கம் பெற்றதுமே அப்படி பூரித்து போய்விட்டோம். ஏதோ ஒரு கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த ஒரு சாதாரண பெண் கடின உழைப்பால் பயிற்சி பெற்று, இந்த அளவுக்கு முன்னேறி உள்ளாரே என்று வியந்து போனோம்.

    சூப்பர் நியூஸ்.. எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு சூப்பர் நியூஸ்.. எலக்ட்ரிக் கார், பைக் வாங்குவோருக்கு ஜாக்பாட்.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு

    கோமதி

    கோமதி

    ஆனால் யார் கண் பட்டுதோ தெரியவில்லை.. இந்த வெற்றியையும் சந்தேகிக்கிறது. கோமதி ஊக்கமருந்து எடுத்து கொண்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுசம்பந்தமான விசாரணை, வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில், திருச்சியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் கோமதிக்கு பைக் தரப்பட்டு கவுரவிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோமதி மாரிமுத்து:

    தடகள போட்டி

    தடகள போட்டி

    "நான் ஆரம்பத்தில் பயிற்சி எடுத்த காலத்துல என்கிட்ட டூவீலர்கூட இல்லை. ஆனா எனக்கு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் இப்படி டூ வீலர் தந்ததுக்கு நன்றி சொல்லிக்கிறேன். ஆசிய தடகள போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தினேன்னு என் மேல ஒரு குற்றச்சாட்டு சொல்றாங்க. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். கடுமையான பயிற்சி எடுத்துக்கிட்டுதான் ஆசிய போட்டியில் ஜெயிச்சேன்.

    ரத்த பரிசோதனை

    ரத்த பரிசோதனை

    100 சதவீதம் உறுதியா சொல்வேன், நான் ஊக்க மருந்து பயன்படுத்தவில்லை. இது சம்பந்தமா ‘பி சாம்பிள்' டெஸ்ட் முடிவு ஆவணம் இன்னும் தரவில்லை. அது வந்ததும் என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் உண்மை இல்லைன்னு நிரூபிப்பேன். என் மேல இப்படி ஒரு குற்றச்சாட்டை சொன்னதும், தனிப்பட்ட முறையில் என் ரத்த மாதிரிகளை நானே பரிசோதனை செய்து பார்த்தேன். ஆனால் அந்த ரிப்போர்ட்டில் ஊக்கமருந்து பயன்படுத்தியதுபோல எந்த ஆதாரமும் வரவில்லை.

    இது உறுதி

    இது உறுதி

    என் மேல சொல்ற குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டிலும் கேஸ் போட்டுள்ளேன். இந்த குற்றச்சாட்டில் இருந்து விடுபட்டு வருகிற செப்டம்பர் மாதம் கத்தாரில் நடக்க உள்ள உலக தடகள போட்டியில் பங்கேற்பேன். எனக்கு நம்பிக்கை இருக்கு. ஒலிம்பிக் போட்டியிலும் பதக்கம் பெற்று நம் நாட்டுக்கு பெருமை சேர்ப்பேன்" என்றார். கோமதியின் உறுதியான பேச்சும், கடின உழைப்பும் அவருக்கு நிச்சயம் துணை நிற்கும் என்று நாமும் நம்புவோம்.

    English summary
    Sports woman Gomathy Marimuthu refused to using banned substance issue in Asian Games
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X